Wednesday, August 27, 2008

அழகு “மதுரை”

ஒவ்வொரு தடவையும் ஊருக்கு போகும் போது மதுரை மீனாட்சியை பார்த்துட்டு அப்படியே “அய்யர்” கடையில் அல்வா சாப்பிட்டுவிட்டு முடிந்தால் இரவு தெருவோரக் கடையில் இட்லி சாப்பிட்டு விட்டு வரனும் ஆசைதான், ஆனால் அங்கு போனதும் எதிர்பார்க்காத வேலைகள் வந்துவிடும்,அதோடு சரி.சென்னையை விட்டு வெளியே போகமுடியாது.அதற்குள் விடுமுறை முடிந்து ஊருக்கு கிளம்பும் நாளும் வந்து ஆளை விரட்டி இங்கு கொண்டுவந்து போட்டுவிடும்.

நேற்று பிபிசி யின் இந்தியா பற்றிய விவரனையில் மதுரை காட்டினார்கள் அப்படியே மயங்கிட்டேன்,நீங்களும் பார்த்து மகிழுங்கள்.

மதுரையில் இருந்து நம்மிடையே பழம் வலைப்பதிவர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள்,அவர்களுக்காகவும் என்னைப்போல் பார்க்காதவர்களுக்காவும் கீழே உள்ள சலனப்படம்.



நன்றி:பிபிசி.

7 comments:

Anonymous said...

anbu Kumar,
this post made me so nastalgic for Madhurai. the presenter must really love MDU. I could almost smell mallippoo.
thank you. vallimma

துளசி கோபால் said...

ஆஹா....வெள்ளையர் கண்களின் வழியா மதுரை:-)))
நம்மூர் நகைக்கடைகள் அவரையும் ஒரு வழி பண்ணிருச்சு பாருங்க!!!

என்ன இருந்தாலும் ..... கோபுரங்களின் அழகே அழகு.

கோபால் ஊர் மதுரைப்பக்கம்தான்.

நன்றி குமார்.

ஆமாம். இன்னும் நீங்க கிளம்பலையா?

வடுவூர் குமார் said...

வாங்க வல்லியம்மா
இவரோட படைப்புகளை பிபிசி யில் அருமையாக இருக்கு.

வடுவூர் குமார் said...

வாங்க துளசி
முடிந்தால் இதனுடன் வரும் மேலும் பல இடங்கள் நம்மை ஆச்சரியப்படவைக்கின்றன.

வல்லிசிம்ஹன் said...

மதுரையைப்பத்தி ஆங்கிலத்தில் பின்னூட்டமிட்டதுக்கு வருத்தமுங்கோ.
இப்ப தமிழ் வந்திடுத்து.
பிபிசி வாழ்க.
யூ டுயூப் வாழ்க,. வழங்கிய குமாரும் வாழ்க.

Tech Shankar said...

மதுரை மதுரைதாங்க. அருமை

வடுவூர் குமார் said...

வாங்க தமிழ்நெஞ்சம்
பிபிசியின் அருமையான படப்பிடிப்பு.