Wednesday, August 12, 2009

எப்படி இதெல்லாம் ...இவர்களால்??

கொஞ்ச வருடங்களுக்கு முன்ன்னால் உலகத்தில் 3 வது பெரிய போர் ஏற்பட்டால் அது குடிநீருக்காகத்தான் என்று ஆரூடம் சொன்னார்கள், அது இன்றளவிலும் சரியாகத்தான் இருந்தாலும் ஒரு நாட்டின் குடி நீர் தேவை எப்படி நிர்வகித்து முறைபடுத்துகிறார்கள் என்பதை கீழ் கண்ட சுட்டியை சொடுக்கி பாருங்கள்.

மேலிருந்து பார்த்தால் மற்ற நாடுகளுடன் ஒப்பிடுகையில் ஒரு புள்ளி தான் சிங்கப்பூர் ஆனால் சுதந்திரம் பெற்ற நாளில் இருந்து பலவற்றுக்கும் அடுத்த நாட்டை நம்மியிருக்க வேண்டிய கட்டாயம் அப்போது ஆனால் இன்று நிலமை வேறு.உதாரணத்துக்கு குடி நீர் .மலேசிய வழங்க வேண்டும் அதை சிங்கை குடிநீராக மாற்றிக்கொள்ள வேண்டும் அப்படி மாற்றிய குடி நீரை ஒரு அளவு மலேசியா வாங்கிக்கொள்ளலாம் என்ற ஒப்பந்தத்தில் 2061 ஆண்டு வரை இரு நாடுகளும் கையொப்பம் இட்டிருந்தது.

இன்னும் 50 ஆண்டுகள் இருக்கின்றதே என்று சிங்கை அரசாங்கம் மெத்தனமாக இல்லாமல் தன் தேவைக்கு என்னென்ன செய்யலாம் என்று மிகப்பெரிய திட்டத்தை வரைந்து அதை வெற்றிகரமாக நிறைவேற்றி உலக நாடுகளை ஆச்சரியப்பட வைத்துள்ளது.

ஒரு சின்ன உதாரணத்துக்கு .... வீணாக போய்கொண்டிருந்த கழிவு நீரை எப்படி சுத்தப்படுத்தி அதை மறு சுழற்சி செய்கிறார்கள் என்று பாருங்கள்.இது முழு சிங்கப்பூர் நீளத்துக்கும் செய்திருக்கிறார்கள்.

இங்கே சொடுக்குங்கள்

HATS OFF SINGAPORE.
இப்பக்கத்தை ஒரு மாதத்திற்கு முன்பு அனுப்பிய என் நண்பனை உங்கள் சார்பாக வாழ்த்துகிறேன்.

போன மாதத்தில் ரமேஷ் என்ற பதிவர் தன் மேன்ஷனில் நீருடன் கழிவு நீரும் சேர்ந்து வருவதை எதிர்க்க எப்படிப் பட்ட போராட்டதையெல்லாம் மேற்கொண்டார் என்ற பதிவை படிக்கும் இப்பக்கம் தான் ஞாபகம் வந்தது.நம்முடைய பெரு நகரங்களில் அத்தியாவசமான கட்டமைப்புகள் இல்லை.இப்படியே போய்கொண்டிருந்தால் எப்போதுமே செய்ய முடியாமல் போக வாய்ப்புள்ளது.மேலே உள்ள சுட்டியில் சொன்ன மாதிரி நம்நாட்டில் இருந்திருந்தால் ரமேஷ் போன்றவர்கள் இந்த அளவுக்கு பாடுபடவேண்டாம்.

நம் தலைவர்கள்/அரசாங்கம் சீக்கிரம் முழித்தால் எல்லோருக்கும் நல்லது.

6 comments:

 1. கவர்ன்மெண்ட் எவ்ளோ செய்யுதுங்கறதை விட எப்படி செய்யுதுங்கறதை விளக்கமா சொல்லியிருக்கறதை வைச்சே தெரிஞ்சுகிடலாம் மக்கள் மேல அக்கறை நாட்டின் மேல் இருக்கும் அக்கறை பற்றி !


  ரியலி சூப்பரா செஞ்சுருக்காங்க சிங்கை கவர்ன்மெண்ட் !

  வாழ்த்துக்கள் - அங்கு இருப்பதற்கு :)

  ReplyDelete
 2. வாங்க ஆயில்யன்.
  அரசாங்கம் என்பதற்க்கு உண்மையான விளக்கம் இவர்களிடம் இருந்து கற்றுக்கொள்ளலாம்.

  ReplyDelete
 3. தங்கள் வலைப்பூவிற்கு Interesting Blog என்கிற விருதை பரிந்துரை செய்திருக்கிறேன்.

  http://nirmal-kabir.blogspot.com/2009/08/blog-post.htm

  ஏற்று மகிழ்விக்குமாறு கேட்டுக் கொள்கிறேன். நன்றி

  ReplyDelete
 4. நன்றி கபீரன்பன்.

  ReplyDelete
 5. //
  நம் தலைவர்கள்/அரசாங்கம் சீக்கிரம் முழித்தால் எல்லோருக்கும் நல்லது.//

  உண்மையானத் தூக்கமுன்னாத்தானே முழிக்க முடியும்? எல்லாம் பொய்த்தூக்கம்.

  மயிலே மயிலேன்னா இறகு போடாதாம். நம்ம தேசியப்பறவையும் மயிலுதான்.

  அஞ்சு வருசம் பதவிக்கு வந்தமா...தன் குடும்பத்துக்கு ஒரு பத்து தலைமுறைக்காவது வரும்படி சுருட்டுனமா..... அடுத்து இன்னும் அஞ்சு அஞ்சு வருசத்துக்கு இங்கேயே கேம்ப் அடிக்க ஏற்பாடு பண்ணினமா..... இப்படி ஏகப்பட்ட வேலைகள் 'தலை'களுக்குத் தலைக்குமேலே கிடக்கு(-:

  ReplyDelete
 6. அப்பாடியோவ்! தலைகளுக்கு மேல் இவ்வளவு தலை இருக்கா!!
  அடுத்து ஒரு நகர் பட்ம் இருக்கு அதை பார்த்திட்டு சொல்லுங்க.கூடிய விரைவில் ஏற்றுகிறேன்.

  ReplyDelete

ஏதாவது சொல்ல விரும்புகிறீர்களா?