Sunday, August 09, 2009

44 வயது சிங்கைக்கு

முப்பதாம் வயதில் இருக்கும் போது சிங்கைகு வந்தது,கனவு போல் 14 வருடங்கள் ஓடிவிட்டது.சிங்கை இன்று தனது 44 லாவது தேசிய நாளை கொண்டாடுகிறது.நாளுக்கு நாள் மாற்றங்கள்,எண்ணங்களில் மாற்றம், தேசிய தலைமையில் மாற்றம்......மாற்றம் மாற்றம் ஒன்று தான் கொள்கை என்ற அளவில் தினமும் தேசத்ததை ஓட்டி ஒரு குட்டியூண்டு நாடு உலகத்தையே எட்டி பார்க வைத்துள்ளது.எட்டிப்பார்க்க வைத்ததற்கு உதாராணமாக பல தேசத்துக்கு மக்களை MRT என்று சொல்லப்படுகிற ரயிலில் வேலைக்கு சென்று வருவதை சமீபத்தில் பார்க்கமுடிகிறது.

தேசிய நாளை ஒவ்வொரு முறையும் பிரமாதப்படுத்திவிடுகிறார்கள்.கடலில் மிதக்கும் மேடையை இதற்கு என்று ஒதுக்கிவிட்டுவிட்டார்கள் போலும்.இங்கு சென்று பார்க்க குலுக்கல் முறையில் நுழைவுச்சீட்டு கொடுக்கப்படுகிறது.நிகழ்ச்சியின் கடைசியில் நடக்கும் வானவேடிக்கை மட்டும் காண பலர் அங்கு கூடுவது அந்நிகழ்ச்சியின் பிரபலத்தை காட்டுகிறது.

ஒவ்வொரு தொகுதியிலும் இந்த மாதிரி போஸ்டர் வைத்து அசத்துகிறார்கள்.





இது மக்கள் தங்கள் கட்டிடங்களை அலங்கரித்துள்ளதின் மூலம் மக்களின் உணர்வுப்பூர்வமான பங்களிப்பு தெரிகிறது.



இந்த 14 ஆண்டுகளில் சிங்கைக்கு வந்த நெருக்கடிகள் மூலம் அதை எப்படி கடப்பது என்ற இவர்கள் நடவடிக்கைகள் ஆச்சரியப்படவைக்கின்றன.கற்றுக்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் அதுவும் அதை பொதுவில் விவாதிக்கும் போது மக்களின் பங்களிப்பை பெற்று இந்த கட்டிடம் மாதிரி உயர்ந்து நிற்கின்றது.



என்ன தான் பிரச்சனை வந்தாலும் முடிவில் இருக்கும் வெளிச்சததை நோக்கி வீறு நடை போடும் சிங்கப்பூரை நாமும் வாழ்த்துவோம்.

8 comments:

கோவி.கண்ணன் said...

படங்கள் மிரட்டலாக இருக்குது அண்ணே !

வடுவூர் குமார் said...

நன்றி கோவியாரே.

துளசி கோபால் said...

ஆஹா.....உங்களுக்கும் சிங்கைக்கும் ஒரே வயசு!!!!

சட்டம், ஒழுங்கு அனைவருக்கும் சமம் என்ற நிலைப்பாடு இருப்பதால் அவர்களால் சாதிக்க முடிகிறது.

அங்கே அரசியல்வாதிகளுக்கும் நாட்டின்நலம் முக்கியமாப் படுதே.

இனிய வாழ்த்து(க்)கள்.

நுழைவுச் சீட்டு கிடைக்காட்டாலும் பரவாயில்லை. தொலைக்காட்சியில் நேரடி ஒளிபரப்பு இருக்குமே!

வடுவூர் குமார் said...

வாங்க துளசி
சிங்கைக்கு 30 வயசாக இருக்கும் போது என்று எழுதியிருக்கனும்,சின்ன குழப்பமாகிவிட்டது போல்.
இணையத்தில் நேரடி ஒளிபரப்பு கூட இருக்கு.

இங்கு பார்க்கலாம்.

Unknown said...

//என்ன தான் பிரச்சனை வந்தாலும் முடிவில் இருக்கும் வெளிச்சததை நோக்கி வீறு நடை போடும் சிங்கப்பூரை நாமும் வாழ்த்துவோம்.//

அருமை.

நன்பரே இந்த விவாதத்தில் நீங்களும் கலந்து கொள்ளுங்களேன்.

http://oviya-thamarai.blogspot.com/2009/08/2.html

நன்றி

வடுவூர் குமார் said...

என்பக்கம் - நன்றி பார்க்கிறேன்.

கிரி said...

டெம்ப்ளேட் மாற்றி விட்டீங்க போல :-) நல்லா இருக்கு (பின்னூட்டம் இடவும்)

வடுவூர் குமார் said...

நன்றி கிரி,ரொம்ப நாளாக பார்க்கமுடியவில்லை, என்ன ஊர் பக்கம் பயணமா?