என்னுடைய பல பதிவுகளில் மஸ்கட்டின் அழகான கடற்கரையும் சாலைகளையும் படம் பிடித்து போட்டுள்ளேன் ஆனால் ஓமனின் பெரும் பகுதிகள் எப்படி இருக்கும் தெரியுமா?கீழே பாருங்கள்.என்னுடைய நண்பர் ஒருவர் மஸ்கட்டில் இருந்து சலாலா (நம் பதிவர் மின்னல் ) இருக்கும் இடத்துக்கு போகும் வழியில் எடுத்தது.இவ்வளவு இடம் அனாமத்தா கிடைக்கும் போது துபாய் மாதிரி வானத்தை தொடும் அளவுக்கு கட்டிடம் கட்ட வேண்டிய அவசியம் இல்லாமல் போனது இவர்களுக்கு.இன்றும் மஸ்கட்டில் மிக உயரமான மாடி 10 மாடிகள் தான் என்றால் நம்ம முடியுமா?
சிறிய வகை செடிகள் மட்டுமே வளருகிறது.
பெரும்பாலான நிலப்பகுதி இப்படி தான் இருக்கு.
அங்கங்கு தென்படும் “தனிமையான” வீடுகள்.
கடற்கரையில் இருக்கும் Seagulls.
மீனவர் பிடித்து போட்டிருக்கும் துருகை
4 comments:
பரப்பளவில் ஓமன் நாடு மிக பெரியது.எனவே பத்து மாடிக்கு மேல் அதிக மாடி வருவது, இப்போது சற்று கடினம் தான்.
வாங்க மின்னல்,ஓமன் Forum யில் இதைப் பற்றி விவாதம் நடத்திக்கொண்டிருக்கிறார்கள் பாருங்கள்.இந்த ஊருக்கு அவசியம் இல்லை தான்.
படம் பார்த்தால் ஆங்கில திரைப்படத்தை நினைவு படுத்துகிறது.
பார்க்க நல்லா இருக்கு ஆனா உண்மையில் அங்கே இருக்க ரொம்ப கொடுமையா இருக்கும்!
பழைய கால Cowboy படம் ஞாபகம் வருதா கிரி?இப்பகுதியில் பெரும்பாலானவர்கள் கடல் சார்ந்த மீன் பிடி தொழிலில் இருப்பவர்கள் தான்.
Post a Comment