Sunday, August 02, 2009

புலாவ் உபின்

என்ன தலைப்பே ஒரு மாதிரி இருக்கு என்று பார்க்கிறீர்களா? வேறு ஒன்றும் இல்லை இது உபின் என்கிற தீவு,சிங்கப்பூருக்கு சொந்தமானது அதை கொஞ்சம் கொஞ்சமாக சுற்றுலா தளமாக்கி வருகிறார்கள்.

எங்கள் நிறுவனம் அவ்வப்போது இந்த மாதிரி சுற்றுலா போட்டு மக்களை வேலை டென்ஷனில் இருந்து கொஞ்சம் வெளியே கொண்டு வர அழைத்துப்போவார்கள்.இந்த தடவை நான் இங்கு இருக்க நேரிட்டதால் ”வருகிறேன்” என்று சொல்லியிருந்தேன்.காலை அலுவலக வாசலில் இருந்து பேருந்து சற்று தாமதமாக கிளம்பினாலும் சாங்கி(இடப்பெயர்) படகுத்துறைக்கு சுமார் 9 மணிக்கு போய் சேர்ந்தோம்.அங்கிருந்து படகு எடுத்து போக வேண்டும். நாங்கள் மொத்தம் 30 பேர் என்பதால் ஒவ்வொரு படகிலும் 12 (அதிக பட்ச அளவு) பேராக கிளம்பி போனோம்.சாங்கியில் இருந்து 15 நிமிடங்களுக்குள் புலாவ் உபினுக்கு போய்விடலாம்.

சாங்கி படகுதுறை முனையம்.

Changi Ferry Point

சிங்கையில் இருந்து புலாவ் உபின் தீவு.

DSC00509

கடல் அவ்வளவு ஆர்பரிப்பு இல்லாத்தால் படகில் போகிறோம் என்ற உணர்வே இல்லாமல் போய் சேர்ந்தோம்.மற்றவர்களின் வருகைக்காக காத்திருந்தோம்,வந்ததும் அங்குள்ள தகவல் நிலையத்தில் பொதுவான விபரங்களை சொன்னார்கள்.இந்த தீவை சுற்றி வர கால நடையை விட மிதிவண்டி தான் சரியான தேர்வு என்பதால் அங்கு பல கடைகளை காண முடிந்தது.குடும்ப அளவுக்கு தகுந்த மாதிரி மிதிவண்டி கிடைக்கிறது.சைக்கிள் கிடைத்ததும் குழு "தலை" அங்கிருந்து எப்படி போக வேண்டும் என்று தகவலை சொன்னவுடன் நானும் என் நண்பன் அவர் குடும்பமும் சேர்ந்து கிளம்பினோம்.

மேட்டில் சைக்கிள் மிதிப்பது தான் கொஞ்சம் கஷ்டமாக இருந்தது அவ்வப்போது Gear மாற்றி ஒரு மாதிரி சமாளித்து போனோம்முடியாத இடத்தில் தயங்காமல் கீழிறங்கி தள்ளிக்கொண்டு போய் பிறகு மிதித்து போனோம்.

வெய்யில் அவ்வளவு இல்லாத்தால் சீக்கிரம் களைப்படாமல் போனோம்.வழி எங்கும் மரங்கள் என்று சூழ்நிலை அட்டகாசமாக இருந்தது.

DSC00512

பாதையின் இருமருங்கிலும் மரங்கள்.

DSC00514

தீவிலும் தனிவீடு அதன் மின்சாரத்துக்கு Solar Panels.

DSC00513

என்னுடன் வந்த குழுவினரின் ஒரு பகுதி.

DSC00511

மாங்குரோவ் காடுகள் கூட இருக்கு ஆனால் இப்பகுதில் ஏதோ ஒரு கெமிகல் வாசம் மூக்கை துளைத்தது.

P1010044

நிப்பா என்ற ஒரு மலர் - வித்தியாசமாக இருந்தது.

P1010043

இன்னும் மிக அருகில்

P1010042


இன்னும் நிறைய படங்கள் இருப்பதால் இப்பதிவின் மீதி அடுத்த பதிவில் வரும்.

3 comments:

வடுவூர் குமார் said...

கிரி உங்களுக்காக டெம்பிளேட் மாற்றியிருக்கேன்,சரியாக வருகிறதா என்று சொல்லுங்கள்.
டெம்பிளேட் மாற்றுவதற்கு முன்பு சேமிக்க மறந்து..எல்லாம் போய் பிறகு எங்கிருந்தோ பழைய கோப்பை உருவி செய்துள்ளேன்.

சே.வேங்கடசுப்ரமணியன் said...

இடமும் படமும் அருமை.இன்னும் நிறைய படங்கள் கொடுங்கள்.

வடுவூர் குமார் said...

சீக்கிரம் ஏற்றுகிறேன் வேங்கட சுப்பிரமணியன்.நன்றி.