இத்தனை நாள் நான் சொல்லிவந்தது எல்லாம் எனக்கு கிடைத்த முதல் Siteயின் அநுபவங்கள்.
(புதியவர்களுக்காக-1982 ஆரம்பத்தில் ஆந்திராவில் உள்ள தாச்சப்பள்ளி என்ற இடத்தில் நடந்தது.)
அதன் கடைசி அனுபவம் தான் இது.
தெலுங்கு கத்துக்கொண்டது.
பல மாதங்களுக்கு, சாமான்கள் வாங்குவதெல்லாம் சைகை பாஷைதான்.இல்லாவிட்டால் பேரங்காடி முறையில் கடைக்கு உள்ளே போய் தேவைப்பட்டதை எடுத்துகொண்டு கொடுப்பது,வாங்கி வருவது என்று போய் கொண்டு இருந்தது.Site யில் அவ்வப்போது வேலை செய்யும் ஆட்களிடம் பேசினாலும் முக்கால்வாசி கெட்ட வார்தைகளே கற்றுக்கொடுக்கப்பட்டது.ஏனென்றால் அவன் அந்த வார்தைகளை உபயோகப்படுத்தினால் அடிக்க போகலாம் அல்லவா?
இவ்வாறு இருந்த சமயத்தில் ஒரு நண்பன் நாங்கள் இருந்த இடத்துக்கு வந்துசேர்ந்தான்.அவனது தாய் மொழி தெலுங்கு என்பதால்,கடைத்தெருவுக்கு போகும் போது கூடிய வரை அவனுடனே சுற்றுவேன்.
ஒரு நாள் ஏதோ கடையில் நான் வாங்க தினறுவதைப் பார்த்து,ஏண்டா "நீ ஏன் தெலுங்கு கத்துக்ககூடாது?" என்று கேட்டான்.அவனுக்கு சுமாராக தமிழ் தெரியுமாதலால் ஒரு சின்ன ஒப்பந்தம் போட்டோம்.அவன் எனக்கு தெலுங்கு கற்றுக்கொடுக்க வேண்டும்.நான் அவனுக்கு தமிழ் சொல்லிக்கொடுக்கவேண்டும்.
அவன் பெயர்: திரு N.பார்த்தசாரதி.
எப்படி கத்துக்கொடுத்தான் தெரியுமா?
முதலில் சினிமா Poster மூலம் அதற்கு பிறகு ஒரு வெள்ளை பேப்பரில் ஒவ்வொறு எழுத்தையும் கொஞ்சம் பெரிதாக எழுதி அதற்கு பக்கத்தில் தமிழில் அவன் சொல்லச்சொல்ல எழுதிக்கொண்டேன்.
அதன் பிறகு தெலுங்கு பத்திரிக்கையை வைத்துக்கொண்டு அதை படிக்கச்சொல்லி திருத்தினான்.
இப்படியே தப்பும் தவறுமாக பேசி ஒரளவுக்கு கற்றுக்கொண்டேன்.கிட்டத்தட்ட 8 வருடகாலம் ஆந்திராவிலேயே கழித்ததால் தெலுங்கு "மனவாடு" ஆனார்.
போன வாரம் சிங்கப்பூரில்-சிரங்கூன் சாலையில் போய்கொண்டு இருக்கும் போது ஒரு தெலுங்கு சினிமா Posterஐ பார்க்கநேர்ந்தபோது,சிறிது நேரம் நின்று
எழுத்துக்கூட்டி படித்து பார்த்தேன்.
பரவாயில்லை!! இன்னும் மறந்து போகவில்லை.
சொல்லிக்கொடுத்த ஆசிரியர் எங்கு இருக்கிராரோ?
எங்கிருந்தாலும் வாழ்க,நண்பனே.
14 comments:
ஏமண்டி இட்ட செப்பேரு.
நேனு ஹிந்தி நேர்ச்சுக்குன்ன கத காவலனா?
செப்பன்டி..
போலியே ஜி.
குடுங்க குடுங்க
எந்த ஒரு மொழியையும் கற்றுக் கொள்வது தவறில்லை. ஒவ்வொரு மொழி கற்கையிலும் நமக்குள் இன்னொரு மனிதன் உருவாகிறான்.
சரியாகச்சொன்னீங்க
ராகவன்.
ஆனால் வேற்று மொழியில் பேசும்போது நமக்கு தெரிந்த மொழியில் இருந்து Compare பண்ணித்தான் பேச வேண்டியுள்ளது.அதில் அந்த சரளமின்மை இல்லாமல் போய்விடுகிறது.
எழுதிக்கொள்வது: நாகை சிவா
நம்ம இந்த மொழி விசயத்தில் ரொம்ப மோசம். ஹிந்தி, பிரஞ்ச் படிக்க வாய்ப்பு கிடைத்தது. பயன்படுத்தி கொள்ளவில்லை. இப்பொழுது அரபிக் கற்க வாய்ப்பு உள்ளது. ஆனால் ஏனோ ஆர்வம் இல்லை.
11.59 26.7.2006
ஏமண்டி குமார்காரு,
கொத்தகா எதி நேர்ச்சுந்தேனு அதி மஞ்சிதேயண்டி. ஆவேல நேர்ச்சுன்னதி எப்புடேனும் சை இஸ்துந்தி.
மீகு தெலுகு ராசேதி, சதுவிந்துகு ஒஸ்தெ இங்கமஞ்சிதண்டி குமார்.
you become instantly rich பெயரோடு காரு வேற இலவசமா எனக்குத் தெரிந்து தெலுங்கில் மட்டும் தான் கிடைக்கும். ;-))
குமார்,
நேத்துதான் வீரபத்ரா பார்த்தேன்... படம் அருமை. Typical பாலைய்யா படம்.
நானும் இப்பதான் படமெல்லாம் பார்த்து தெலுகு கத்துக்கிட்டிருக்கேன்...
"நேசம், ரோஷம், பவுருஷம் லெதுன்னா தெலுகுவாடுவுண்டாரா???"
பன்ச் டயலாக்
வெ..பயல்
அப்படி போடுங்க!!
ஆஹா ஹரி
தூள் கிளப்புரிங்களே!!!
ஆந்திரா பக்கம் போகாமலே எப்படி?
சேலம் பக்கமா?
நன்றி
சிவா
உடாதீங்க!!!
மொழிகள் எந்த நேரத்தில் எங்கு பயன் படும் என்று சொல்லமுடியாது.
எழுதிக்கொள்வது: Thulasi
ஹரிஹரன்,
சூப்பர். You made my day. சிரிச்சுச்சிரிச்சு வயித்துவலி:-)))))
என் தாய்மொழிகூட தெலுங்குதான்.
11.45 27.7.2006
பளிங்கு போன்ற தெளிவான மனம் தெரிகிறது உங்கள் எழுத்தில். நன்றி.
அன்புடன்,
மா சிவகுமார்
Dear Venkatesan
Thank you for remembering me. You have written that how I taught you telugu (you should say Telugu not telungu)
Now also I say that I have two mother tongues, that is Telugu and Tamil. As you know more languages your horizon widens and become more knowledgeful.
With regards
M.Pardhasarathy
வாங்க பார்த்தசாரதி
இணையத்தின் மகிமையே மகிமை.
இவ்வளவு நாள் கழித்து கண்டுபிடிக்க முடிந்ததே சந்தோஷம் தான்.
Post a Comment