Saturday, August 30, 2008

நன்றாகப் பிறந்தவை

என்னடா தலைப்பே ஒரு மாதிரி இருக்கே என்று பார்க்கிறீர்களா? இதற்கு அர்த்தம் என்ன தெரியுமா?


“சுஜாதா”

என்று சுஜாதா தன்னுடைய “விமர்சனம்,விவாதங்கள்” என்ற புத்தகத்தில் 44 பக்கத்தில் உள்ளது।சுஜாதா என்பது பெண் பெயர் மட்டும் அல்ல என்று சொல்லி தலைப்பில் உள்ளதை சொல்லியுள்ளார்.இதுவும் ஒருவர் நீங்கள் ஏன் பெண் பெயர்களில் எழுதுகிறீர்கள் என்று கேட்டதற்கு பதிலடியாக . கொடுத்துள்ளார்.

சுஜாதாவோட பல பத்தகங்களை படித்துள்ளேன் அதுவும் பொது இடங்களில் படிக்கும் போது படுஜாக்கிரதையாக இருக்கவேண்டும்,எப்போது வாய்விட்டு சிரிப்போம் என்று சொல்லமுடியாதபடி கதையின் நடுவில் ஒரு வரியை போட்டு அசத்திவிடுவார்।தண்ணீரில் இருந்து எழும் குமிழி போல் திடிரென்று வரும்।

இந்த புத்தகத்தை எடுத்து சில வரிகளை படிக்கும் போது முதலிலேயே படித்த மாதிரி இருக்கே என்று நினைத்துக்கொண்டு மேலே படித்தேன்.இவருடைய பேட்டிகள் மற்றும் சினிமா விமர்சனங்கள் என்று தொகுத்துவழங்கியுள்ளார்கள்.முதல் பதிவு 1985, பிறகு 1994 & 1998யில் வந்துள்ளது.அதில் ஒரு நாட்டுப்பாடல் நானும் எப்போதோ பாடிய ஞாபகம்.

தபால்காரரை விமர்சித்து பாடியது..

தபால் தபால் வீரப்பா
என்னெக்கிடா கல்யாணம்
மாசம் பிறக்கட்டும்
மல்லிகை மலரட்டும்
எம்.ஜி.ஆர். சண்டை
பார்வதி கொண்டை
கொளத்தில் கொக்கு
கோலப்பீயை நக்கு!

அடுத்து சினிமா விமர்சனத்தில் “காய் அவுர் கௌரி” விமர்சனம் தான் சூப்பராக இருந்தது.இந்த படத்தில் ஒரு பசு தான் கதாநாயகனுக்குரிய அந்தஸ்துடன் நடிக்குது போல் இருக்கு.அது செய்யாத ஒன்று “போன் பேசாதது” என்று தான் எழுதியிருக்கார்.

மற்றொரு இடத்தில் கற்பனையில்லாது எழுதப்பட்ட ஒரே புத்தகம்...

டெலிபோன் டைரக்டரி தானாம்.

இப்படி எல்லாம் நகைச்சுவையை தூவிவிட்டு...

இன்றும் இப்படி இருக்கா?பலதரப்பட்ட புத்தகங்களை படிப்பவர்கள் சொல்லுங்கள்।


1 comment:

கபீரன்பன் said...

//திட்டுகிற வார்த்தைகளை கதைகளில் பயன் படுத்தக்கூடாது ....//

சுஜாதா அவர்கள் ஒரு கதையில் ”தக்காளிக் கோழி” என்று ஒரு வசைச் சொல்லை திரித்து எழுதிய போது ஏற்பட்ட சர்ச்சை நினைவுக்கு வருகிறது.:)