Monday, November 17, 2008

முதல் துளி

துபாயில் எப்பவாவது தான் மழை பெய்யும் என்று கேள்விப்பட்டிருந்தேன்,நேற்று தான் அந்த முதல் நாள் போலும்.கொஞ்ச நாட்களாகவே காற்றின் குளுமை மாலை சூரியன் விழும் போதே தெரிய ஆரம்பித்துவிட்டது.

வேலை செய்யும் இடத்தில் வெய்யில் நின்றால் ஒரு வித வெப்பமும் சட்டென்று நிழலில் நின்றால் சடாரென்று குளுமையாவது வினோதமாக இருக்கு.

மழை பெய்யும் போது நான் தூங்கியிருந்தாலும் சாலையில் தேங்கி நிற்கும் தண்ணீரையும் இப்படி கார் மீது நிற்கும் தண்ணீரும் காட்டிக்கொடுத்துவிடும்.அதை நீங்களும் பார்த்து மகிழுங்கள்.

சக்கரத்து மூடிக்கு கூட இவ்வளவு பளபளப்பு வேண்டியிருக்கு!!



படத்தை பெரிதாக்கி பார்க்க அதன் மீது சொடுக்கவும்.

14 comments:

வெங்கட்ராமன் said...

சக்கரத்து மூடிக்கு கூட இவ்வளவு பளபளப்பு வேண்டியிருக்கு!!

பூமியில் இருந்து தண்ணீருக்கு பதிலாக
தங்கம் திரவமாக (பெட்ரோல்) வந்தால் இப்படித்தான் பளபளப்பாக இருக்கும்.

முகவை மைந்தன் said...

மழை பெஞ்சா படம் எடுத்து வைக்க வேண்டிய நிலைல உங்ங்களைப் பாத்தா பாவமா இருக்கு. எப்படி இருந்த நீங்க...!

ம்ம்ம்ம் ஊரெல்லாம் சுத்தி நல்லா பழகிட்டீங்க போல. அடுத்த மழைக்குள் உங்களுக்கு இன்னொரு பின்னூட்டம் போட முயல்கிறேன்:-)

வடுவூர் குமார் said...

வாங்க வெங்கட்ராமன்
இதில பாருங்க துபாயில் எண்ணெய் வளம் கிடையாது அதனால் பணம் இதிலிருந்து வருவதில்லையாம்.பார்க்கும் இடங்களில் எல்லாம் கட்டிடம் தான் பிரதானமாக தெரிகிறது.கட்டுமானத்துறையும் இப்போது அடிவாங்கும் நிலமையில் உள்ளது என்று நண்பர்கள் சொல்கிறார்கள்.

கோவி.கண்ணன் said...

//சக்கரத்து மூடிக்கு கூட இவ்வளவு பளபளப்பு வேண்டியிருக்கு!!//

சிங்கையின் சீனப்பணக்காரன் பணத்தை வச்சிக்கிட்டு என்ன செய்றதுன்னு தெரியாமல் காஸ்ட்லி செல்போனும், காண்டோ ஹவுஸும், லேட்டஸ்ட் காரும் வாங்குவான். அங்கே காருக்கு வெள்ளியிலேயே மூடி போடுவாங்கப் போல, சந்தனம் மிஞ்சிய கதைதான். :) உண்மையைச் சொன்னோம் என்றால் நம்ம காதில் தான் புகைவருவதாகச் சொல்லுவாங்க, சரிதானே ?

வடுவூர் குமார் said...

வாங்க முகவைமைந்தன்
சிஙகையில் வெய்யில் காலத்தில் கூட 3 நாட்களுக்கு ஒரு முறை மழையை எதிர்பார்க்கலாம் ஆனால் இங்கு அப்படியில்லையே!
பின்னூட்டம் போட அடுத்த மழை வரை காத்திருக்கனுமா? :-)

வடுவூர் குமார் said...

வாங்க கோவியாரே
இங்கு வீட்டில் இருந்து அலுவலக முகப்பு வரை நிறைய பள பளப்பு தான். சில சமயம் சூரிய வெளிச்சம் பிரதிபலிப்பு ஆகி கண்ணில் அடிக்கும் போது "ஏண்டா இப்படி கஷ்டப்படுத்திரீங்க?" என்று கத்தத்தோனும்.
தேவைக்கு அதிகமாக காசு இருக்கும் போது அவர்களும் என்ன தான் செய்வார்கள்.அவுங்க வீட்டில் பொருளாதார சுணக்கம் வரும் போது தான் தெரியும்.

Anonymous said...

எந்நேரமும் மழை பெய்துகொண்டிருக்கிறது. எப்போது பெய்யும் என்று கணக்கெல்லாம் இல்லை. எப்போதும் பெய்யும்.

டிசம்பர் இறுதிவரை இப்படித்தான்; டிசம்பரில் பல இடங்கள் வழக்கம்போல வெள்ளத்தில் மூழ்கும்.

நான் மலேசியாவைச் சொல்கிறேன்.

வடுவூர் குமார் said...

என்னடா இது! நம்பி புதுத்தகவலை தருகிறாரோ என்று பயந்துவிட்டேன்.
மலேசியாவில் 2.5 வருடங்கள் இருந்தேன்,அந்த அனுபவுமும் உண்டு.
இயற்கையை உணர சரவாக்/சபா பக்கம் இருந்தால் போதும்.

Anonymous said...

//மலேசியாவில் 2.5 வருடங்கள் இருந்தேன்...//

எப்போது? எங்கே?

தெரிந்துகொள்ளலாமா?

வடுவூர் குமார் said...

கூச்சிங்- சரவாக்.
1995-98

Anonymous said...

//கூச்சிங்- சரவாக்.
1995-98//

சாபாவிலும் சரவாக்கிலும் இந்திய மலேசியர்களின் எண்ணிக்கை மிகக் குறைவு.

வடுவூர் குமார் said...

ஆமாங்க நம்பி
அங்குள்ள கோவிலுக்கு போனாத்தான் யார் யார் அந்த ஊரில் இருக்காங்க என்ற விபரமே தெரியும்.

கணினி தேசம் said...

ஜனவரி மாதம்வரை காத்திருங்கள், மழையினால் துபாய் படும்பாடு என்னென்பது புரியும். :-)))

காத்திருக்க மனமில்லையெனில் கிழே சொடுக்கி சென்ற வருடம் பெய்த மழையிம் தாக்கத்தை பாருங்கள்.

Nov'2006 இல்.. இப்படி.
http://picasaweb.google.com/indkumar/HowDoesItLookLikeWhenItRainsInSharjah#

Jan'2008 இல்.. இப்படி.
http://picasaweb.google.com/indkumar/HistoricRainfallInSharjahJan08#

வடுவூர் குமார் said...

வாங்க கணினிதேசம்
ஜனவரியில் இருக்கா? காத்திருக்கேன்.
உங்கள் படங்களும் அதன் அருமையை காண்பிக்கிறது.