Thursday, October 02, 2008

துபாய்க்கு வந்தாச்சு.

போன வெள்ளிக்கிழமை (19.9.08)சிங்கப்பூர் விமானச்சேவை மூலம் மாலை 4.50க்கு கிளம்பவேண்டிய வானூர்தி ஏதோ சிறு மின்சேவை கோளாற்றால் சுமார் 3 நிமிடம் தாமதமாக கிளம்பி ஓடு பாதைக்கு வந்தது.விமானம் முழுவதும் நிரம்ப இன்னும் சிலரே தேவைப்படுவதை பார்க்கும் போது இந்த தடத்தில் இவ்வளவு பேர்களா? என்று ஆச்சரியப்பட்டேன்.பயணச்சீட்டு போடும் போதே ஜன்னல் சீட்டு வேணும் என்று கேட்டது தப்போ என்று நினைக்கும் படி கே 61 ஆதாவது வானூர்தின் கடைசி இருக்கை கொடுத்திருந்தார்கள்.பக்கத்துக்கு சீட்டுக்கு ஆளில்லாததால் கொஞ்சம் சௌகரியமாக இருந்தது.




கிளம்பிய உடனே மலேசிய எல்லை வந்துவிடுவதால் ஜோகூர் வழியாக அப்படியே நேராக போய் இந்தோனேசியாவின் வட எல்லையை தொட்டுவிட்டு இந்தியா பக்கம் போகிறது.7 மணி நேரப்பயணம் அலுங்காமல் குலுங்காமல் சென்னை/பெங்களூர் வழியாக துபாய் வந்தடைந்தது. இரவு 8.05க்கு இறங்கவேண்டிய விமானம் சுமார் 7.50க்கே இறங்கியிருந்தது.

சென்னைக்கு மேல்




மாலை நேர வெய்யில் என்பதால் இந்த அந்தமான் நிகோபார் தீவை காணமுடிந்தது.





சென்னை முழுவதும் மேகமூட்டமாக இருந்ததால் எதையும் பார்க்கமுடியவில்லை.10000 மீட்டருக்கு மேல் அவ்வளவாக மேகம் இல்லை.முன்பக்கம் இருக்கும் சின்னத்திரை மூலம் விமானம் பயணப்படும் இடமும் வேகமும் திரையில் ஓடிக்கொண்டிருந்தது.துபாய் நிலையை தொடுவதற்கு முன்பே அங்குள்ள சீதோஸ்ண நிலையை சொல்லி அவர்கள் நாட்டு நேரத்தையும் சொன்னார்கள்.சிங்கைக்கும் துபாய்க்கும் 4 மணி நேர வித்தியாசம்.



பூத் நாத் படம் ஓடிக்கொண்டு இருக்கிறது.





துபாய் இறங்க 20 நிமிடங்கள் இருக்கும் போது வெளியில் நீள் கோட்டில் மஞ்சள் விளக்குகள் தென்பட்டன,அது சாலையாக இருக்ககூடும் என்று தோன்றினாலும் அருகில் ஒரு கட்டிடமும் காணப்படவில்லை.இவ்வளவு நீள சாலைக்கு இந்த மாதிரி ஏன் விளக்கைப்போட்டு மின்சாரத்தை வீணடிக்கிறார்கள் என்று யோசித்துக்கொண்டிருந்தேன்.இதற்கான விடையை அடுத்த வாரம் அந்த சாலையில் பயணிக்கும் போது தெரிந்துகொண்டேன்.

இறங்கிய சில வினாடிகளில் விமானத்தைவிட்டு வெளியே வந்தேன்,நடந்தேன் நடந்தேன்.. நடந்தேன் ... சுமார் 20 நிமிடங்கள்,அவ்வளவு பெரிய நடை அத்யன் பிறகு 3 மாடி அளவுக்கு கீழிறங்க வேண்டியிருந்தது.வயதானவர்களுக்கு சிறிது கஷ்டமாக இருக்கும்.3 மாடி கீழிறங்கிய பிறகு மீண்டிம் நடை,இப்பகுதியில் ஓரிடத்தில் வயதானவர்களுக்கு இலவசமாக வண்டி இருப்பதாக ஒரு அறிவிப்பை பார்த்தேன் ஆனால் வண்டி எதுவும் கண்ணில் படவில்லை.‌

பெட்டி சேகரிக்கும் இடத்துக்கு போகும் போது அனிச்சையாக இடது பக்கம் திரும்பிய போது விசா கொடுக்கும் இடம் என்று போட்டிருந்தது,அதில் பல நாடுகளை பிரித்துவைத்து பாக்கிஸ்தானையையும் இந்தியாவும் இணைத்துவைத்திருந்தார்கள்.கூட்டம் அதிகமாக இல்லாத்தால் ஒரு முத்திரை குத்திவிட்டு கண் விழிப்படலம் பிடிப்பதற்கு பக்கத்தில் அனுப்பினார்கள்.சரியான தகவல் பலகைகள் இல்லாமல் இருப்பது கொஞ்சம் கஷ்டமாக இருக்கு.ஆங்கிலம் அவ்வளவாக புழக்கத்தில் இல்லாமல் இருப்பதும் புதியவர்களுக்கு ஒரு சவால்.
எல்லாம் ஒருவழியாக முடிந்து வெளியில் வரும் போது இரவு 8.35தாகியிருந்தது.சித்தப்பா பையன் ,மனைவி மற்றும் குழந்தைகள் வந்து வரவேற்றது நெகிழ்வாக இருந்தது.


காரில் 10 நிமிடங்களுக்கு பயணம் செய்து வீட்டை அடைந்தேன் அன்றிரவு பக்கத்திலேயே இருந்த சரவன பவனில் விருந்துடன் முடிந்தது...துபாயில் முதல் நாள்.

கணினி கைவசப்படாததால் இந்த பதிவை வெளியிடத்தில் இருந்து பண்ணவேண்டியிருந்தது.
மற்றபதிவுகள் கொஞ்சம் தாமதமாகவே வரும்,பொருத்துக்கொள்ளுங்கள்.

9 comments:

வெங்கட்ராமன் said...

வானூர்தியில் புகைப்படம் எடுக்கலாமா?
அனுமதி இல்லை என்று கேள்விப்பட்டேன்.
படங்கள் நன்றாக உள்ளது.

Anonymous said...

So good......

இலவசக்கொத்தனார் said...

காத்திருக்கிறோம். உதவி எதேனும் வேண்டுமா? பெனாத்தலார் இருக்கிறாரே!!

துளசி கோபால் said...

பத்திரமாகப் போய்ச்சேர்ந்துட்டீங்க.நல்லது.

வேலை ஆரம்பிச்சாச்சா?

பகல்நேரப் பயணம் என்றால் இந்தமாதிரி மேலெ இருந்து தண்ணீர், தரை தீவுகள் எல்லாம் பார்ப்பது ஒரு போனஸ்தான். எனக்கு ரொம்பப் பிடிக்கும்.

வடுவூர் குமார் said...

வெங்கட்ராமன்,என்னுடைய தொலைப்பேசி விமானச்சேவை பகுதியில் இருந்த்து,அதனால் கம்யூனிகேஷன் பாதிக்காது.யாரும் ஒன்றும் சொல்லாததால் உங்கள் பார்வைக்கு கிடைத்தது.

வடுவூர் குமார் said...

வாங்க இ.கொத்தனார்.
உதவி தேவைப்படும் நேரத்தில் கேட்கிறேன்.இப்போதைக்கு விசா ஸ்டாம்பிங்காக காத்திருக்கேன்,அதற்குப்பிறகு தான் மற்றவற்றை தேட ஆரம்பிக்கவேண்டும்.
என்னுடைய தொலைப்பேசி எண் 050-8539506

துளசி கோபால் said...

நானும் விமானத்தில் இருந்து நிறையப் படங்கள் எடுத்துருக்கேன். எல்லா ஏர்லைன்ஸ்ம் ஒன்னும் சொல்வதில்லை, நம்ம இந்தியா விமானசேவைகளைத் தவிர்த்து.


நம்ம சென்னையில் இருக்கும் குறளகம் முன்ஹாலில் உள்ள காந்தி சிலையைப் படம் எடுக்கக்கூடாதுன்னு சொன்ன மக்களாச்சே!

வடுவூர் குமார் said...

துளசி கோபால்,இன்னும் வேலை முழுமையாக ஆரம்பிக்கவில்லை.இன்னும் சில மாதங்கள் ஆகும் போல் இருக்கு.

வடுவூர் குமார் said...

துளசி,அதெல்லாம் நம்மூரில் சகஜம்.
:-))