Saturday, May 24, 2008

பாதுகாப்பான நடைபாதை

தினமும் இந்த இடத்தை கடந்து தான் வேலைக்கு போக வேண்டிவரும்,அதனால் இங்கு நடைபெரும் வேலைகளை தினமும் கண்காணித்துக்கொண்டிருப்பேன்.இன்றைக்கும், 13 வருடங்களுக்கு முன்பு நான் இங்கு வந்தபோது இருந்த நிலைமையை பார்க்கும் போது ஆச்சரியப்படாமல் இருக்க முடியவில்லை.

கீழே உள்ள படத்தை பாருங்கள்.



வெவ்வேறு நிலையில் வேலைசெய்யவேண்டி வரும்போது இந்த மாதிரி நடைப்பாதை அமைப்பது தான் வேலையை சுலபமாக செய்ய ஏதுவாகும்.அப்படி வேலை செய்தாலும் செங்கல் மற்றும் வேலை சாதனங்கள் தவறி விழாமல் இருக்க அந்த "Toe Board".

ஓரளவு தூசி மற்றும் சாமான்கள்/ஆட்கள் கீழே விழாமல் இருக்க சுற்றுப்புற வலை.

ஒரு நிலையில் இருந்து மற்றொரு நிலைக்கு போக ஏணி.

இவ்வளவும் எதற்கு? இங்கு வேலை செய்ய வரும் பல நாட்டு பணியாளர்களின் நலனை காப்பாதற்கு, அதோடு உலகலவில் சிங்கையின் பாதுகாப்பு தரத்தை உயர்த்தவும் இது உதவும்.

நான் வந்த போது (13 வருடங்களுக்கு முன்பு) இந்த மாதிரி எதுவும் இல்லை,விபத்துகளின் எண்ணிக்கை ஏற ஏற அரசாங்கம் உடனடி நடவடிக்கை எடுத்து இன்று இந்த நிலைமைக்கு கொண்டுவந்துள்ளது.

இதே மாதிரி சிலவற்றை சென்னையில் சில கட்டுமானத்துறை இடங்களில் பார்க்கமுடிந்தது.

2 comments:

துளசி கோபால் said...

ஒரு உயிரின் மதிப்புத் தெரிஞ்சவங்க இப்படிச் செய்யணும்தான்.

பாதுகாப்பு என்பது முக்கியமாச்சே

வடுவூர் குமார் said...

வாங்க துளசி

இதற்காக பட்ஜெட்டில் ஒரு கணிசமான பகுதியை ஒதுக்கி அதை நடைமுறைபடுத்துகிறார்கள்.

பாராட்டவேண்டியவை.