Wednesday, May 26, 2010

குஜராத் பூகம்பம்.

என்ன மேட்டரே ரொம்ப பழசா இருக்கே என்று பார்க்கிறீர்களா,நேற்று கூகிளிடம் ஏதோ தேடப்போய் இந்த பக்கம் சிக்கியது.படிக்க படிக்கப்படிக்க தார்மீக கோபங்கள் எங்கெங்கோ பாய்ந்தாலும் இந்த மாதிரி பொறியாளர்கள் மற்றும் குத்தகைத்தாரர்கள் இருக்கும் வரை இது தீராத பிரச்சனை தான்.

டெல்லியில் மெட்ரோ கான்கிரீட் Corbel விழுந்ததும் இதே மாதிரியான ஆனால் கம்பியால் ஏற்பட்ட பிரச்சனை தான்.இதெல்லாம் படிக்கப்படிக்க அடுக்கு மாடி கட்டிடம் அல்லது கடை தொகுதிக்கு உள்ளே போகும் வாசலில் இருக்கும் பிள்ளையாரை வேண்டிக்கொண்டு தான் போகனும் என்று நினைக்கிறேன்.போனா திரும்பி வருவதும் வராததும் அவர் கையில் தான் இருக்கு.

வெளி நாட்டில் ஏன் பல கட்டிடங்கள் விழவில்லையா?இந்தியர்களை மட்டும் குறை சொல்லும் கூட்டத்தில் நீங்களும் ஒருவர் என்று என்னை சுட்டிக்காட்ட விரும்பினால்...கீழே உள்ள சுட்டிக்கு போய் முழுவதுமாக படித்துவிட்டு சொல்லவும்.சுருக்கமாக சொன்னால் பொறியாளர் படிப்புக்கு படித்துவிட்டு ஆரம்ப கல்வி அறிவு கூட இல்லாதவர்கள் கட்டிய கட்டிடங்கள் தான் இந்த மாதிரி பாதிக்கப்பட்டுள்ளது என்பதை சென்னை IIT குழுமம் ஆய்வு செய்து சொல்லியுள்ளது.

படித்துவிட்டு தலையில் கை வைத்துக்கொள்ளுங்கள்-குஜராத் பூகம்பம்

பொறியாளர்கள் தவறால் உயிரிழந்த பல ஆன்மாக்கள் சாந்தி அடையட்டும்

12 comments:

geethappriyan said...

அருமையான விளாசல்

வடுவூர் குமார் said...

என்ன பண்ணுவது கார்த்திகேயன்,புலம்ப மட்டும் தான் முடியுது.

சுடுதண்ணி said...

அவ்ளோ சீக்கிரம் திருந்திர மாட்டானுங்க போலருக்கு :(

Thangavel Manickadevar said...

குமார் படித்ததும் பதறி விட்டேன். நல்லவேளையாக உங்கள் பிளாக்கை அறிமுகப்படுத்திய அறிவே தெய்வம் அவர்களுக்கு நன்றி. மிகவும் சுவாரசியமாய் இருக்கிறது உங்கள் பிளாக். வாழ்த்துக்கள்

வடுவூர் குமார் said...

வாங்க சுடுதண்ணி-எங்கோ ஏதோ நமது நாட்டில் தவறான வழியில் போய்கொண்டிருக்கிறது அதன் எதிர்காலத்தை நினைத்தால் பயமாக இருக்கிறது.திருத்துவதற்கான ஆளையும் கானோம் திருத்துவதற்கான வழியையும் கானோம்.

வடுவூர் குமார் said...

மிக்க நன்றி தங்கவேல் மாணிக்கம். அறிவே தெய்வத்துக்கும் என் நன்றிகள்.

திவாண்ணா said...

மெதுவா அப்புறம் படிச்சுட்டு வரேன்!

வடுவூர் குமார் said...

வாங்க‌ வாங்க‌.

sury siva said...

அடுக்கு மாடி கட்டிடம் கட்டும் பல ரியல் எஸ்டேட் ப்ரமோட்டர்கள் தங்களது கான்க்ரீட்கட்டிடங்களை பூகம்பம் அதிர்வுகளிலிருந்து காத்துக்கொள்ளுமாறு டிஸைன் செய்கிறார்களா இல்லையா, என்றும் மேலும் அனுமதி தரும்
மெட்ரோ டெவெலபன்ட் அதாரிடி ஒப்புக்கொள்ளப்பட்ட டிஸைன் படி தான் கட்டுகிறார்களா என்றும்
வாங்குபவர்கள் சிந்திப்பது அரிதே. பார்க்கப்போனால், இது போன்றவற்றில் போதிய விழிப்புணர்வு ஏற்படவில்லை.
தற்பொழுது சென்னை நகரம் ஜோன் 2 லிருந்து 5 ஆக கணிக்கப்பட்டுள்ளது. இதுவரை கட்டிய கட்டிடங்கள் பூகம்ப‌
அதிர்வுகளைத் தாங்கும் திறன் இல்லையெனின் மேற்கொண்டு செய்யவேண்டியது என்ன ? என்பது பற்றியும்
உங்களைப் போன்ற சிவில் எஞ்சினியர்களின் விழிப்புணர்வு இயக்கம் துவங்கவேண்டிய நேரம் வந்துவிட்டது.

சுப்பு ரத்தினம்.

வடுவூர் குமார் said...

வாங்க சூரி சார்
கட்டின வீட்டை ஒன்றும் செய்ய முடியாது - பூகம்பம் வரும் வரை காத்திருக்க வேண்டியது தான்.
புற்றீசல் மாதிரி வகை தொகையில்லாமல் யாருடைய உண்மையான கட்டுப்பாடு இல்லாமல் கட்ட அனுமதித்ததே மிகப்பெரிய தவறு அதோடில்லாமல் இப்படி கட்டுபவர்களை மெற்பார்வை செய்ய தகுந்த ஆட்களை நியமிப்பது அவர்களை எப்படி கட்டுக்குள் கொண்டுவருவது என்பது போது நியதியே கண்ணில் படவில்லை.வரைப்படத்தில் ஒரு படம் கட்டுவது வேறு மாதிரி அதனால் ஏதேனும் விபத்து ஏற்பட்டால் பொறியாளர் எளிதாக குத்தகைக்காரர் மீது பழி போட்டு தப்பிவிடலாம் அல்லது நான் கொடுத்த டிசைன் படி கம்பி போடவில்லை என்று பழியை யார் மீதாவது போட்டு தப்பிவிடலாம்.இப்படி நிறைய வழிகளை வேண்டுமென்றே அடைக்காமல் விட்டுவைக்கிறார்களோ என்று சந்தேகம் வருகிறது.

சிங்கை வழி முறையை பாருங்கள்.வீடாக இருந்தாலும் கடை தொகுதியாக இருந்தாலும் அங்கிகாரம் பெற்ற மேற்பார்வையாளர் கையெழுத்து போட்டு கிளியர் பண்ணனும்,அவர் எப்படி பண்ணுவார் தகுதியான பொறியாளர் கையெழுத்து போட்டிருக்கும் வரைபடத்தை வைத்துக்கொண்டு செக் செய்து கையெழுத்து போடுவார்,மேற்பார்வையாளர் கையெழுத்தை வைத்து அவர் மேல் இருக்கும் ரெசிடென்ட் இஞினியர் கையெழுத்து போடுவார்.இதெல்லாம் முறையாக நடந்த பிறகு அந்த கட்டிடத்துக்கு TOP (Temporary Occupation Certificate) கிடைக்கும் அதன் பிறகு அதனுள் பொதுமக்கள் போக முடியும்.இம்மாதிரியான நடைமுறை நம்மூரில் அதுவும் மக்கள் வசிக்கும் வீடுகளுக்கு இருப்பதாக இதுவரை கண்ணில் படவில்லை.கஷ்டப்பட்டு சம்பாதிக்கும் பல மக்களின் பணம் மேஸ்திரிகளின் மேற்பார்வையில் கட்டப்படும் வீடுகளுக்கு கொடுக்கப்படுகிறது.

சொல்ல நிறைய இருக்கு ஆனால் மாற்றம் ஏற்படும் நாள் வெகு தொலைவில் இருக்கிறது.

வெங்கட்ராமன் said...

பொறியாளர்கள் தவறால் உயிரிழந்த பல ஆன்மாக்கள் சாந்தி அடையட்டும்

பொறியாளர்கள் தவறு என்று மட்டும் சொல்ல முடியாது, முதலாளிகளின் லாப நோக்கம், வேலையை எடுத்துச் செய்பவர்களின் அலட்சியம், EMI, தோற்றத்தை மட்டுமே கவனமாக கொள்ளும் மக்கள் என்று பல காரணிகள் இருப்பதாக நினைக்கிறேன்.

பணத்தை மட்டுமே குறி வைத்து செய்யும் வேலைகளில் Perfection மற்றும் Quality ஐ எதிர்பார்க்கமுடியாது.

வடுவூர் குமார் said...

வாங்க‌ வெங்க‌ட்ராம‌ன்
அவ‌ர் ஒருவ‌ரை ம‌ட்டும் குறை சொல்ல‌முடியாது தான் ஆனால் ப‌டித்துவிட்டு அதை முறையாக‌ செய்யாம‌ல் ஆட்க‌ள் இருக்கும் ப‌ட்ச‌த்தில் ப‌டிக்காத‌ வேலை ஆட்க‌ளை குறை சொல்லி பிர‌யோஜ‌ன‌ம் இல்லை.
கடைசியாக‌ சொன்னீங்க‌ளே அது பாயிண்ட்.ம‌க்க‌ள் த‌ங்குகிற‌ வீட்டை எவ்வித‌ முறையுட‌ன் செய்ய‌வேண்டும் என்ற‌ நிய‌தி இருந்தும் அதை மேற்பார்வை செய்யாம‌ல் ஏனோ தானோ என்று விட்டுவிட்ட‌ அர‌சாங்க‌த்தை என்ன‌ சொல்வ‌து??
இது எல்லாவ‌ற்றையும் ச‌ரி செய்ய‌லாம் என்று யோசிக்க‌ ஆர‌ம்பித்தால் அது ஒரு இடியாப்ப‌ சிக்க‌லாக‌ ந‌ம் முன்னே வ‌ந்து விழும்.மாற்ற‌ முடியாது ஆனால் நானே க‌ளமிற‌ங்கும் போது இவைக‌ளையாவ‌து க‌ளை எடுக்க‌வேண்டும் என்று தோனுகிற‌து.