போன ஞாயிறு எப்போதும் போவது போல் Choa Chu Kang நூலகத்துக்கு போய் தமிழ் நூல்கள் இருக்கும் இடத்தில் அப்படியே தேடிக்கொண்டிருக்கும் போது நமது பதிவர்கள் இருவர் புத்தகங்கள் காண கிடைத்தது.
ஒன்று நமது பதிவர் உலகத்தில் “தல” என்றழைக்கப்படும் பால பாரதியின் “அவன் - அது= அவள்”, இரண்டாவது டி பி ஆர் என்றழைக்கப்படும் திரு ஜோசப் ஐயாவின் ”சந்தோஷமாக கடன் வாங்குகள்” என்ற புத்தகம். இவ்விரண்டு புத்தகங்களும் நான் எதிர் பார்க்காமல் கிடைத்தது.
பல பதிவுகள் இவ்விரு புத்தகங்களை அலசிவிட்டதால் அதைப் பற்றி திரும்பவும் சொல்லப்போவதில்லை.
முதல் புத்தகம் என்னை மாதிரி 45 வயதை கடந்தவர்களுக்கே இதுவரை புரிபடாத விஷயங்களை புரியவைத்தன.நல்ல எழுத்து நடை இன்னும் மிளிர நிறைய வாய்ப்புகள் இருக்கிறது.
இரண்டாவது புத்தகத்தை படித்துவிட்டு தேவையானவற்றை கையில் வைத்துக்கொண்டு பேங்குக்கு போனால் 90% லோன் கிடைக்கும் என்று நினைக்கிறேன்.பலதரப்பட்ட மக்களை மனதில் வைத்து அனைவருக்கும் பயனளிக்கும் படி கொடுத்துள்ளார்.
2 comments:
ரெண்டையும் வாங்கி படுச்சுப் பாக்குறேன்...! நன்றிங்க தோழரே...!!
படிக்க வேண்டிய புத்தகங்கள்,கட்டாயமாக வாங்கி படிங்க! லவ்டேல் மேடி.நன்றி.
Post a Comment