Monday, August 18, 2008

இவர்களுக்கு உதவலாமா?

ஒவ்வொரு முறை ஊருக்கு போகும் போது இந்த காட்சி கண்ணில் படும் போது நெஞ்சை பிழியும்.நம்மில் பலர் சாலையில் போகும் போது காரிலோ அல்லது இரு சக்கர வாகனத்திலோ அல்லது பேருந்திலோ போவோம்.நாம் சாலையில் இருக்கும் நேரம் மிகக்குறைவாகவே இருக்கும்.ஆனால் இப்பணியில் இருப்பவர்கள் தங்கள் வேலை நேரத்தை பெரும்பாலும் சாலையிலேயே கழிக்கிறார்கள்.



சென்னையில் மற்றும் பெரும் நகரங்களில் ஓடும் பல வண்டிகள் வயதுக்கு மீறி ஓடவைப்பதாலும் மற்றும் சரியான பராமரிப்பு செய்யாத்தாலும் கரும் புகையை அள்ளிக்கொட்டிக்கொண்டு போகும்.இந்த புகையை சுவாசிக்கும் மூக்குக்குள் மறு நாள் காலை அனிச்சியாக போகும் விரலோடு வெளியே வரும் போது அதன் வீரியம் தெரியும்.சாலையில் நாம் கழிக்கும் இந்த கொஞ்ச நேரத்திலேயே இப்படி என்றால் பல மணி நேரம் அங்கேயே நிற்க வேண்டிவரும் போக்குவரத்து போலீஸ்காரர்களுக்கு எப்படி இருக்கும்? அவர்களுக்கு என்ன நுறையீரல் மற்றும் உடல் உறுப்புகள் வேறு மாதிரியாகவா இருக்கு.இந்த காட்சியை பார்க்கும் போது இந்த மாதிரி நிலைமைக்கு யாரை குற்றம் சொல்ல? என்று மனது அசைபோட ஆரம்பிக்கும்.



சுமார் 50 வருடங்களுக்கு முன்பு இந்த அளவுக்கு புகைகக்கும் வண்டிகள் கிடையாது, சாலை போக்குவரத்தை ஒழுங்குபடுத்த சமிக்கை விளக்குகள் கிடையாது அதனால் இந்த மாதிரி போலீஸ்காரர்களை அதற்கென்று நியமிக்கவேண்டியிருந்தது.இன்று அந்த நிலமை கொஞ்சம் கொஞ்சமாக மாறி வந்தாலும் இவர்களை அவ்வப்போது சாலைக்கு நடுவே ஒரு குடையின் (சில இடங்களில் மட்டும்) கீழே நிறுத்தி வாகன போக்குவரத்தை சமாளிக்கவிட்டு விட்டார்கள்.அவ்வப்போது பெரும் தலைகள் வரும் நேரத்தில் போக்குவரத்தை சமாளிக்கவும் இவர்கள் உதவுவார்கள்.

போன பதிவர் கலந்துரையாடலின் போது திரு அந்தோனிமுத்து அவர்களுக்கு சக்கர நாற்காலி கொடுப்பதை பற்றி திரு ஜோசப் பால்ராஜ் சொல்லி நாமும் அந்த பங்களிப்பில் கலந்துகொள்வோம் என்ற வேண்டுகோளை முன்வைத்தார்.யாரும் மறுப்பு சொல்லவில்லை ஆனால் எங்கள் உதவி தேவைப்படாமல், அந்த முயற்சி மற்றவர்கள் மூலம் நடைந்தேறிவிட்டது.அதன் தொடர்ச்சியாக பொது நலனில் அக்கறை உள்ள நிகழ்வாக இந்த காவல்துறைக்கு ஊழியர்களுக்காக நாம் ஏன் பாதுகாப்பு சாதனம் கொடுக்கக்கூடாது?சில போக்குவரத்து ஊழியர்களுக்கு மூக்கை மட்டும் மூடும்படியான ஒரு காகித மூடி கொடுத்திருப்பார்கள் போலும்,சிலரை அந்த கவசத்துடன் பார்த்திருக்கேன்,அது ஒரு மணி நேரத்துக்குக்கூட பாதுகாப்பாக இருக்காது அதோடு விலையும் மிக மிக மலிவு.

அரசாங்கம், இவர்களுக்கு இம்மாதிரியான சாதனத்தை கொடுப்பதற்குப்பதிலாக கொஞ்சம் கொஞ்சமாக இவர்கள் இந்த பணியை விளக்கு சமிக்யையிடம் விட்டுவிட வேண்டும்.அப்படியே தேவைப்பட்டால் அவர்கள் உடல் நலத்துக்கு கேடுவிளைவிக்காமல் இருக்க இந்த மாதிரி முகக்கவசம் கொடுக்கவேண்டும்.அரசாங்கம் மூலம் நடக்கவேண்டும் என்றால் இவர்களை சென்றடைய இன்னும் பல காலங்கள் அதற்குள் அவர்கள் நலம் இன்னும் மோசமாகக்கூடும்.அதனால் செலவு குறைவாகக்கூடிய இந்த நற்பணியை தமிழ் வலைப்பதிவர்கள் ஏன் மேற்கொள்ளக்கூடாது?

முதலில் சென்னையில் ஆரம்பிக்கலாம்,பார்க்கும் மற்ற ஊர்காரர்களுக்கும் ஒரு புரிந்துணர்வு வரும் பிறகு தேவையென்றால் அங்கும் விரிவுபடுத்தலாம்.

எவ்வளவு செலவாகும்?

சென்னையை மட்டும் எடுத்துக்கொண்டால் 500 யில் இருந்து 700 சந்திப்புக்கள் இருக்ககூடும் அதில் வேலை செய்யும் காவல்துறைகாரர்கள் இரண்டு பேர் இருக்கலாம்.அதிகபட்சமாக 1500 தேவைப்படும்.

இந்த கவசங்களில் இரு வகை உள்ளது,ஒன்று மூக்கை மட்டும் மூடக்கூடியது மற்றது மூக்கு & வாயையும் மூடக்கூடியது.முதல் வகை ஒரே ஒரு நாள் மட்டுமே உபயோகிக்க முடியும் ஆதாவது Use & Throw.விலையும் குறைவு.



இரண்டாவது நல்ல வகை ஆனால் விலை அதிகமாக இருக்கும் அத்தோடில்லாமல் அதன் பில்டர் எனப்படும் வடிகட்டியை சுமார் 3 நாட்களுக்கு ஒரு முறை மாற்ற வேண்டியிருக்கும்.இந்த வடிகட்டியின் விலையும் கொஞ்சம் அதிகம் தான்.




சென்னையில் இதன் விலை எவ்வளவு என்று தெரியவில்லை.அமெரிக்காவில் இது பிரபலமாக உள்ளது,அங்கிருந்து யாராவது வாங்கி அனுப்பமுடியும் என்றால் நல்லது.சிங்கையில் இது என்ன விலை என்பதை விஜாரித்து சொல்கிறேன்.

இதை வினியோகிக்கும் முன்பு காவல்துறையை ஆலோசித்துவிட்டு செய்தால் இன்னும் நல்லது.ஒத்துழைப்பு கொடுப்பார்களா என்பது சந்தேகமே.உதவி செய்யப்போய் ஒரு 5 வருடத்துக்கு நீங்களே கொடுப்பீர்களா? என்று கேட்டாலும் கேட்கக்கூடும்.இதிலும் சாதக பாதகங்கள் இருந்தாலும் நமக்காக அந்த புகையில் நிற்கும் நம் உடன் பிறவா சகோதரர்களுக்கு நாம் ஏதாவது செய்யவேண்டும்.இதை பார்த்தாவது அரசாங்கம் மற்றும் உயரதிகாரிகள் அவர்களுக்கு வேண்டியதை செய்யட்டும்.இது யாரையும் புண்படுத்துவதற்காக செய்வதல்ல,அஹிம்சை முறையில் மனிதாபித முறையில் செய்வோம்.

உங்கள் கருத்தை சொல்லவும் அதன் பிறகு ஆகவேண்டியதை பார்கலாம்.

18 comments:

வெங்கட்ராமன் said...

எனக்கு இந்த விஷயத்தில் உடன்பாடு கிடியாது. தங்கள் உடல் நலத்தில் அக்கறை இருந்தால் அந்த காவல் துறை அதிகாரிகளே, இதை அரசாங்கத்திடம் கேட்கலாம் அல்லது அவர்கள் வசூலில் இருந்தே வாங்கலாம்.

நான் இருக்கும் வட சென்னையில் வசூல் செய்யாத ஒரு போக்குவரத்து காவலர் ஒருவரை கூட நான் இது வரை பார்த்ததில்லை இந்த மூன்றரை வருடத்தில்.

அப்படியே, ஸ்பாட் ஃபைன் என்று வசூலித்தாலும் நூறு ரூபாய் வாங்கிக் கொண்டு 50 ரூபாய்க்கு ரசீது கொடுப்பார்கள்.

சென்னையில் லாரி, ஆட்டோ, ஷேர் ஆட்டோ ஒட்டுபவர்களிடம் இந்த விஷயத்தை சொன்னால், அவர்கள் நம்மை கெட்ட வார்த்தையில் திட்டினால் கூட ஆச்சர்யப் படுவதற்கில்லை.

மன்னிக்கவும் நான் தினம் தினம் பார்க்கும் விஷயம் என்பதாக் சூடாகிவிட்டேன். விருப்பமிருந்தால் மட்டும் பிரசுரிக்கவும் இல்லையென்றால் பரவாயில்லை.

வடுவூர் குமார் said...

வாங்க வெங்கட்ராமன்
உங்கள் கருத்து,நீங்கள் அவர்களிடம் அனுபவப்பட்டதில் இருந்து தெரிகிறது.ஒருவேளை நான் சென்னையில் இருந்து வண்டி ஓட்டி அவர்களிடம் இப்படிப்பட்ட நடத்தையை கண்டிருந்தால் இந்த மாதிரி ஒரு பதிவு போட்டிருப்பேனா? என்று சந்தேகம் தான்.
வேண்டுமென்றே இந்த விஷயத்தை எழுதாமல் விட்டேன்,லஞ்சம் வாங்குகிறார்கள் என்று புகார் அதை மாற்ற இது உதவினாலும் உதவும் அல்லவா?ஒருவர் மாற பல காரணங்கள் இருக்கலாம் அப்படி நினைத்து செய்வோம்.நல்லது நடந்தால் சரி இல்லாவிட்டால் நாம் ஏதும் செய்யமுடியாது.மொத்த சமுதாயத்தை மாற்றும் எந்த கருவியும் யாரிடமும் கிடையாது.
அவர்கள் வாங்குகிற லஞ்சத்தை ஞாயப்படுத்த பல காரணங்களை அவர்கள் சொல்லக்கூடும்.சம்பளம் குறைவு,விடுமுறையில்லாத வேலை,சுகாதாரம் இல்லாத சூழல்.. என்று பல.(இதையெல்லாம் நான் ஞாயப்படுத்தவில்லை)
நல்ல கருத்து/கெட்ட கருத்து என்று நான் இப்போது எதையும் வகைப்படுத்தவில்லை.ஆதரவு இருந்தால் செய்வோம் இல்லை என்றால் விட்டு விடுவோம்.இழப்பொன்றும் இல்லை.

BALA.GANESAN said...

வணக்கம்,வடுவூர் குமார்,மங்களூர் சிவா,கிரி.,

அனைவர்க்கும் மிக்க நன்றியை தெரிவித்கொள்கிறேன்.
நான் இருக்கும் நாட்டிலேவும் வடுவூர் குமார் சொன்னதுபோல் ஒவ்வேறு நிடத்திகும் எண்கள் மாறும் ஒரு சிப் கொடுக்கிறார்கள். நம்ப ஊர் reliance மணி போல். வடுவூர் குமார்,மங்களூர் சிவா,கிரி வலை பதிவுகளை தினமும் படிப்பவன் நான். நிங்களே என் வலை பதிவுவிர்க்கு வந்து encourage செய்ததிற்கு மிக்க நன்றி

வடுவூர் குமார் said...

நன்றி வாழ்க தமிழ்.

jeevagv said...

நல்ல யோசனைகள்.
முகமூடியைப் பொறுத்த வரை - பில்டர் பேப்பரில் ஆன - ஒரிரண்டு முறையே பயன்படுத்தக்கூடிய வகைகள் - குறைந்த விலைக்கு கிடைக்கும் என நினைக்கிறேன்.

வடுவூர் குமார் said...

வாங்க ஜீவா
அந்த பேப்பர் மூடிகள் அவ்வளவு சிறப்பானவை அல்ல அதுவும் நம்மூர் புகைக்கு.
இந்த பிரச்சனைக்கு ஆதிமூலம் யார் என்று பார்த்தால் அரசாங்கத்தையே பார்க்கவேண்டியதுள்ளது.:-(

திவாண்ணா said...

எங்க ஊர்லேயே பேப்பர் மாஸ்க் கொடுத்து இருக்காங்க. இத்தனைக்கும் அப்படி ஒண்ணும் போகுவரத்து கிடையாது.

கொடுக்கிற முன்னே அதை பயன்படுத்துவாங்களான்னு தெரிஞ்சுக்கிறது நல்லது. பலர் செய்வாங்கன்னு தோணலை.
வசூல் மாமூல்தான். அது ஒரு பக்கம். இது வேற பக்கம்.
சிக்னல் பத்தி சொல்றீங்க. பல வருஷங்கள் முன்னால ஒழுங்கு பத்தி பேச்சு வந்தப்ப ஒரு பெரியவர் கேட்டார்: " சிக்னலையும் நிறுவிட்டு ஏன்பா போலீஸ்காரர் பக்கத்திலே நிக்கிறார்?"

நம்ம ஜனங்க அப்படித்தான்.

லக்கிலுக் said...

குமார் அண்ணே!

அரசே காவலர்களுக்கு இதுபோன்ற மாஸ்க்குகளை வழங்குகிறது. இரண்டு ஆண்டுகளுக்கு முன்னால் இதுபோல மாஸ்க் வழங்குவதற்கென்றே சென்னை காவல்துறை ஒரு விழா நடத்தியதாகவும் நினைவு. பலபேர் உபயோகப்படுத்துவதில்லை. சிலர் மட்டும் ஐந்து நிமிடங்களுக்கு ஒருமுறை இதை சம்பிரதாயத்துக்கு மாட்டிக் கொண்டு திரும்ப கழட்டி வைத்து விடுகிறார்கள்.

ஒருவேளை மாஸ்க் மாட்டிக் கொண்டு பணிபுரிவது அவர்களுக்கு சிரமமாக இருக்கிறதோ என்னவோ?

வடுவூர் குமார் said...

வாங்க திவா
இவர்களில் சிலர் மூக்கு மூடி அணிந்திருப்பதை நானும் பார்த்திருக்கேன்,அது அவர்களாக வாங்கிக்கொண்டதாக இருக்கும் என்று நினைத்திருந்தேன்.
போடாவிட்டால் போட வைக்கனும் ,புதிதாக வேலைக்கு வருபவர்களுக்கு இவர்கள் தானே முன்னுதாரனமாக இருக்கனும்?

வடுவூர் குமார் said...

வாங்க லக்கிலுக்
இரண்டு வருடங்களுக்கு முன்பு கொடுத்தார்களா? நல்ல பணி அதையே கட்டாயப்படுத்தியிருந்தால் நல்ல முன்னுதாரணமாக இருந்திருக்ககூடும்.சட்டத்தின் மூலம் செய்வது கடினம் தான்.
இது மாட்டிக்கொள்வதில் எந்த சிரமும் கிடையாது,முக அழகு தெரியாது என்ற ஒன்றைத்தவிர.
கட்டுமானத்துறையில் இதை பரவலாக்கி கட்டாயப்படுத்தியிருக்கிறார்கள்...இங்கு.
இவர்களை கட்டுப்படுத்தும் உயர் அதிகாரி தேவையான நடவடிக்கைளை எடுத்தால் நன்றாக இருக்கும்.
நம் வீட்டுக்காரர் ஒருவரை இப்படி நிற்கவைத்தால் மனது எவ்வளவு பாடுபடுமோ அந்த அளவுக்கு இருக்கு.

திவாண்ணா said...

குமார், உண்மையாவே இந்த போலீஸ்காரங்க கவனிக்க வேண்டியது ஆயிரத்து எட்டு இல்லை லட்சத்து எட்டு இருக்கு. யாருக்கு தன்னோட உடல் நலத்துல அக்கறை இருக்கோ அவங்க கடை பிடிப்பாங்க. மத்தவங்க செய்ய மாட்டாங்க. தேவையானா ஒரு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தலாம். லக்கி சொன்னா மாதிரி இதுக்கு அவங்க துறைல ப்ரொவிஷன் இருக்குன்னே நினைக்கிறேண். பயன்படுத்தறதில்லை.

வடுவூர் குமார் said...

ஏதோ நல்லது நடந்தால் நல்லது,திவா.

குடுகுடுப்பை said...

காவல்துறை இதனை சட்டமாக்கினால் மட்டுமே இவர்கள் இந்த mask ஐ அணிய வாய்ப்பு உள்ளது. நம்மிடம் உடல்நிலை பேனுதல் என்பது முக்கியமான ஒன்றாக இல்லை.

வடுவூர் குமார் said...

வாங்க குடுகுடுப்பை
அது ஒரு வழி என்றால்,புகை கக்கும் வண்டிகளை ஒழிப்பது மற்றும் சாலையை உபயோகிக்கும் வண்டிகளின் தரத்தை கட்டுப்படுத்துவது என்றொரு மறு வழியிம் திறந்தே இருக்கிறது.
சாட்டை அரசின் கையிலேயே இருக்கு.
முதல் வருகைக்கு நன்றி.

கோவி.கண்ணன் said...

குமார்,
படத்தைப் பார்த்தவுடன் தலைப்பைத் தொட்டு எனக்கு சிரிப்புதான் வந்தது ! காரணம் தொப்பையுடம் நிற்கும் போலிஸ்காரின் தொப்பையை குறைப்பதற்கு நிதி உதவி செய்ய வேண்டும் என்று சொல்லி கிண்டல் அடித்திருக்கிறீர்கள் என்று நினைத்துவிட்டேன்.

:)

வடுவூர் குமார் said...

கோவியாரே,அந்த படம் சுட்ட இடத்தில் அப்படி தான் எழுதியிருந்தார்கள். :-)

Tech Shankar said...

Here in Bangalore Many persons are wearing this type of protection thing.

Here all are aware about it.

gud post. great boss

வடுவூர் குமார் said...

Thamiznenjam
Its a good note that people are using it.