Wednesday, May 19, 2010

மலைக்கே முட்டு!



தினம் தினம் போய்வரும் பாதை அதுவும் வழியில் குறுக்கிடும் குன்றை வெட்டி அது மேலும் சரியாமல் இருக்க படத்தில் உள்ள மாதிரி ஒரு சப்போர்ர்ட்.இத்தொழிற்நுட்பம் பல இடங்களில் பல மாதிரி உபயோகப்படுத்தப்படுகிறது.ஐக்கிய அரபு நாடுகளில் இம்முறை பரவலாக உபயோகப்படுத்தப்படுகிறது.இந்நாள் வரை நேரிடையாக நான் மேற்பார்வை செய்யாத வேலைகளில் இதுவும் ஒன்று ஆனால் புரிந்துகொள்ள அவ்வளவு ஒன்றும் கடினமானது ஒன்றில்லை.

பொது விதியாக, ஓரிடம் சரிகிறது என்றால் அது சரியும் திசைக்கு எதிர்புறத்தில் முட்டு கொடுத்து அது மேலும் சரியாமல் பார்த்துக்கொள்வார்கள் ஆனால் இந்த வேலையில் சரியக்கூடிய திசையில் எவ்வித முட்டும் கண்ணுக்குத்தெரியாது,அப்படியென்றால் இந்த சுவர் எப்படி அந்த மண்ணை சரிவில் இருந்து தாங்கிப்பிடிக்கிறது? அது தான் தொழிற்நுட்பம்.

இந்த தொழிற்நுட்பத்துக்கு MSE என்று பெயர்: ஆதாவது Mechanically Stabilized Earth- இன்னும் எளிதாக சொல்லவேண்டும் என்றால் மண்ணிற்கு நீட்சித்தன்மையை கொடுப்பது.மண்ணினால் தள்ளப்படும் விசையை அதே மண்ணைக்கொண்டு தாங்கிப்பிடிக்கக்கூடிய செயல் முறை.மேலை நாடுகளில் பல தரப்பட்ட முறையில் 1980 களிலேயே பல இடங்களில் பல தரப்பட்ட சாமான்கள் மூலம் முயற்சித்து வெற்றிகொள்ளப்பட்ட தொழிற்நுட்பம் இது.

முதலில் பக்கவாட்டு சுவர் Precast முறைப்படி சிறிய சிறிய பாகங்களாக கொண்டுவருவார்கள் அதை முதலில் நிறுத்தி அதற்கு தற்காலிக முட்டு கொடுப்பார்கள் அதன் பிறகு அதோடு Steel Flats அல்லது சிறிய கம்பி வலைகளை பொருத்துவார்கள்.



நன்றி:ரியின்ஃபோர்ஸேட் எர்த்(படங்கள்)



இந்த கம்பிவலை தான் பக்கவாட்டு சுவர் வெளியே போகாமல் இழுத்துபிடித்துக்கொள்ளும்.சுவரின் உயரத்தை வைத்து இந்த வலை நீளம் இருக்கும்.பொறியாளர்களின் மதிப்பு படி ஒரு குறிப்பிட்ட இடைவெளியில் இந்த வலை சுவர் நீளத்துக்கு குறுக்குவாட்டில் இருக்கும்.படிப்படியாக தரமான மண்ணை போட்டு Compact செய்துகொண்டே போகனும்.இந்த மண் இறுக்கம் தான் தான் அந்த கம்பிவலையையும் மண்ணையும் ஒன்றாக்கி சுவர் வெளிப்பக்கம் சாயாமல் இருக்க உதவும்.

இப்படியெல்லாம் எழுதினா பலருக்கு புரிய வாய்ப்பில்லை தான் ஆனால் சென்னை தி.நகர் பாலம்,போத்தீஸ் பக்கம் இறங்கும் இடத்தில் உள்ள பாலத்தின் பகுதி இம்முறையில் தான் கட்டப்பட்டுள்ளது,என்றாவது அந்த பக்கம் போகும் போது ஞாபகம் இருந்தால் பாருங்கள்.இத்தொழிற்நுட்பம் இந்தியாவில் பல இடங்களிலும் கையாளப்படுவருகிறது.என்ன தான் தொழிற்நுட்பம் அதன் வேலையை செய்தாலும் முறையான கண்காணிப்பு இல்லாவிட்டால் மழை நீர் உட்புகுந்து அந்த இரும்பு வலைகளை துருபிடிக்க வைத்து அதன் செயல் திறனை குறைக்கும் வாய்ப்புள்ளது.

10 comments:

துளசி கோபால் said...

இதைத்தானே ரீடெய்ன் வால்ன்னு சொல்றாங்க?

நியூஸியில் மலைப்பாதைகளில் மண் சரிஞ்சுடாமல் இருக்க அங்கங்கே காங்க்ரீட் ப்ளாக் வச்சுச் சுவர் எழுப்பி வலையும் அடிச்சுருப்பாங்க. அது இதுபோலத்தானான்னு தெரியலை.

ஆனால் இது பார்க்கப் புதுமாதிரியா இருக்கு.

வடுவூர் குமார் said...

ஆமாங்க துளசி- Retaining wall என்பது பொதுவாக சொல்லப்படுவது அதில் இது ஒரு வகை.இடப்பற்றாகுறை உள்ள இடங்களில் இம்முறை கையாளப்படுகிறது அதோடு செலவும் குறைவாக இருக்கும்.

ஹுஸைனம்மா said...

மேலும் படங்கள் சேத்திருந்தா, இன்னும் தெளிவா இருந்திருக்கும்.

வடுவூர் குமார் said...

வாங்க ஹூஸைனம்மா - தொழிற்நுட்ப பதிவு என்பதால் யாரும் அவ்வளவு படிக்கமாட்டாங்க என்று நினைத்துக்கொண்டிருந்தேன்...அடுத்த முறை கவனத்தில் கொள்கிறேன்.நன்றி.

திவாண்ணா said...

ஆமாம், புரியலை. ஒரு பக்கவாட்டு சுவருக்கு கம்பிகலால கனெக்ஷன் இருக்கு; இந்த கம்பிகலை மன்னோட வெய்ட் அழுத்தி வெச்சு இருக்கு. இப்படி நினைக்கிரேன்.. சரிதானா?

வடுவூர் குமார் said...

ச‌ரி தான் திவா,ஆதாவ‌து ம‌ண்ணைக்கொண்டே ம‌ண்ணை பிடித்துவைக்கிறார்க‌ள்.

p said...

நானும் பலமுறை அதிசயத்திருக்கிறேன்.. எப்படி சும்மா.. blocks மட்டும் தனியே சரிந்துவிடாமல் இருக்கிறது என்று... இப்பொழுது புரிகிறது :-)
இப்போது பல இடங்களில் மேம்பாலங்கள் இப்படித்தானே கட்டுகிறார்கள்?

வடுவூர் குமார் said...

வாங்க‌ சேதுப‌தி,இது எளிமையான‌ தொழிற்நுட்ப‌ம் தான்.1995 க‌ளில் ம‌லேசியாவில் பார்த்து அதிசிய‌த்திருக்கேன்.இந்தியாவில் ப‌ல‌ இட‌ங்க‌ளில் இந்த‌ தொழிற்நுட்ப‌ம் இப்போது உப‌யோக‌ப்ப‌டுத்த‌ப்ப‌டுகிற‌து.

Mohamed Faaique said...

இந்த முறை அமீரகத்தில் பாதைகளிலும் பயன்படுத்துகிறார்கள். வெறும் கான்க்ரீட் சுவர் எப்படி இவ்வளவு பெரிய விசையை தாங்கும் என்று நானும் முலையை குடைந்து கொண்டிருந்தேன் . உள்ளே நடக்கும் விடயம் இப்போதுதான் தெரிந்தது.. நன்றி

வடுவூர் குமார் said...

முதல் வருகைக்கு நன்றி முகமது ஃபாய்க்கு.