Sunday, May 02, 2010

400 கி.மீட்டர் பயணம்.

மே 1 & 2 விடுமுறை வருகிறது எங்காவது போகலாமா என்று மச்சினர் சில தினங்களுக்கு முன்பு கேட்டிருந்தாலும் முடிவெடுக்கமுடியாமால் அந்த சமயத்தில் மனதுக்கு தோன்றிய இடத்தை சொல்லி அதில் திருவண்ணாமலையை தேர்ந்தெடுத்தோம்.கூகிளில் அவ்விடத்துக்கு எப்படி போகனும்என்று தேடிய போது சென்னை---மதுராந்தகம்--திண்டிவனம்--திருவண்ணாமலை என்று போட்டிருந்தது,பயண தூரம் 182 கி.மீட்டர் என்றும் 3.86 மணி நேரம் ஆகும் என்று விபரங்கள் தெளிவாக இருந்தன.இன்னும் தெளிவாக தெரிந்துகொள்ள கூகிள் எர்த்தில் திண்டிவனம் மேம்பாலத்தில் இருந்து எப்படி போகனும் என்ற விபரங்களை வண்டி செலுத்தப்போகும் மச்சினருக்கு காண்பித்தேன்.

மதிய சாப்பாடுக்கு பிறகு சுமார் 12.45 க்கு கிளம்பி வடபழனியை விட்டு ஒருவழியாக நீந்தி தாம்பரம் வரவே 45 நிமிடங்களுக்கு மேலாக ஆகிவிட்டிருந்தது.இது இப்படி இருந்தாலும் சாலையில் நடைபெரும் சாகச நிகழ்சிகள் இந்த குறையை போக்கி சந்தோஷத்துடன் கூடிய அதிர்ச்சிகளையும் தந்தது.கீழே உள்ள படத்தில் பாருங்கள் ஆபீஸ் ரோலிங் சேர் பைக்கில் பயணிக்கிறது.ஒரே Lane க்குள் இருவண்டிகள் பயணிக்கும் திறமையா அல்லது அனுசரனையா என்று தெரியாமல் ஒரு வழியாக திண்டிவனம் அடைந்தோம்.ஊருக்கு தகுந்த மாதிரி சாலைகள் என்ற நியதி போலும்,முக்கிய சாலைகள் தோண்டப்பட்டு வண்டிகளின் தரத்தை சோதனை செய்யும் களமாக இருக்கிறது.திண்டிவனத்தில் இருந்து திருவண்ணாமலைக்கு இரு லேன் வழித்தடம் அதனால் வாகனங்களின் வேகம் மிகவும் மட்டுப்படுத்தப்படுகிறது.திருவண்ணாமலை அடைவதற்கு முன்பு செஞ்சி கோட்டையை கடக்கவேண்டும்.இருமலைகளை இணைக்கும் ஒரு சுவர் சீனப்பெருஞ்சுவர் போல் இருக்கு.சாலை வழித்தடத்துக்காக அதை உடைத்து வழி ஏற்படுத்தியிருக்கிறார்கள்.நடந்தே மேலே போகனும் என்பதாலும் வெய்யிலின் கடுமை காரணமாகவும் தூரத்தில் இருந்து படம் எடுப்பதோடு நிறுத்திக்கொண்டு பயணத்தை தொடர்ந்தோம்.

பல சுற்றுலா தளங்களை அடைய சரியான வழிகாட்டி இல்லாதது சாலைகளில் பயணிப்பவர்களுக்கு இடையூராக இருக்கிறது.அரசாங்க வருவாயை பெருக்க பல சுற்றுலா தளங்கள் இருந்தும் அதனை சரியாக பராமரிக்காமல் இருக்கிறமோ என்று தோனுகிறது.இந்த மாதிரி இடங்களில் தமிழோடு கூடிய ஆங்கில விபரங்கள் கட்டாயப்படுத்த வேண்டும்.இங்கு தமிழை மட்டும் உபயோகிப்பது அவ்வளவு நல்லதல்ல.

திருவண்ணாமலையிலும் பல விபர பலகைகள் சிரிதாகவோ அல்லது கண்ணில் படாத இடத்திலோ வைத்து புதியவர்களை திண்டாடவைக்கிறார்கள்.இங்கு என்னனென்ன பார்க்கவேண்டும் என்று பட்டியல் போடும் போது ஞாபகம் வந்த ஒரே வலைப்பதிவு நம் சுவாமி ஓம்காரருடையது தான்.தேவையான விபரங்களை எடுத்துக்கொண்டுஅதனை வைத்து சில இடங்களுக்கு போனோம்.அங்கு எடுத்த சில படங்கள்.... கீழே.

பிராதனகோபுரத்தின் வாயிலின் இருபுற சுவற்றில் உள்ள சிற்பங்கள்.
இந்த அம்மன் சன்னிதியில் ஒரு தூணில் வித்தியாசமான ஒரு சிற்பத்தை பார்த்தேன் ஆதாவது அந்தக்கால DD யில் வரும் சுழலும் பந்து போன்றது,இன்னும் இலகுவாக சொல்லனும் என்றால் கொரிய சின்னம் எப்படி இருக்குமோ அப்படியே இருந்தது- வண்ணம் இல்லாமல்.
கீழே உள்ள படம் நடைபாதையில் இருந்தது.பல பாஷைகளின் கலவை போல் இருக்கிறது.கோவில் தரிசனம் முடித்த பிறகு ரமனாஸ்ரமம் போனோம்.வாசலிலேயே சில இஸ்லாமியர்களை கண்டது ஆச்சரியமாக இருந்தது.மிகப்பெரிய விளம்பர பலகையில் அங்குள்ள கட்டிட விபரங்களை கொடுத்துள்ளதால் பல கட்டிட விபரங்கள் வாசலில் எழுதப்படவில்லை.நிர்வாண அறைக்கும் குளியறறை மட்டும் விதிவிலக்கு.எங்கெங்கு காணினும் பலவித மயில்கள் அங்கும் இங்கும் போய்கொண்டிருந்தது.அசாதரண அமைதி ஒரு சில இடங்களில்.

திரும்ப வரும் போது திண்டிவனத்தில் இருந்து பஞ்சவடி போகலாம் என்று நினைத்து பாண்டிச்சேரி சாலையில் போனோம் பொன்னோம் போய்க்கொண்டே இருந்தோம்.இருவழிச்சாலையை நான்கு வழிச்சாலையாக மேம்படுத்திக்கொண்டிருந்தார்கள்.அறிவிப்பு பலகை எதுவும் இல்லாத்தாலும் மணி 9 மணியாகிவிட்டதாலும் அப்படியே திரும்ப சென்னை வந்த போது இரவு மணி 11.15 ஆனது.

4 comments:

 1. படங்கள அழகா இருக்கு, விவரித்த முறையும் அழகு .

  ReplyDelete
 2. நன்றி ஜெய்லானி.

  ReplyDelete
 3. வடுவூர் குமார் நீங்க இப்ப எங்க இருக்கீங்க!

  கோவில் படங்கள் ரொம்ப அழகா இருக்கு.. அங்கே செல்ல வேண்டும் என்ற ஆசையை மேலும் அதிகப்படுத்துகிறது.

  ReplyDelete
 4. விடுமுறையில் சென்னையில் இருக்கேன் கிரி.

  ReplyDelete

ஏதாவது சொல்ல விரும்புகிறீர்களா?