இந்த கேன்டின் கட்டுமானப்பணி மிக சாதாரணமானது ஆனால் மிகவும் இட நெருக்கடிக்கிடையில் செய்யவேண்டியிருந்தது.காலை மற்றும் மாலை நடக்கும் பஜன்/தர்ஷன் சமயங்களில் வேலையை நிறுத்த வேண்டும்.அருகருகே உள்ள கட்டிடங்களுக்கு எவ்வித சேதாரம் இல்லாமல் வேலை செய்யவேண்டும் என்ற நெருக்கடி வேறு.இதெல்லாம் எங்களுக்கு பழக்கமான வேலை என்பதால் அவ்வளவாக கஷ்டம் தெரியவில்லை.
என்னை இங்கு வரச்சொல்லிய வேலை ஆரம்பிப்பதில் தாமதம் ஏற்பட்டிருந்ததால்,அது சரியாகும் வரை இந்த கேன்டின் கூரை வேலையை பார்க்கும்படி பணிக்கப்பட்டேன்.
இது முன்கூட்டிய கான்கிரீட் போட்டு மேல் எடுத்து வைக்கும் முறையான (PreCast) முறைப்படி கட்ட உத்தேசித்திருந்தார்கள்.நான் இந்த வேலையை ஏற்கனவே செய்திருந்ததால் அதற்கான வேலையில் மூழ்கினேன்.
அதற்கு தேவையான மோல்ட் செய்து முதல் சிலாப் போட்டு எடுக்கும் வரை தான் பிரச்சனை.முதல் சிலாப் உடையாமல் வந்துவிட்டால்,அப்புறம் வந்து சும்மா மேற்பார்வை மட்டும் செய்தால் போதும்.
இந்த மோல்ட் என்பது மெழுகு பொம்மை தயாரிக்க அதன் உருவத்தின் பிரதி எடுத்து அதன் மேல் மெழுகை ஊற்றி எடுப்பார்களோ அதே டெக்னிக் தான் இங்கும் கடைப்பிடிக்கப்படுகிறது.
இது சில சமயம் பிளைவுட் அல்லது செங்கல்லில் செய்து சுற்றி கொஞ்சம் கான்கிரீட் போட்டு பிறகு மெழுகை கரைத்து ஊற்றி நன்றாக பாலிஸ் செய்வார்கள்.கான்கிரீட் போடுவதற்கு முன்பு இதற்கென்று உள்ள எண்ணையை ஊற்றி போடுவார்கள்.இந்த எண்ணெய் கான்கிரீட்டுக்கும் மோல்டுக்கும் இடையே அதிக உராய்வு இல்லாமல் செய்து,கான்கிரீட்டை மேல் தூக்கும் போது இலகுவாக்கும்.
இதில் மிக முக்கியமாக பார்க்கவேண்டியது,மோல்டின் அத்தனை பக்கங்களும் கீழ் பக்கத்தைவிட மேல் பக்கம் குறைவாக இருக்கவேண்டும்.
அதற்கடுத்தது எல்லா பக்கங்களும் வழவழப்பாக இருக்கவேண்டும்.எவ்வளவுக்கு எவ்வளவு வழுவழுப்பாக இருக்கோ அவ்வளவுக்கு நல்லது.
அதற்கடுத்தது இப்படி போட்ட கான்கிரீட் தூக்குவதற்கு ஏற்ற ஹ¥க் இருக்கவேண்டும்.
குடுத்திருக்கும் வரைபடத்தில் இருக்கும் இடத்திலேயே பொருத்தினால் சரியாக இருக்கும்.இந்த ஹ¥க்கின் மேல் பகுதி கான்கிரீட்டின் வெளிப்புறத்தில் இருந்து மிக குறைந்த பட்சமாக 30MM இருக்க வேண்டும்.
அதி முக்கியமாக போட்ட கான்கிரீட் ஓரளவுக்கு இறுகியிருக்கவேண்டும்.இதற்காக சில சமயம் நீராவியில் கூட குளிப்பாட்டுவார்கள்.இது கான்கிரீட் இறுகும் நிலையை மேம்படுத்தும் ஆனால் செலவு பிடிக்கும்.
தேவைக்கேற்ப ஒன்று அல்லது இரண்டு மோல்ட் போட்டு வேலை பார்ப்போம்.அதை தூக்குவதற்கு கிரேன் இருக்கும்.பக்கத்திலேயே,போட்ட சிலாபுகளை ரிப்பேர் மற்றும் மேம்படுத்துவதற்காக பல மேடைகள் இருக்கும்.
இந்த வேலை அவ்வளவு தொந்திரவு கொடுக்காமல் முடிய,நாங்கள் எதிர்பார்த்த வேலையும் வந்தது.
மேலும் சில கலர் படங்கள் (Precast) அடுத்த பதிவில் வரும்வாங்க அடுத்த பதிவுக்கு
6 comments:
மிகத் தெளிவாக புரியும்படியாக எழுதி வருகிறீர்கள்!
நன்றி.
வாங்க எஸ். கே. ஐயா
பாராட்டுக்கு நன்றி.
சென்னையில் ராமருக்காகச் சிறு கோயில் கட்டுகிறார்களாம்.அதற்காக
'ராம், ராம்' ஏன்று ஒரு லெட்சம் தடவை - அந்தப் பகுதி மக்களை
நோட்டுப் புத்தகங்களில் எழுதச் சொல்லி, வாங்கி - அவற்றையெல்லாம்
அஸ்திவாரத்தின் அடியில் புதைத்துக் கட்டிடத்தை எழுப்பப் போகிறார்களாம்
- கேள்விப்பட்டது.
உங்கள் பதிவைப் படித்தவுடன் அதுதான் நினைவுக்கு வந்தது.
தவறு என்று அவர்களுக்கு யார் எடுத்துச் சொல்வது?
இங்கே இப்பெல்லாம் வணிகவளாகங்கள், இன்னும் பெரிய கட்டிடங்கள் எல்லாம்
PreCast முறையிலெயே சுவர் எல்லாம் வர்றதாலெ வேலைகள் மடமடன்னு நடந்துருது.
வாங்க சுப்பையா சார்.
அதுக்கு என்று ஒரு பாதுகாப்பு அறை கட்டி அதன் மேல் கட்டிடத்தின் பாரம் வராமல் பாதுகாத்தால் அவர்கள் நம்பிக்கையில் நாம் கையை வைக்க வேண்டிய அவசியம் வராது.
கான்கிரீட்டின் உள்ளே கலந்து போடு என்றால் தான் பிரச்சனை.
வருகைக்கு நன்றி சார்.
ஆமாங்க துளசி
இந்த முறையில் இங்கு பல கன்டோமினியம் கட்டுகிறார்கள்.
வேலை சுலபமாக முடிகிறது.
தரக்கட்டுப்பாடு சரியாக வைக்கமுடிகிறது.
ஆணியெல்லாம் அடிக்கமுடியாது,டிரில்லிங் தான்.
ராத்திரி மேல் மாடியில் கடோத்கஜன் நடந்தால்,சேரை அல்லது சோபாவை இழுத்தால் நமக்கு இங்கு தூக்கம் போகும்.
என்ன பல ஆட்களின் வேலையை முழுங்கிவிட்டது.
Post a Comment