Wednesday, May 05, 2010

மலிவு விலையில்...

வர வர கட்டிடங்கள் உயரமாகிக்கொண்டு போய் கொண்டிருக்கும் வேளையில் அதற்காக செய்யப்படும் வேலைகளிலும் அபாயங்கள் நிறைந்துவருகின்றன அதில் ஒன்று தான் இந்த சுற்றுச்சுவர் கண்ணாடி துடைக்கும் வேலை.சில வருடங்கள் வரை கண்டோலா என்று சொல்லப்படுகிற தொங்கும் மேடை மூலம் சுத்தம் செய்து வந்தார்கள்.இம்மேடை இரு சிறுமோட்டார்கள் மூலம் கூறையின் மேலிருக்கும் ஒரு அமைப்பின் மூலம் இரும்பு கம்பி மூலம் நகரும் தன்மையுடையது.இம்முறை ஓரளவுக்கே பாதுகாப்புடையது இதுவும் தன் கட்டுப்பாடை இழந்து பல மனித உயிர்களை பலிவாங்கியுள்ளது.மேலே சொன்ன முறையை மேம்படுத்தி ஒழித்து மோட்டார் இல்லாமல் இரு கயிறுகள் மூலமே சுத்தம்செய்யும் வேலையை கொண்டுவந்தார்கள்.இம்முறையில் மன தைரியம் உள்ளவர்கள் மட்டுமே வேலை செய்யமுடியும்.முதன் முறையாக இவ்வேலையை சிங்கையில் உள்ள ஒரு பெரிய கட்டிடத்தில் அறிமுகபடுத்தினார்கள்.இதன் பாதகங்கள் பற்றிய முழு விபரங்கள் எனக்கு தெரியவில்லை.

கிழே உள்ள படம் சிங்கை நூலக வெளிப்புற கண்ணாடி சுவரை சுத்தம் செய்யும் போது எடுத்தது.இரு கயிற்றில் ஒன்று பாதுகாப்புக்காக.




கிழே உள்ள படம் துபாயில் ஒரு கட்டிடத்தில் அதே வேலை பழைய முறையில் நடக்கிறது.சில பாதுகாப்பு குறைபாடுங்கள் உள்ளன்.தலைக்கவசம் அணியவில்லை.



கடைசியாக நேற்று சென்னையில் எடுத்தது.இன்ஷூரன்ஸ் கம்பெனி விளம்பரம் வேறு.இதில் உள்ள குறைபாடுகள்...
முதலில் கட்டிடம் இவ்வேலை செய்ய தகுந்த ஏற்பாடுகளை கொண்டிருக்கவில்லை,அப்படியே இருந்தாலும் ஏன் அதை உபயோகிக்கவில்லை? இந்த நூலேனி சமாச்சாரம் எல்லாம் சர்கஸ் மற்றும் கப்பலில் மட்டுமே மிஞ்சியுள்ளது.அந்த ஏணியில் உள்ளவர் பாதுகாப்பு பட்டை அணியவில்லை.தலைக்கவசமும் இல்லை.ஆக மொத்தத்தில் இங்கு மனித உயிர்கள் "மிக மலிவு விலையில்!!"



நாளுக்கு நாள் பாதுகாப்பு சமாச்சாரங்கள் நுட்பமான முறையில் உலக நாடுகளில் அறிமுகபடுத்திவரும் வேலையில் நாம்மட்டும் ஏன் இவ்வளவு வருடங்கள் எடுத்துக்கொள்கிறோம் என்பது புரியாத புதிராகவே இருக்கு.

2 comments:

நாடோடி said...

//நாளுக்கு நாள் பாதுகாப்பு சமாச்சாரங்கள் நுட்பமான முறையில் உலக நாடுகளில் அறிமுகபடுத்திவரும் வேலையில் நாம்மட்டும் ///

ரெம்ப‌ க‌ஷ்ட‌ம் தான்...

வடுவூர் குமார் said...

வாங்க நாடோடி
நம்மிடையை எங்கோ ஏதோ மிக சிக்கலாக இருக்கு,இல்லாவிட்டால் கூவம் சீரமைக்க சிங்கை போகும் நம் தலைவர்கள் மற்றதை கண்டுக்கமாட்டார்களா என்ன?