நமது வலைப்பதிவாளர் திரு.ஞானவெட்டியான் அவர்கள் பழம்பெரும் இனிய பாடல்களை அவர்களில் இந்த வலைப்பூவின் மூலம் நாம் கேட்பதற்கும் தரவிரக்கம் செய்யவும் கொடுத்து உதவி வருகிறார்.
இது பலரும் அறிந்தது தான்.
பல வெளிநாட்டு மக்களுக்கு இப்படி தரவிரக்கம் செய்து, தேவைப்படும் போது கேட்டுக்கொள்ள வசதியாக இருக்கிறது.
இருந்தாலும்,பல பாடல்களில் முதல் சில நொடிகள் ஒரு ஆங்கில வாசகம் வரும்.ஒரு முறை கேட்டால் இந்த வாசகம் சரி,பொறுத்துக்கொள்ளலாம்.பல பாடல்களை கேட்கும் போது சிறிது பொறுமை இழக்க வாய்புள்ளது.
இதை தவிர்க்க இலவசமாக ஒரு மென்பொருள் இங்கு கிடைக்கிறது.
அதை இன்ஸ்டால் செய்து,திறந்தவுடன் (கீழே உள்ள படத்தை பார்க்கவும்)
இதில்
"How Much do you want to Trim"-- "From the begining"
க்கு பக்கத்தில் உள்ள முதல் கட்டத்தில் 140~190 வரை கொடுத்து அதற்கு நேர் இருக்கும் பிளே பட்டனை அழுத்தினால்,வெட்டப்படும் இடத்தில் இருந்து ஒரு சில நொடிகள் பாட்டை கேட்கலாம்.
இந்த அளவை ஏற்றி/இறக்கி எங்கிருந்து வெட்டவேண்டும் என்று சொல்லிவிட்டு சேமிக்க வேண்டியது தான்.
பின்புலத்தில் உள்ள படம் திரு ராமனாதனின் பதிவில் இருந்து சுட்டது.
13 comments:
அன்பு குமார்,
வலையேற்றுமுன் நான் செய்யவேண்டுமா?
சற்றே தெளிவாகச் சொல்லிக்கொடுங்கள்.
ஐயா,
எனக்கு தெரிந்த வரை அது உங்கள் கையில் இல்லை.பாடலை நீங்கள் அந்த ஆடியோ பிளேயரில் ஏற்றும் போது அவர்களாக கோர்த்துக்கொள்ளும் வார்த்தைகள்,அது.
நம்மக்களுக்கு தெரியாததல்ல ,இருந்தாலும் தெரியாதவர்கள் பயண்படட்டுமே என்று தான் இப்பதிவு.
வடுவூர் குமார்,
இப்போது உங்களுக்கு எதற்கு " உலகே மாயம் வாழ்வே மாயம் " ?
:-)))
வாங்க அனானி
படத்தில் உள்ள பாட்டை வைத்து கேட்கிறீர்களா?
அதுவும் ஒரு பக்கத்தில் ஓடிக்கொண்டிருக்கிறது,என்ன செய்வது?
தகவலுக்கு நன்றி.
நானும் //ஒரு முறை கேட்டால் இந்த வாசகம் சரி,பொறுத்துக்கொள்ளலாம்.பல பாடல்களை கேட்கும் போது சிறிது பொறுமை இழக்க வாய்புள்ளது.// இந்தப் பிரச்சினையை சந்தித்திருக்கிறேன் ஞானவெட்டியான் அவர்களின் பதிவிலிருந்து பாடல்கள் கேட்கும்போது.
வருகைக்கு நன்றி சேதுக்கரசி.
பல பழைய பாடல்களில் முதல் 20 ~ 45 நொடிகளுக்கு இசை இருக்கிறது,அதனால் இந்த மாதிரி இடைச்செருகலை வெட்டினாலும் மீதி பாடலை நிம்மதியாக கேட்கலாம்.
நன்றி குமார். ஞானவெட்டியான் சார் பாடல்கள் அத்தனையும் அற்புதம்.
ஆனனல் பபடலைக் க்கேட்கும் ம்உம்முரத்தில் ம்உதலில் வ்அரும் குரலை ந்ந்ஆன் கேட்காமல் வ்இட்டு வ்இடுவே,.
நீங்கள் சொன்னது போல செய்து பார்க்கிறேன்.
'ம்யூஸிக் இண்டியாஆன்லைன்' லே இந்த சங்கடங்கள் இல்லாம நிம்மதியாப்
பாட்டு கேக்க முடியுதுங்க.
வாங்க வல்லிசிம்ஹன்
சுலபம் தான்.இந்த மென்பொருள் வின்டோ 95யிலேயே அருமையாக வேலைசெய்கிறது.
வாங்க துளசி,
ஆனா அங்கு தரவிரக்கம் பண்ணமுடியாதே?
அன்பு துளசி,
"மியூசிக் ஆன் லைன்"ல் இல்லாத பாடல்கள் என்னிடமிருக்கின்றனவே!
எடுத்துக்காட்டாக, "பட்டினத்தார், அருணகிரிநாதர்" பாடல்களும் நடிப்பிசைப் புலவர் K.R.ராமச்சமியின் திரட்டுகளும்.
// ஆனா அங்கு தரவிரக்கம் பண்ணமுடியாதே? //
உண்மைதான். ஆனால் GoldWave போன்ற மென்பொருள்களைக் கொண்டு பதிவு செய்து வைத்துக்கொள்ளலாம்.
ஆனால்,
// "மியூசிக் ஆன் லைன்"ல் இல்லாத பாடல்கள் என்னிடமிருக்கின்றனவே! //
ஞானவெட்டியான் அவர்களிடம் உள்ள பல பாடல்களைக் கேட்பதற்கு நீங்கள் கூறும் வழி நல்லதுதான்.
வைசா
வாங்க வைசா,
கோல்ட் வேவ்வா? இன்னும் முயற்சிக்கவில்லை.
தகவலுக்கு நன்றி
Post a Comment