Monday, July 10, 2006

வழுக்கும் சாரப்பலகை

வழுக்கும் சாரப்பலகை(சரியான தமிழாக்கமா என்று சந்தேகம்)
"துர்கா சிமின்ட்" இந்த Projectயில் நான் முதன் முதலாகப் பார்த்த தொழிற்நுட்பம் இது தான்.
இதை ஆங்கிலத்தில் "Slip Form" என்று சொல்வார்கள்.
எப்பொதும் நடைபெறுகிற கட்டுமானப்பணிகளில் இந்த சாரம் அடிக்கும் வேலை அடித்து, கயட்டி, அடிப்பதாக இருக்கும்.அதாவது கம்பி கட்டுவது,அதைச்சுற்றி சாரம் அடிப்பது பிறகு கான்கிரீட் போட்டு அது கடினமானவுடன் சாரத்தை பிரித்து மீண்டும் உபயோகப்படுத்துவது.இது ஒரு Cycle.இப்படிதான் நடந்துகொண்டிருக்கும்.

ஆனால் இந்த கட்டிடம் (Silo) 25 மீட்டர் ஆரம் உடையது 64 மீட்டர் உயரம் உடைய ஒரு கிணறு.அதனால் முன்பு சொன்ன மாதிரி செய்துகொண்டிருந்தால் இது கட்டுவதற்கே 2 வருடங்கள் ஆகிவிடும் மற்றும் கட்டுமானச்செலவுகளை தாக்கு பிடிக்க முடியாது.
இந்த சமயத்தில் தான் L&T-ECC இந்த தொழிற்நுட்பத்தை உபயோகபடுத்த நினைத்தது.ஏற்கனவே இதை உபயோகப்படுத்தி Srilankaவில் ஒரு ஹோட்டல் கட்டியதாக சொன்னார்கள்.அதனால் தொழிற்நுட்ப அளவில் பெரிய கஷ்டம் இருக்காது என்று நம்பினார்கள்.

சிலிப் பார்ம்

இதன் தொழிற்நுட்பம் இது தான்.

இந்த கிணற்றின் சுற்று வட்டத்தில் சுமார் ஒவ்வொரு1.2 மீட்டர் இடைவெளியிக்கும் ஒரு Jack இருக்கும்.இந்த Jack க்கு மத்தியில் ஒரு கம்பி இருக்கும்.இது தான் இந்த தொழிற்நுட்பத்திற்கே ஆதாரமான அமைப்பு. இதற்கென்று அமைக்கப்பட்ட பிரொத்தியகமான Pump மூலம் oilஐ செலுத்தினால்,இந்த Pump அந்த கம்பியை பிடித்துக்கொண்டு ஏறும்.அதாவது குரங்கு மரம் ஏறுவது போல.மற்ற அமைப்புகள் இதனுடன் இணைக்கப்பட்டுள்ளதால் அவைகளும் மேலே ஏறும்.
இதில் கான்கிரீட் போட ஆரம்பித்தால் இரவு பகல் என்று 24 மணி நேரமும் நடக்கும்.64 மீட்டர் உயரமும் முடிந்தபிறகு தான் நிறுத்துவார்கள்.வெளிச்சுவர் மாத்திரம் சுமார் 22 ~ 25 நாட்களுக்குள் முடிந்துவிடும்.

நாளடைவில் இந்த தொழிற்நுட்பத்தை உபயோகப்படுத்தி பல வேலைகள் வந்தவுடன் இதற்கென்று ஒரு குழு சென்னை அலுவலகத்தில் ஆரம்பிக்கப்பட்டது.அதற்கு தலைவராக திரு.S.நடராஜன் உதவியாளராக திரு.முருகேசனும் இருந்தார்கள்.திரு முருகேசன் வலிவலம் தேசிகர் பாலிடெக்னிகின் பழைய மாணவர்களில் ஒருவர்.இவர்களை ஏன் இவ்வளவு Special ஆக குறிப்பிடுகிறேன் என்றால் எனது வளர்ச்சிக்கு இவர்கள் பெரிதும் உதவினார்கள்.

இந்த தொழிற்நுட்பம் வளர்ந்து வருவதை முன்னிட்டு அதை பலருக்கும் அறிமுக படுத்தவேண்டி அப்போது இருந்த பல இளைஞர்களை பிடித்து இதற்கு பயிற்சி அளித்தார்கள் அதில் நானும் ஒருவன்.பிற்காலத்தில்,இதன் மூலம் தான் என்னுடைய பேரும் பலருக்கு தெரிய ஆரம்பித்தது.

அதைபற்றி பின்னொரு சமயத்தில் பார்கலாம்.
படங்கள்: நண்றி: faquip.

2 comments:

அபுல் கலாம் ஆசாத் said...

எழுதிக்கொள்வது: அபுல் கலாம் ஆசாத்

இனிய குமார்,

அவ்வப்போது உங்கள் பதிவில் ஒதுங்குவதுண்டு :)

இன்று மேட்டூர் தலைப்பைப் பார்த்து நுழைந்தேன். மேட்டூர் மின்சார வாரியப் பணிமனையில் வேலை செய்ததால் தலைப்பைக் கண்டவுடன் ஈர்ப்பு.

உள்ளே வந்தால் - ஸ்லிப் ஃபார்ம். இன்னொரு ஈர்ப்பு. இங்கே சவூதியில் ஸ்பில் ஃபார்ம்கள் அதிகம்.

இனி தொடர்ந்து உங்கள் பதிவுக்கு வர வாய்ப்புகள் உண்டு.

வாழ்த்துகள்!

சிங்கை வந்தால் சந்திக்க முடியுமா?

அன்புடன்
ஆசாத்

10.18 23.8.2006

வடுவூர் குமார் said...

அப்துல் கலாம் ஆசாத்
வாங்க,நிச்சயம் சந்திக்கலாம்.
கொஞ்சம் உங்க தேதிகளை எனது லிங்க்யில் உள்ள மெயில் மூலம் அனுப்பிடுங்க.
நன்றி