Saturday, August 16, 2008

நாடு எப்ப திருந்தும்??

நம்ம விஜயகாந்தின் பழைய பேட்டியை ஆனந்தவிகடனில் படிக்க நேர்ந்தபோது இது கண்ணில் பட்டது.
எனக்கும் இது தான் சரியாக இருக்கும் போல் தோனுகிறது.


நன்றி:ஆனந்த விகடன்

8 comments:

ISR Selvakumar said...

திரு.கட்டுமானம் அவர்களுக்கு,
'அப்போது எல்லாமே நல்லா நடந்தது'
எமர்ஜென்சியில் பாதிக்கப்படாத எல்லோருமே சொல்கிற ஒரே விஷயம் இதுதான்.

பாதிக்கப்பட வேண்டும் அல்லது பாதிப்பை புரிந்து கொள்கிற பக்குவம் வேண்டும், அப்போதுதான் வலிகள் புரியும். இன்றைக்கு காந்தி கேலி செய்யப்படக் காரணம் வலி புரியாத தன்மைதான். இன்றைக்கும் எமர்ஜென்சிக்கு சிலர் கொடி பிடிக்கக் காரணம் வலியும் கிலியும் அவர்களுக்கு வந்ததில்லை.

மனிதன் அதிகாரத்திற்கு அடிமை ஆகிவிட்டால் எல்லாமே நன்றாகத்தான் நடக்கும், நாம் சுதந்திரமாக சுவாசிப்பதைத் தவிர.

இன்றைக்கு விஜயகாந்த் கட்சி ஆரம்பிக்க முடிகிறது என்றால் அதற்கு காரணம் இன்று எமர்ஜென்சி இல்லை.

என் கல்யாண மண்டபத்தை இடிக்கக் கூடாது என்று அரசாங்கத்தை எதிர்த்து விஜயகாந்த் கூப்பாடு போட முடிகிறது என்றால் அதற்கு காரணம் இன்று எமர்ஜென்சி இல்லை.

இது போல இன்னம் எவ்வளவோ சொல்லலாம். நேரம் கிடைக்கும்போதெல்லாம் சொல்வேன். ஏனென்றால் இன்று எமர்ஜென்சி இல்லை.

இந்த பதிலையே இரு வலைப்பூவாகவும் போடத் தீர்மானித்துவிட்டேன்.

நன்றி

Expatguru said...

நாடு திருந்துவது இருக்கட்டும். முதலில் நாம் திருந்த வேண்டும், பிறகு நாடு தானாகவே திருந்திவிடும்.

இரயிலில் நமக்கு முன்பதிவு இருக்கை கிடைக்கவில்லை என்றால் முதலில் நாம் செய்வது என்ன? TTEக்கு ஏதாவது கொடுத்து இருக்கையை அடைவதை தானே செய்கிறோம்? அதே போல வெளியே குப்பையை வீசுவது, சாலை விதிகளை மதிக்காமல் கண்டபடி வண்டியை ஓட்டுவது, தேவையே இல்லாமல் ஹாரன் அடிப்பது, தெருவோர transformerஐ சுற்றி சிறுநீர் கழிப்பது, இப்படி சொல்லிக்கொண்டே போகலாம்.

நம்மை நாமே மாற்றிக்கொள்ளாமல் அரசாங்கத்தை குறை கூறுவதில் என்ன பயன்? 'நீ என்ன பெரிய சமூக சீர்திருத்தவாதியா' என்று ஒருவரை ஒருவர் கூறிக்கொள்ளாமல், தத்தம் வேலைகளில் நேர்மையாக இருந்தாலே நாடு திருந்திவிடும்.

வடுவூர் குமார் said...

திரு செல்வகுமார்
இதையும் நான் யோசித்துப்பார்த்தேன்.
அப்போது எனக்கு வலி இல்லை உண்மை தான்.வலியை அனுபவித்தவர்கள் எதற்காக அனுபவித்தார்கள்?நாட்டின் ஒழுங்கு முறை திரும்பியதாலா? எல்லோருக்கும் ஒழுங்குமுறைக்கு கொண்டுவந்ததாலா?
எனக்கென்னவோ இப்போதிருக்கும் எத்தலைமைக்கும் நாட்டின் முழு செல்வாக்கு இல்லை,எதையும் முழுபலத்துடன் செய்யமுடிவதில்லை என்பதே பல நல்ல காரியங்கள் முடங்கிப்போவதற்கு காரணமாகிவிடுகிறது.
சாதாரண சாலை விதிகளை அரசாங்க வாகனங்களே மீறுகிறது (சென்னையில் வண்டி ஓட்டி பாருங்கள்),பலவற்றில் ஒழுங்கு முறை என்பது வெறும் பேச்சலவிலேயே இருக்கிறது.ஆற்று தண்ணீரில் அடித்துப்போவது போல் ஒழுங்காக இருக்கவேண்டும் என்று நினைப்பவர்களும்,முடியாமல் போவது என்பது இன்றைய காலக்கட்டத்தில் இருப்பது நிதர்சனம்.
2 வருட குத்தகை - கத்திப்பாரா பாலம்,முடிக்க எத்தனை வருடம் ஆனது தெரியுமா? இது வெறும் உதாரணம் தான்.
உங்கள் பதிலை விரிவாக போடுவோம்,நானும் தெரிந்துகொள்ள வசதியாக இருக்கும்.
எமர்ஜென்சியில் எந்த பொதுமக்களும் பாதிக்கப்பட்டதாக எனக்கு நினைவில்லை.பொது ஜனம் சௌகரியமாக இருக்கவே “அரசாங்கம்” அது எமர்ஜென்சியில் கிடைக்கும் என்றால் அதை வரவேற்கிறேன்.
வருகைக்கு நன்றி.

வடுவூர் குமார் said...

வாங்க ExpatGuru.
பொதுவாக உங்கள் வாதம் சரி தான் ஆனால் நம்மால் நம் வீட்டுக்குள் மட்டுமே இருக்கமுடியாதே,நாலு இடங்களுக்கு போகனும் பல வேலைகளை பார்க்கனும்.அப்படி போகும் போது தான் உரசல்,பிரச்சனை வருகிறது.
எதுவோ,நம் மக்கள் நன்றாக இருக்க நல்லது நடந்தால் சரி.
அயல்நாட்டில் நம் மரியாதை சொல்லும்படியாகவா இருக்கு நெஞ்சை தொட்டு சொல்லுங்கள்.இதற்கு யாரெல்லாம் காரணம்?? நானும் நீங்களுமா? இல்லை நம்மிடம் ஓட்டு வாங்கி நம்மை ஆள்பவர்களா?
நீ என் கொடுக்கிறாய்? அதனால் தானே அவன் வாங்குகிறான் என்கிறீர்களா?
நம் சட்டத்தில் ஓட்டை இருக்கு அதை அடைப்பது யார் கடமை?
அப்படியே வாங்குபவர்களை சட்டத்தின் முன் கொண்டு வந்து தண்டனை கொடுத்து, வரும் சந்ததிகளுக்கு முன்னுதாரனத்தை காட்டுவது யார் பொறுப்பு?
நாம்,நம் தேசமும் திரும்பவே முடியாத நிலையை நோக்கி போகிறதோ என்ற ஆதங்கம் வந்துகொண்டிருக்கிறது.
ஹூம்! என்ற பெருமூச்சுடன்...
வருகைக்கு மிக்க நன்றி.

வடுவூர் குமார் said...

இரயிலில் நமக்கு முன்பதிவு இருக்கை கிடைக்கவில்லை என்றால் முதலில் நாம் செய்வது என்ன? TTEக்கு ஏதாவது கொடுத்து இருக்கையை அடைவதை தானே செய்கிறோம்?
பொறி வைத்து TTE ஐ பிடித்து தண்டனை கொடுப்பது நம் கையிலா இருக்கு?அப்படி கொடுப்பது அடிக்கடி நடந்தால் டி டி யி தன்னால் வழிக்கு வருவார்.பொது ஜனமும் புரிந்துகொள்ளும்.
அதே போல வெளியே குப்பையை வீசுவது, சாலை விதிகளை மதிக்காமல் கண்டபடி வண்டியை ஓட்டுவது, தேவையே இல்லாமல் ஹாரன் அடிப்பது, தெருவோர transformerஐ சுற்றி சிறுநீர் கழிப்பது, இப்படி சொல்லிக்கொண்டே போகலாம்.
இதற்கு பதில் இது தான் சிங்கப்பூர் என்ற பதிவை பார்க்கவும்.வழி இருக்கு இயங்க/இயக்க அரசாங்கம் வேண்டும்.

Anonymous said...

எப்பவா?

அதான் கனவு காணச்சொல்லி இருக்காங்கல்லே.(-:

துளசி

வடுவூர் குமார் said...

வாங்க துளசி
கனவு மட்டும் போதுமா? எழுந்து வேலை பார்க்கவேண்டாம்? :-)
இப்பவும் பி பி சி யின் - இந்தியா தொடரைத்தான் பார்த்துக்கொண்டிருக்கேன்.
விவரனை மற்றும் விளக்கங்கள் எல்லாம் அட்டகாசமாக இருக்கு.
முடிந்தால் பாருங்கள்.

அறிவகம் said...

// நம்மால் நம் வீட்டுக்குள் மட்டுமே இருக்கமுடியாதே, நாலு இடங்களுக்கு போகனும் பல வேலைகளை பார்க்கனும்.அப்படி போகும் போது தான் உரசல்,பிரச்சனை வருகிறது. //


சரியாக சொல்லியிருக்கிறீகள். முதலில் நாடுதான் திருந்த வேண்டும். நாடு திருந்தினாலே தனிமனிதர்கள் தானாக திருந்தி விடுவார்கள்.