Tuesday, July 31, 2007

சிங்கைத்தமிழ்

தமிழ் சிங்கப்பூரில் ஒரு அரசாங்க மொழி.
இங்குள்ள தமிழர்கள் வீடுகளில் அவ்வளவாக பேச்சுத்தமிழ் இல்லை என்றாலும்,பள்ளிகளிலும் மற்ற பொது இடங்களிலும் அதை மறக்காமல் இருக்க இங்குள்ள அரசாங்கம் பல பல முயற்சிகளை மேற்கொண்டுவருகிறது.
இங்குள்ள மக்களுக்கு தமிழ் மொழி மறந்து போகாமல் இருக்க வானொலியின் பங்கு மறக்க/மறுக்க முடியாதது.24 மணி நேரமும் ஒலி 96.8 பண்பலையில் தமிழ் ஒலித்துக்கொண்டு இருக்கிறது.
வெளிநாட்டு தமிழர்களுக்கு இதைவிட்டால் தமிழை கேட்பதற்கு ஒரு நல்ல விடயம் கிடையாது.
பாட்டுக்கு பாட்டு,உலக நடப்புகள்,உள்ளூர் விஷயங்கள் என்று கலந்து கட்டி கொடுப்பதால் 400 வெள்ளி போட்டு ipod வாங்க வேண்டியதை தவிர்க்க முடிந்தது.
உலகத்திலேயே சிறந்த MP3 பிளேயர்- வானொலிதாங்க.
இப்படிப்பட்ட வானொலி "வெளிச்சம்" என்ற நிகழ்ச்சியில் தெள்ளத்தெளிவான தமிழை நாம் அருந்த கொடுத்துக்கொண்டு இருக்கிறார்கள்.அதில் ஒன்றை இங்கே கேட்போம்.
இனங்களுக்கிடையே நல்லுறவு
நன்றி: ஒலி 96.8.

Get this widget | Share | Track details

5 comments:

CVR said...

நல்லாத்தான் இருக்கு நிகழ்ச்சி!! :-)

Unknown said...

ஒலிக்களஞ்சியம் 96.8 இப்போ ஒலி ஒலி உங்கள் வானொலியா?

நான் சிங்கப்பூரில் இருக்கும்போது, விரும்பி கேட்கும் வானொலி!

வடுவூர் குமார் said...

ஓ! இங்க இருத்திட்டுத்தான் போனீர்களா?
இப்பவும் இணையத்தில் கேட்கலாம்.24 மணி நேர சேவையாகிவிட்டது.தொடுப்பு இங்கேயே இருக்கு.

யாதும் ஊரே said...

சிங்கையில் இருந்தவரை ஒலி 96.8ம், மலேசியாவில் இருந்தவரை ராகாவும் விரும்பிக் கேட்டவை. ஒலி 96.8 அமெரிக்காவில் இனையத்தில் வராது.

"We regret to inform that users using US registered IP addresses will not be able to access our internet simulcasts due to unresolved copyright issues."

சிவகாசி ஸ்ரீனிவாசன்

வடுவூர் குமார் said...

வாங்க சிவகாசி ஸ்ரீநிவாசன்
அப்படியா! முதலில் நன்றாக கேட்டுக்கொண்டிருந்த்தாக சொன்னார்கள்.என்னவாயிற்று என்று தெரியவில்லை.அவர்களிடம் தெரியப்படுத்துகிறேன்.