பல நாடுகளில் எண்ணையை கடலடிக்கடியில் இருந்து எடுத்து வந்து தரைக்கு மேலே தொட்டி கட்டி சேமிப்பார்கள்,ஆனால் சிங்கையில் இட நெருக்கடியை சமாளிக்க என்ன செய்கிறார்கள் என்று கீழே படத்தில் பார்க்கவும்.
பெரிதாக பார்க்க படத்தின் மேல் சொடுக்கவும்புகைப்படம்:நன்றி:டுடே
தரைக்கு கீழே பாறையில் தோண்டி அதனுள் எண்ணையை சேமிக்கிறார்கள்.இந்த மாதிரி வேறெங்கும் செய்கிறார்களா? செய்தார்களா என்று தெரியவில்லை.
இது ஒரு கல்லில் பல மாங்காய் அடிக்கும் நுட்பம்.
முதலில் சிங்கப்பூர் மக்களின் பாதுக்காப்பு கருதி நகரத்தை விட்டு தள்ளி அமைக்கப்பட்டுள்ளது.ஏதாவது அசம்பாவிதம் நடந்தாலும் அது நகரமக்களுக்கு அச்சுறுத்தலாக இருக்காது.
தரைக்கு மேல் உள்ள இடத்தை வேறு பணிகளுக்கு உபயோகப்படுத்தலாம்.
பாசமிகு மக்களின் குறி இலக்கு கொஞ்சம் முறியடிக்கப்படுகிறது.
இது எண்ணைக்கும் மட்டும் அல்லாமல் கொஞ்சம் தொந்தரவு கொடுக்கக்கூடிய கெமிக்கள்களுக்கும் உபயோகப்படுத்த எண்ணம் உள்ளது,என்று சொல்லியுள்ளார்கள்.
மிக முக்கியமாக தனது எண்ணை கொள்ளலவை அதிகப்படுத்திகொள்ளமுடியும்.
பல வருடங்களாக தூங்கிக்கொண்டிருந்த கட்டுமானத்துறையை எழுப்ப இதுவும் கொஞ்சம் உதவும்.
இப்படி பலவற்றில், சில மேலே சொன்னவை.
இப்படி துணிச்சலாக சில வேலைகள் செய்யும் போது தான் தொழிற்நுட்பத்தின் வீச்சு தெரியவருகிறது.
16 comments:
குமார் நம்ம ஊரில மெட்ரோ ரயிலுக்கே இத்தனை வருஷம் ஆச்சு.
இந்த மாதிரி செய்ய யாரு முன்வந்தாலும் அவங்களை அனுமதிப்பாங்களானு தெரியாது.
அதுவரை சிங்கப்பூரைப் பார்த்துப் பொறாமைப் பட வேண்டியதுதான்,.
வாங்க வல்லிசிம்ஹன்
என்ன செய்வது.நம்மூரில் ஒரு வேலை அதுவும் பொதுஜன தொடர்பாக இருந்தால், ஆரம்பிக்கும் முன்பே பல வழக்குகள் போட்டு இழுத்தடிக்க ஆரம்பித்துவிடுகிறார்கள்.நில ஆர்ஜிதம் பண்ண இவ்வளவு நாள் ஆனா குத்தைகாரர்கள் எப்படி வேலை குறித்த நாட்களுக்குள் முடிப்பார்கள்?
திருவாரூர்- மன்னார்குடி பேருந்தில் போயிருக்கிறீர்களா?ஓட்டுனர் அத்தனை பேருக்கும் தேர்வு இங்கு தான் வைக்கவேண்டும்.
இந்த சாலைகள்,நிலம் கொடுக்காமல் இருப்பவர்களின் மனம் போல் கோணல் மானலாக இருக்கும்.
இடமில்லாத ஊருக்கு நல்ல ஐடியாவா இருக்கே.
நம்ம நாட்டுலெ பெருகிவரும் மக்கள் தொகை ஸ்பீடுக்கு
இன்னும் பத்து வருஷத்துலே நிக்க இடம் இருக்காது. அப்ப
இதுமாதிரி எதாவது செய்வாங்களொ என்னவோ!
ஆமாம். மெட்ரோ ரயில் வந்துருச்சா? நான் பார்க்கலையே வல்லி(-:
இன்னும் அந்தப் பறக்கும் ரயிலில்கூட போகலை(-:
வாங்க துளசி
ஊரில்,நாமா எப்பவோ முழித்திருக்க வேண்டும்.இன்னும் காலம் இருக்கிறது என்ற எண்ணத்துடன் வாழ்ந்துகொண்டிருக்கோம்.
நம்முடைய ஜனத்தொகை அளவுக்கு வேண்டிய Infrastructure எந்த சிட்டியிலும் மாற்றப்படவில்லை.
மிக மிக ஜாலியாக,மெதுவாக தான் முன்னேறுவேன் என்று அடம்பிடிக்கிறது.
என்னைக்கேட்டால்,பேருந்துக்கு பதிலாக கயற்றில் போகும் வண்டியை உபயோகப்படுத்தி விட்டு,சாலையை மக்கள் நடமாட்டத்துக்கு திருப்பிவிடலாம்.:-))
சார், இது கேட்க நல்லா இருக்குது. இந்தியாவுக்கு ஒத்து வருமா?
வாங்க மதுசூதனன்,எதை கேட்கிறீர்கள்?
நான் மேலே போட்ட கயறு வண்டியையா? அது சும்மா தமாசுக்கு.
நமக்கு எது சரிப்பட்டு வரும் என்று, அதற்கு தகுந்த மாதிரி பிளான் போட்டா ஒரளவு சரியாக இருக்கும்.
இங்கு இடப்பற்றாக்குறை அதனால் இந்த மாதிரி பண்ண வேண்டிய கட்டாயம்.
வெளியில் கட்டுவதை விட பாறை உள்ளே கட்டுவதில் முன்பணம் அதிகமாகும் என்று நினைக்கிறேன்.
எல்லாவற்றிலும் Pro & Cons உண்டு.
job well begun is half done ன்னு சொல்லுவாங்க.. நம்ம ஊர்லே என்னான்னா.. ஒரு idea அதன் embryonic stage லெயே.. எப்படி - எதை எடுத்து சொன்னா.. idea வை மக்களே வேண்டாம்ன்னு சொல்லுவாங்க ங்கிறதுல அசுர வேகத்துல மூளைய்யை செயல்படுத்துவாங்க..
We are abundant in geniuses gone wrong.. and negligible in mediocres who are standup while right
இது power -responsible postion ல் இருக்கும் நபர்களுக்கு
ஆமாங்க கீதா,
பல சமயங்களில் ஜனநாயகம் என்ற போர்வையில் நம் காலை நாமே கட்டிக்கொள்கிறோம்.
வருகைக்கு நன்றி
குமார்...நான் தீபா.. ஒருவேளே கீதா என்னை மாதிரி இருப்பாங்களோ ..?
ஆமாமில்ல!!
தட்டச்சு மிஸ் ஆயிடுச்சு.
//என்ன செய்வது.நம்மூரில் ஒரு வேலை அதுவும் பொதுஜன தொடர்பாக இருந்தால், ஆரம்பிக்கும் முன்பே பல வழக்குகள் போட்டு இழுத்தடிக்க ஆரம்பித்துவிடுகிறார்கள்.நில ஆர்ஜிதம் பண்ண இவ்வளவு நாள் ஆனா குத்தைகாரர்கள் எப்படி வேலை குறித்த நாட்களுக்குள் முடிப்பார்கள்?
திருவாரூர்- மன்னார்குடி பேருந்தில் போயிருக்கிறீர்களா?ஓட்டுனர் அத்தனை பேருக்கும் தேர்வு இங்கு தான் வைக்கவேண்டும்.
இந்த சாலைகள்,நிலம் கொடுக்காமல் இருப்பவர்களின் மனம் போல் கோணல் மானலாக இருக்கும்.//
Best comment Mr Kumar.
வருகைக்கும்/கருத்துக்கும் நன்றி சுவனப்பிரியன்.
குமார், சவூதியில் ஒரு ராட்சச அண்டர்கிரவுண்ட் சம்பை (Sump) கட்டினார்கள். ஏனென்றால் போர் காலத்தில் தேவைபடும் எண்ணையை சேமிக்க. !!!!!
அந்த புராஜெக்ட் மானேஜரிடம் நான் கேட்ட கேள்வி.
"படு லூசுத் தனமா இருக்கே. இந்த ஊரிலே சும்மா தோண்டினாலே எண்ணை கிடைக்கும். அதை எடுத்து எதுக்குயா திரும்பி பூமியிலே பதுக்குறீங்க?" என்றேன்
அது அவர் "ஐயா உன் வேலைப் பார்த்து போங்க. விட்டா என் வேலைக்கு உலை வைச்சுடுவிங்க போலிருக்கே" என்றார்
அதானே!!
அப்படி சொன்னபிறகு உங்கள் மேல் ஒரு கண் வைத்துக்கொண்டிருப்பார் என்று நினைக்கிறேன்.
:-))
ஆனால் இங்கு அவசியம் என்று நினைக்கிறார்கள்.
இன்னும் சில ஆண்டுகள், பல பெரிய மாறுதல்களுக்கு சிங்கப்பூர் தன்னை தயார்படுத்திக்கொண்டிருக்கிறது.
ஏற்கனவே யுத்ததளவாடங்களுக்கு பூமிக்கடியில் சேமிக்கிறார்கள்.
இன்று வசந்தத்தில் ஒருவர் சொன்னது.இந்தியா , சீனா இவற்றின் வளர்ச்சி பயமுறுத்துவதாக உள்ளது. எனவே முன்னனியில் இருக்க நாம் தொலைநோக்குடன் செயல்படவேண்ட்டியிருக்கிறது என்ற பொருளில்,
நீங்கள் சொல்வது போல் கண் முன்னே வளர்ச்சி தெரிகிறது
அன்புடன்
சிங்கை நாதன்
வாங்க சிங்கைநாதன்.
வரும் 2 ஆண்டுகள் பல வளர்சிப்பணிகள் வர இருக்கின்றன.
தளவாடங்கள் பூமிக்கடியில்?
நான் பார்க்கவில்லை.
வருகைக்கு நன்றி
Post a Comment