சிங்கப்பூர் தமிழ் மக்கள் அதுவும் தமிழுக்கென்றே இருக்கும் ஒரே ஒரு சேனலை(வசந்தம் சென்ரல்) பார்க்கும் மக்களுக்கு இந்த வார்த்தை தெரியாமல் இருக்க வாய்ப்பில்லை.
சின்டா எனப்படுகிற (Singapore Indians Development Association) குழுமம் சார்ப்பில் வெளியிடப்படுகிற நிகழ்ச்சி தான் இது.உள்ளூர் இந்தியகளின் நிலமையை மேம்படுத்த, அவர்களின் கல்வித்தரத்தை உயர்த்த,குறைந்த சம்பளம் பெறுபவர்களின் வாழ்கை தரத்தை மேம்படுத்த,கணினி இல்லாதவர்களுக்கு குறைந்த விலையில் கணினி கொடுப்பது போன்ற பல சிறந்த வேலைகளை செய்துவருகிறார்கள்.அவர்கள் செய்யும் பல பணிகளில், பள்ளியில் படிக்கும் இந்திய மாணவர்களுக்கு தேர்வில் இன்னும் நன்றாக செய்து அவர்களை மென்மேலும் உயர்த்த "Project Gift" என்ற திட்டத்தை உருவாக்கி குறைந்த மதிப்பெண்கள் வாங்கும் மாணவர்களை அதில் சேர்த்து தக்க ஆசிரியர்கள் மூலம் தேவையான பாடங்களை சொல்லிக்கொடுத்தும்,தேர்வுகளை எப்படி கையாளவேண்டும் போன்ற பல நல்ல விஷயங்களை சொல்லி மாணவர்களை தேர்வுக்கு தயார்படுத்துகிறார்கள்.அதற்கான பலன்கள் நன்றாகவே தெரிய ஆரம்பித்தது.என் மகனும் இதில் படித்தான்.
இந்த மாதிரி விஷயங்களை வெறும் சில விளம்பரங்கள் மூலம் மட்டும் இந்தியர்களை கவரமுடியாது என்று நினைத்து, மீடியா கார்ப் தொலைக்காட்சி மூலம் சனிக்கிழமை இரவு 7.30 யிலிருந்து 8.30 மணி வரை ஒரு நிகழ்ச்சியை படைக்க ஆரம்பித்தார்கள்.
இந்த நிகழ்ச்சியின் ஹீரோ யார் தெரியுமா? அதில் வரும் பிள்ளைகள் என்றாலும் நிகழ்ச்சி தயாரிப்பாளர் திரு.கலைச்செல்வன். சும்மா சட்டை கலரே ஆளை அடிக்கிற மாதிரி இருக்கும் அதோடு அவர் சொல்லும் பாங்கு தூங்குகிறவனை கூட எழுப்பிவிட்டு விடும்.நாற்பத்தையை தாண்டிய எனக்கே ரத்தம் சும்மா ஜிவ்வுன்னு ஏறும் என்றால் பாருங்களேன்.அதோடு ஒவ்வொரு வாரமும் ஒரு தனித்துவனமான ஒரு மாணவனை தேடிக்கண்டு பிடித்து அவனுடைய நேர்காணலையும் ஒளி பரப்புவார்கள். வாழ்கையில் விழுந்தவர்கள் எப்படி எழுந்து நின்றார்கள் என்று சொல்வார்கள்.பல கதைகள் பல மனிதர்கள்.
கடந்த 2 வருடங்களாக வருகிறது.போன வருடம் தவறாமல் பார்ப்பேன்.சமீபத்தில் நேரமின்மை காரணமாக பார்க்கமுடியவில்லை. 2 வாரங்களுக்கு முன்பு இந்த நிகழ்ச்சியை காணமுடிந்த போது சொல்லவொன்னா ஆச்சரியம்.அவ்வளவு நன்றாக இருந்தது.முன்னேற துடிக்கும் இளைஞர்கள் நிச்சயமாக பார்க்கவேண்டும்.அதோடில்லாமல் அவ்வப்போது இந்த நிகழ்ச்சியைப்பற்றி உங்கள் கருத்துக்களை இந்த எண்ணில் சொல்லுங்கள் என்று வேறு வரி விளமபரம் ஒடிக்கொண்டிருந்தது.
போன வருடம் என்று நினைக்கிறேன்.. இந்த நிகழ்ச்சியை புகழ்ந்து அந்த தொலைக்காட்சி நிறுவனத்துக்கு மின்மடல் அனுப்பினேன்,பதிலே இல்லை.ஏகப்பட்ட மின் அஞ்சல் போகும் போல் இருக்கு அதான் கண்டுக்கவே இல்லை.ஒரு படைப்பாளிக்கு,ரசிகனின் கைத்தட்டல் மற்றும் தோளில் ஒரு செல்ல தட்டு போல ஊக்கம் எதுவும் கிடையாது.அது நான் கொடுக்க நினைத்தபோது சரியான நபருக்கு போகவில்லையோ என்ற மனக்குறை இருந்தது.காலப்போக்கில் மறந்துவிட்டேன்.
இந்த முறை சின்டாவை தொடர்ப்பு கொள்ளவும் என்று போட்டிருந்ததால் அவர்களை தொடர்பு கொண்டு என் எண்ணங்களை சொல்லி ஒரு மின் அஞ்சல் போட்டேன்.சில நாட்களிலேயே பதிலும் கிடைத்தது.அதில் நான் சொன்ன ஒரு விஷயம் இது தான்.
தன்னம்பிக்கை அதுவும் மாணவர்கள் "நாளை தலைவர்கள்" க்கு ஏற்படுத்துவது மிக மிக அவசியம்.அதுவும் சிங்கை இந்திய மாணவர்களுக்கு அதைவிட அவசியம்.நிகழ்ச்சியின் தரம் கருதி அதன் வீச்சு சிங்கையுடன் நின்றுவிடாமல் போக அதை ஒரு VCD/DVD யாகவோ போட்டால் இன்னும் பல பேர் பயண்பெற முடியுமே! என்றும் , அப்படி இயலாத போது youtube/google Video வில் ஏற்றிவிட்டால் அதன் வீச்சு உலகம் முழுவதும் பரவுமே! என்று கேட்டிருந்தேன்.(என் மகனுக்கும் அனுப்பலாம் அல்லவா?)
அதற்கான பதிலும் கொடுத்திருந்தார்கள்.கூடிய விரைவில் இதை இணையத்திலும் ஏற்றப்போகிறார்களாம்.
சுட்டி கிடைத்தவுடன் சொல்கிறேன்.பார்த்து மகிழுங்கள்.
இந்தியருக்கு உதவும் சின்டா.. உங்கள் பணி வாழ்க வளர்க.
2 comments:
சின்டா கொடுக்கும் கணினி விண்டொசா அல்லது லினக்சா? நான் ஆப்பில் விசிறி.
சின்டாவுக்கு வாழ்த்துக்கள்!
Coimbatore தம்பி
வாங்க கோயம்புத்தூர் தம்பி
அனேகமாக வின்டோசாகத்தான் இருக்கும்.ஒன்று மட்டும் நிச்சயம் அது "ஆப்பிள்" கிடையாது.
Post a Comment