Thursday, March 29, 2007

போலி மரியாதை

நேற்று ஒருவர் பேசும் போது என்னிடம்,சார் இப்போ ஊரில் ரூபாய் 10000 கொடுத்தால் அச்சு அச்சாக போலி டிப்ளோமா சான்றிதழ் செய்து கொடுக்கிறார்களாம்,என்றார்.

அதை வைத்து இங்கு பலர் "S" பாஸ் வாங்குவதற்கு விண்ணப்பிக்கிறார்களாம் என்றார்.

8 வருடங்களுக்கு முன்பு ஆன்லைனில் இந்த மாதிரி டிகிரி வித்த விஷயமும் வெளியில் வந்து நாறியது.

சரி,அப்படி செய்தால் சிங்கப்பூர் அரசாங்கம் கண்டுபிடித்துவிடுவார்களே? என்றேன்.

அதற்கு அவர், 2000 வது வருடத்துற்கு பிறகு தேறியவர்களுக்கு மட்டுமே புகைப்படத்துடன் கூடிய சான்றிதழ் வருகிறது,அதற்கு முன்னால் தேறியவர்களுக்கு அந்த மாதிரி எதுவும் இல்லாத்தால்,இப்படி தயார் செய்வது சுலபமாகிவிடுகிறது,என்றார்.

அடப்பாவி மக்களா! படித்து முன்னேற வேண்டும் என்ற எண்ணம் கூட இல்லாமல் இப்படியெல்லாம் இறங்கி,பிரம்படி வாங்கி,சிறைவாசம் பெற்று நாட்டை விட்டு வெளியேற்றப்பட வேண்டுமா? என்ற யோஜனையுடன் இருந்த நான்,நேற்று காலை கீழ் கண்ட பதிவை பார்த்தேன்.கிட்டத்தட்ட அப்படியே நடந்துள்ளது.

ஒரு இந்தியனின் குறுக்கு புத்தி அவனை எங்கு கொண்டு போய்விட்டிருக்கிறது என்று பாருங்கள்.

படத்தை பெரிதாக்க அதன் மேல் சொடுக்கவும்.


கஷ்டமடா சாமி.

நன்றி: தி ஸ்டெரியிட்ஸ் டைம்ஸ்

8 comments:

ஆதி said...

சார் நான் உங்களை வியர்டு பட்டியலில் இணைத்து இருக்கிறேன்.

துளசி கோபால் said...

என்னங்க குமார்,

உங்களுக்கு இமெயிலில் இந்த ஜங்க் எல்லாம் வர்றதில்லையா?

டிகிரி வேணுமா டிகிரின்னு கூவிக்கூவி விக்கறது இங்கே எனக்கு மட்டும்தானா? எந்த யுனிவர்சிட்டியா
இருந்தாலும் பிரச்சனை இல்லையாமே! பேசாம 'ஒரு எம் பி பிஎஸ் & எஃப் ஆர் சி எஸ்' வாங்கிக்கலாமான்னு
இருக்கேன்:-))))))

இலவசக்கொத்தனார் said...

முதலில் கடவுச்சீட்டு அப்புறம் டிகிரி சான்றிதழ். என்னங்க இப்படியே நியூஸ் தரீங்க?

அப்புறம் டீச்சர் பதிவுல உங்களுக்குப் பதில் சொல்லியாச்சு! அங்க போயி பாத்துக்குங்க! :))

வடுவூர் குமார் said...

துளசி
அவுங்கெல்லாம் வரதில்லை.
பதிவின் தலைப்பில் முதல் பாதியில் இருப்பவர் தான் அவ்வப்போது வந்து குத்திட்டு போவார்.:-))

வடுவூர் குமார் said...

வாங்க இ.கொத்தனாரே!!
போச்சுடா,இன்னும் தமிழ்மண முகப்புல இருக்குமா என்று தெரியவில்லை.
பார்த்திடுகிறேன்.
அடுத்து போன சைட்டின் வேலைகள் அப்படியே பாதியில் உள்ளது மற்றும் இது இன்னும் கொஞ்ச நாள் கழித்துப்போட்டா,ஆறின கஞ்சி ஆகிவிடும்.
அதையும் போடுகிறேன்.
நன்றி

வடுவூர் குமார் said...

ஆதிசேஷன்
நன்றி.
இதுவரை 4 பேர் கூப்பிட்டி இருக்கிறார்கள்.
போடத்தான் நேரம் சரிவரவில்லை.

Unknown said...

குமார் சார்,

இப்படி எல்லாம் செய்தால் எதிர்காலமே அழிந்துவிடும் என்பது பலருக்கு தெரிவதில்லை.இதற்கு கஷ்டப்படாமல் அஞ்சல்படிப்பு மூலம் டிகிரிவாங்க முயற்சிக்கலாம் அல்லவா?

வடுவூர் குமார் said...

நிச்சயமாக செல்வன்.
இது பலருக்கு புரிவதில்லை.
இதில் மற்ற இனத்தவரும் விளையாடி மாட்டிய விபரமும் அவ்வப்போது வெளியிடப்படுகிறது.
சொந்த மனைவி தானே !! சான்றிதழும் சொந்தமாக்கிப்பதில் பிரச்சனை இருக்காது என்று நினைத்தாரா என்னவோ?
இப்படி சிலர் செய்வதால்,வெளிநாடுகளில் நம்மவர் என்றாலே போலியோ என்று பலமான சந்தேகம் எழுத்துவிடுகிறது.