தொலைப்பேசி அழைத்தது,அழைக்கும் நபரின் பெயரையும் காண்பித்தது.
என்ன? அவர் சென்னையில் நான் திருச்சியில்.பேச்சு தொடர்ந்தது.
ஆரம்பமே இப்படித்தான் ஆரம்பித்தது.
”ஒரு நான்கரை லட்சம் தேவைப்படுது உன்னிடம் கேட்டால்,புரட்ட எவ்வளவு நாள் ஆகும்?”
பண முடை உள்ள நண்பனும் அல்ல அப்படியே இருந்தாலும் நண்பர்களிடம் கேட்கும் ஆளுமல்ல ,அவன்.
என்னடா,இப்படி கேட்கிறாய்.இங்கு அவ்வளவு தேறாதே அதுவும் இப்போது.சிங்கைக்கு போய் இருப்பதை எடுத்தாலும் உடனடியாக அவ்வளவு தேறுவது கஷ்டம் என்றும்,ஒருவேளை துபாய் போனால் முடிந்தவரை மிச்சம் பிடித்தாலும் எப்படியும் 5 அல்லது 6 மாதம் ஆகுமே? என்றேன்.
அவன் சிரித்துக்கொண்டே “துபாய் வேலையை தூக்கி எறி” என்றான்.உங்கள் வீட்டிலோ இங்கு வந்து வேலை பார்க்கச்சொல்கிறார்கள்,குடும்பமோ இங்கிருக்கும் போது நீ ஏன் அங்கு தனியாக வேலை செய்யவேண்டும்? என்றான்.அப்போது அவன் பேசியதின் அர்த்தம் புரிந்தது.
இன்னும் சில நாட்களில் சேரப்போகும் நிறுவன முதலாளி எனக்காக இரண்டு மாதம் காத்திருக்கிறேன் என்று சொல்லி எனக்கு உதவியிருக்கார்,அவரிடம் போய் எனக்கும் இப்படி ஒரு வாய்ப்பு வருகிறது அதனால் சென்னையில் இருக்கப்போகிறேன் என்று சொல்லமுடியும் என்று எதிர் கேள்வி கேட்டேன்.
சரி,நீ சென்னை வா மற்றதை பிறகு பேசிக்கொள்ளலாம் என்றான்.அதற்கு முன்பே, என்னிடம் ஒரு வேலை வந்திருக்கு அதை நான் செய்ய இஷ்டப்படவில்லை,நீ எடுத்து பண்ணு என்றான்.அதன் தொடர்ப்பில் நாம் போய் அந்த ஓனரை பார்த்து பேசுவோம் அதற்கு பிறகு வேலை செய்வதைப்பற்றி முடிவு செய்வோம் என்றான்.நானும் பார்ப்போம் என்றேன்.
மச்சினர் குடும்பத்துடன் இந்த விஷயத்தை கலந்துரையாடினேன்,அவர்களும் நண்பனின் யோஜனைக்கு ஆதரவாகச்சொன்னார்கள் ஆனால் எனக்கு மட்டும் அவ்வளவாக உடன்பாடு இல்லை.முதலில் துபாய் பார்டிக்கு கொடுத்த வாக்கை காப்பாற்றமுடியாது,இரண்டாவது என்னுடைய நடவடிக்கைகளில் இருக்கும் உண்மை பெரும்பாலும் மறைந்துவிடுமோ என்ற அச்சம்.காலை எழுந்தது முதல் படுக்கும் வரை வகை தொகையில்லாமல் பொய் சொல்லவேண்டும்,சொல்லிச்சொல்லியே நான் அப்படியே எதிர்மறையாக மாற நிறையேவே சான்ஸ் இருக்கிறது போல் எனக்கும் பட்டது,படுகிறது.
மறு நாள் சென்னை திரும்பியவுடன் கலந்து பேசி அந்த ஓனரை சாயங்காலம் 41/2 மணிக்கு சந்திப்பதாக ஏற்பாடு செய்துகொண்டோம்.
வீட்டுக்கு வந்து காரில் இருவரும் ஒன்றாக சென்றோம்,அப்போதே வேலைவிபரங்கள் மற்றும் வேலை ஆட்களை எப்படி வைத்துக்கொள்வது போன்ற யோஜனைகளை சொல்ல ஆரம்பித்தான்.எல்லாம் முடிந்து அந்த வேலை செய்யப்போகும் வீடு வந்து இறங்குவதற்கு முன்பு “இந்த வேலை கிடைத்தால் துபாய் வேலையை என்ன செய்வதாக உத்தேசம்?” என்று கேட்டான்.அவர்களிடம் கேட்டு தான் முடிவெடுக்கமுடியும் என்று சொன்னேன்.
உள்ளே போனோம் வீட்டின் முதலாளியை பார்த்து பேசி 100% சதவீதமாக இருந்த பணி கடைசியாக 30% க்கு வந்து நின்றது.பண விபரம் ஒப்புக்கொண்ட பிறகு எப்போது வேண்டுமானலும் வேலையை ஆரம்பிக்கலாம் என்றார்.மற்ற விபரங்கள் பேசி முடித்து வெளியில் வந்தோம்.
திரும்பவும் பேச்சு துபாய் நிறுவனத்தைப்பற்றி வந்தது.அவனே ஒரு யோஜனையையும் சொன்னான்.உன்னுடைய வருங்கால முதலாளி தான் நல்லவர் என்கிறாயே அவரிடமே போய் நிலைமை இப்படி இருக்கு உங்கள் Suggestion என்ன? என்று மெயில் கொடு என்றான்.அவர் பதில் மூலம் அவருடைய மனஓட்டத்தையும் கம்பெனி நிலவரத்தையும் தெரிந்துகொள்ளலாம் என்றான்.ஒரே கல்லில் இரு மாங்காய்.இதுக்கு பேர் தான் குயுக்த்தி என்பது இதெல்லாம் எனக்கு அவ்வளவு சீக்கிரம் வராது.
இந்த யோஜனை நன்றாக இருந்ததால் அன்றிரவே அவருக்கு ஒரு மின்னஞ்சல் அனுப்பினேன்.
மறுநாள் காலை அவரிடம் இருந்து பதில் கீழ்கண்டவாறு.
Dear Kumar,
There are limitless oppurtunities, especially so when the world that we are working in is 'growing'. In fact one will never know whether a correct route has been chosen until one looks back years down the road.
This is life, which should be guided by one's set of values.(வாழைப்பழத்தில் ஊசி)
We had waited for you and if you do not show-up, this will greatly affect our resource planning. This, ultimately has to be your choice.
சிகப்பில் கோடிட்டு காண்பித்துள்ளதை படித்தவுடன் ஆடிட்டேன்.மறு பேச்சிலாமல் , நான் சொன்ன தேதியில் வந்து Join பண்ணுகிறேன் என்று பதில் மின்னஞ்சல் கொடுத்தேன்.
9 comments:
Ahaa.. Supernga..
வருகைக்கு நன்றி விஜய் பாலாஜி.
// This is life, which should be guided by one's set of values. //
Gr8 words. Often we get diverted in life by some attractions. It is us who decide who we wants to be :)
// This is life, which should be guided by one's set of values. //
Gr8 words. Often we get diverted in life by some attractions. It is us who decide who we wants to be :)
சரியாகச்சொன்னீங்க நாதாஸ்.
வழக்கம்போல், சுவைக்கு பஞ்சமில்லை!
ஜீவா இது வெறும் தடுக்கல் தான்... இன்னும் இருக்கு.
நன்றி
குமார்,
பலசமயம் முடிவெடுக்க முடியாமல் திணறிவிடுவோம், இருந்தாலும் ஒரு முடிவு எடுப்போம். எதிர்காலத்தில் நாம அன்று எடுத்த முடிவு சரியானது என்றே தெரியும்.
நாம என்ன செய்யப் போகிறோம் என்பது கேள்வியாக நிற்பதும், அதில் நம் முடிவென்பதும் ஒருவித மாயைத்தான், ஆனால் நடப்பது சரியாகவே நடந்திருக்கும்.
நான் சொல்வது சரியா ?
வாங்க கோவி
நம்மால் இரண்டு வழிகளில் போய்,எது சரி என்பதை தெரிந்துகொள்ள முடியாததால் (12B படம் மாதிரி) நம் முடிவை சரி என்று முடிவெடுத்து போக வேண்டியது தான்.என்ன? அது நம் கேரக்டரை மோசப்படுத்தாமல் இருக்கனும்.
அவர் அந்த வரியை எழுதாமல் இருந்தால் இப்போது சென்னையில் இருந்துகொண்டிருப்பேன்.
Post a Comment