Saturday, November 01, 2008

இவ்வளவு பக்கத்திலா?

ஹாங்காங் பழையவிமான நிலையத்தை அடையும் விமானங்கள் மிகவும் பிரம்மப்பிரயத்னத்துடன் அடைவதாக முன்பு எங்கோ படித்த ஞாபகம் அதோடு ஒரு நகரத்தின் மீது மிகவும் தாழ்வாக பறக்கிறது என்று ஒரு விமானத்தின் படத்தையும் போட்டு காட்டிருந்தார்கள்.

இங்கு வந்த நாட்கள் முழுவதும் விடிகாலையில் நான் தங்கியிருக்கும் வீட்டுக்கு அருகில் மிகுந்த சத்தத்துடன் இறங்கிக்கொண்டு இருக்கும்,அதுவும் சுமாராக 3 நிமிட இடைவெளியில்.மாலை வேளையில் காற்றின் திசையை பொருத்து மேலெழும்பும் அல்லது தரையிரங்கும்.சாலையில் நடப்போரும் மாலைவேளை காற்றை அனுபவிக்க வெளியில் இருப்போர்களும் அன்னாந்து பார்பது அவரவர் ஊர் போகும் நாளை ஏக்கத்துடன் விமானம் மூலம் பார்பதாக தோனும்.

இன்று காலை இந்த படம் எடுக்கும் போது வீட்டின் கூரைக்கும் விமானத்துக்கும் 50 மீட்டர் இடைவெளி தான் இருக்கும் என்று நினைக்கிறேன்.எதுவும் நடக்காத வரை சரி ஒரு விபத்து போதும் சில ஆயிரங்களை முழுங்க.

2 comments:

Anonymous said...

துபாய்ல செட்டில் ஆகியாச்சா, விமானா நிலையத்துக்கு ரொம்ப பக்கத்தில வீடா?

வடுவூர் குமார் said...

வாங்க சின்ன அம்மினி
இன்னும் இல்லை,வீடு பார்த்துக்கொண்டிருக்கேன்,சம்பளத்தில் 60% வரை கேட்கிறார்கள். :-)
இப்போதைக்கு உறவினர் வீட்டில் தான் வாசம்.
புது ஊர் உங்களுக்கு எப்படியிருக்கு?