Saturday, July 21, 2007

உதவவில்லையா? வெளியே போ!!

கீழே உள்ள படத்தை பாருங்கள்.இங்கு நடந்த நிகழ்ச்சி.
பேருந்தில் இருந்து இறங்கிய ஒரு பயணிக்கு தலையில் அடி,அதுவும் பேருந்து நிறுத்தத்தில் உள்ள இருக்கைகளில் மோதியதால ஏற்பட்டதாம்.
முகம் மற்றும் பல இடங்களில் ரத்த சொட்டலுடன் இறங்கிய பேருந்து ஓட்டுனர் (இங்கு கேப்டன்) யிடம் உதவி கேட்க,அவர் கண்டுகொள்ளாமல் விர் என்று ஓட்டிப்போய்விட்டாராம்.
பிறகு அங்கு வந்த பிலிபைன் சுற்றுப்பயணி ஆம்புலன்ஸ்க்கு கூப்பிட்டு உதவி செய்தாராம்,இதற்கிடையில் அடுத்த வந்த பேருந்து ஓட்டுனர் தன் பேருந்தில் இருந்த முதல் உதவிப்பெட்டியில் இருந்து தேவையான பொருட்களை கொடுத்து உதவியிருக்கிறார்.
இது எப்படியோ அந்த பேருந்து கம்பெனிக்கு தெரியவந்து,உதவி கேட்டும் மறுக்கப்பட்ட அந்த ஓட்டுனரை வீட்டுக்கு அனுப்பிவிட்டார்கள்.
அடிபட்டவர் இதை கேட்டு மிகவும் வருத்தப்பட்டு அவரை மீண்டும் வேலைக்கு சேர்த்துக்கொள்ளுமாறு விண்ணப்பத்தை பஸ் நிறுவனம் நிராகரித்துவிட்டதாம்.
எப்படி இருக்கு பாருங்க !!

படத்தை பெரிதாக்கி பார்க்க அதன்மீது சொடுக்குங்கள்.


நன்றி: தி ஸ்டிரெய்ட்ஸ் டைம்ஸ்.

3 comments:

Subramanian said...

சட்டத்தின் ஆட்சி நடந்தால் மட்டும் போதாது.சட்டத்தின் ஆட்சி தான் நடக்கிறது என்று குடிமக்கள் நினைக்க வேண்டும்.நம்பவேண்டும்.சிங்கப்பூரில் நடக்கிறது.நம் நாட்டிலோ அரசியல் வாதிகளின் கையில் சிக்கிச் சீரழிகிறது.அது சரி.சிங்கப்பூரில் உள்ள அனைத்து நீதிமன்றங்களில் நிலுவயில் உள்ள சிவில் கிரிமினல் வழக்குகளின் மொத்த எண்ணிக்கையே 1000க்குள் தான் உள்ளதாமே.அதுவும் ஓராண்டிற்கு மேற்பட்ட வழக்குகளே நிலுவையில் இல்லையாமே?அப்படியா?தெரிந்தால் அருள் கூர்ந்து தெரிவியுங்களேன்.

வடுவூர் குமார் said...

வாங்க திண்டுக்கல் சர்கார்
நிலுவையில் உள்ள வழக்குகள் விபரம் தெரியவில்லை.வலைப்பக்கம் இருக்கும் தெரிந்தவுடன் சொல்கிறேன்.
நேற்று அன்னியன் படம் 2 வது தடவை பார்த்தேன்.
அதில் சொல்லுவாரே "நம்மை சுத்தி இருக்கிற நாடுகள் மட்டும் எப்படி இந்த அளவுக்கு வளர்ச்சி காணுகிறது?" என்று.
இதற்கு விடை யாருக்காவது தெரியுமா?
நினைக்க நினைக்க "ஆத்துப்போகிறது"!!

வெங்கட்ராமன் said...

************************************
அன்னியன் படம் 2 வது தடவை பார்த்தேன்.
அதில் சொல்லுவாரே "நம்மை சுத்தி இருக்கிற நாடுகள் மட்டும் எப்படி இந்த அளவுக்கு வளர்ச்சி காணுகிறது?" என்று.
இதற்கு விடை யாருக்காவது தெரியுமா?
நினைக்க நினைக்க "ஆத்துப்போகிறது"!!
************************************

எனக்கும் தான்.