Tuesday, May 13, 2008

தடுப்புச்சுவர்

தடுப்புச்சுவர் - இது கட்டுமானத்துறையில் உள்ள ஒரு முக்கியமான வேலை.

சரிவில் வீடு கட்டுவதற்கோ,மண் சரிவை தடுப்பதற்கோ,சாலை,ஆற்றை கடக்கும் இடம் அல்லது ஆற்றின் கரை மேலும் சரியாமல் இருக்க கான்கிரீட் மூலம் தடுப்புச்சுவர் அமைப்பது தான் கடந்த கால வரலாறு.ஆனால் இப்போதெல்லாம் விதம் விதமான முறைகள் வந்துவிட்டது.தமிழ்நாட்டில் இப்போது நடந்துகொண்டிருக்கும் சாலைப்பணிகளை பார்வையிட நேர்ந்தால் பாருங்கள்,செங்கல் சுவர் மாதிரியே கான்கிரீட் பலகை போன்ற அமைப்பில் தடுப்புச்சுவர்கள் கட்டுகிறார்கள்.

சில மாதங்களுக்கு முன்பு நண்பர் காண்பித்த கீழ்கண்ட முறை அதிசியக்க வைக்கிறது.எந்த இடத்தில் தடுப்புச்சுவர் கட்டவேண்டுமோ அங்கு கிடைக்கும் மண்ணை வைத்து இந்த மூட்டையில் கட்டி இப்படி அடுக்கடுக்காக வைத்துவிடவேண்டும்,அவ்வளவு தான்.மூட்டைகளுக்கு நடுவே சிறிய பிடிப்பு ஏற்படுத்த இரும்பு வலை ஒன்றைவைத்துவிடுவார்கள்.

இந்த மூட்டை கூட நெகிழி கிடையாது,சுற்றுப்புறத்துக்கு கேடு விளைவிக்காத ஒரு பொருள்.இந்த மூட்டை கருப்பாக இருப்பது பிடிக்கவில்லை என்றால் அதன் மீது செடிகளின் விதைதூவி பச்சையாகவும் மாற்றலாம்.

இங்கு சொடுக்கி அவர்களைப் பற்றிய மேல் விபரங்களை காணலாம்.

எனக்கு கிடைத்த சில படங்களை இங்கு பாருங்கள்.



6 comments:

வடுவூர் குமார் said...

துளசி
இப்ப முயலுங்கள்,சரியாகிறதா என்று பார்ப்போம்.

Anonymous said...

நல்ல ஐடியாதான் இது
. கண்ணுக்கும் குளிர்ச்சியா இருக்கும்.

ஒருமுறை ஆஸ்தராலியாவில் கடற்கரை ஒன்றில் மணலால் இப்படி ராட்சஸ மூட்டைகள் செஞ்சு போட்டுவச்சுருந்தாங்க
. நாங்கள் அதுமேலே ஏறி நடந்தெல்லாம் போனோம்.

கரைவரை அலை
வந்து போகாமல் இருக்கும் தடுப்புச் சுவர்.

இன்னொண்ணு இங்கே குன்றுப்பகுதிகளில் வீடு வைக்கும்போது
ரீட்டெய்ன் வால் கட்டணும். அதுலே ஒரு வீட்டுலே இது இடிஞ்சுபோய் மண்ணு சரிய ஆரம்பிச்சு கீழே உள்ள தளத்தில் மூணுநாலு வீடுகளைத் தாற்காலிகமா இவாக்குவேட் பண்ணும்படியா ஆச்சு.
--
என்றும் அன்புடன்,
துளசி

திவாண்ணா said...

குமார், பின்னூட்டப் பெட்டி முழுதும்தெரியவில்லை. ஸ்க்ரால் செய்ய வேண்டி இருக்கு.
நெகிழியாக இருந்தால் இன்னும் கொஞ்சம் நாள் நிலைக்கும் இல்லையா?

வடுவூர் குமார் said...

வாங்க திவா
செட்டிங்கில் பாப் அப்தேவையில்லை என்று போட்டால் இப்படி வருகிறது.
துளசி போன்று சிலரும் பின்னூட்டப்பெட்டியே வரமாட்டேன் என்கிறது என்றார்களே என்று மாற்றிப்பார்த்தேன். ஹூம் இதுவும் இடிக்குதா!! தேவுடா...

நெகிழி பயண்பாட்டை குறைத்துக்கொண்டிருக்கும் வேளையில் அதை இங்கும் நுழைத்து அதற்கு வியாபாரத்தை நாமே ஏற்படுத்தக்கூடாதல்லவா??
அதற்காக கூட இருக்கும்.

Anonymous said...

//இந்த மூட்டை கருப்பாக இருப்பது பிடிக்கவில்லை என்றால் அதன் மீது செடிகளின் விதைதூவி பச்சையாகவும் மாற்றலாம்//

சிறப்பான யோசனையாக படுகிறது.

நாளடைவில் இந்த மூட்டை பை அல்லது நைலான் பாதிப்படையாதா?

பின்னோட்டம் போட கொஞ்சம் சிரமமாக இருக்கிறது

கிரி

வடுவூர் குமார் said...

வாங்க கிரி

பின்னூட்டப் பெட்டியை மாற்றிவிடுகிறேன்.

ஒரு குறிப்பிட்ட வருடங்களுக்கு பாதிப்பு இருக்காது.அதிக பாரம் வராத இடங்களுக்கு இது செலவில்லாமல் செய்யக்கூடியது.