Monday, January 29, 2007

தண்ணீர் கசிவு

போன பதிவில் கான்கிரீட்டில் தோன்றும் விரிசலும் அதன் மூலம் தண்ணீர் கசிவையும் பற்றி மேலோட்டமாக பார்த்தோம்.

கீழே உள்ள படத்தை பார்க்கவும்.




உதாரணத்துக்கு நிலத்துக்கு கீழே போடப்படும் அஸ்திவாரமும் அதற்கு அடுத்து போடப்போகும் சுற்றுச்சுவரின் குறுக்கு வெட்டுப்படம் கீழே போட்டுள்ளேன்.


அஸ்திவாரம் போடும் போது,வெளிப்புரத்தில் காட்டியபடி ஒரு ரப்பர் டைப்பில் உள்ள ஒரு தட்டை வைத்து கான்கிரீட் போடுவார்கள்.இது பாதி கீழ் கான்கிரீட்டிலும் மீதி சுற்றுச்சுவர் கான்கிரீட்டில் பதியுமாறு பொருத்தப்படும்.இதனால் வெளியில் இருந்து வரும் தண்ணீர் உள்ளே வருவது தடுக்கப்படும்.

இது ஒரு வழி.

மற்றொரு வழி

அஸ்திவாரம் மற்றும் சுற்றுச்சுவர் இடையே உள்ள ஜாயின்ட் இல் கீழ்கண்ட மாதிரி ஒரு குழாயை பொருத்துவார்கள்.அதன் வாய் பக்கம் சுவர் கான்கிரீட்டுக்கு வெளியில் இருக்கும்.



கலர் படங்கள் கீழே




இப்படி பொறுத்தியபிறகு சுவர் கான்கிரீட் போடப்படும்.அந்த குழாய் முற்றிலும் கான்கிரீட் உள்ளே புதைந்துவிடும்.

இப்போது அந்த ஜாயின்ட் மூலம் தண்ணீர் கசிந்தால் மட்டுமே இந்த குழாய் உபயோகப்படும்,இல்லாவிட்டால் அப்படியே விட்டுவிடுவார்கள்.இது ஒரு வருமுன் காக்கும் தற்காப்பு நடவடிக்கை தான்.

சரி தண்ணீர் கசிகிறது என்றால்,இந்த குழாய் பொருத்திய குத்தைகாரர்களே அதற்கான உபகரணங்களுடன் வந்து தேவையான கெமிகல்களை கொண்டு பம்ப் மூலம் அந்த குழாயில் செலுத்துவார்கள்.இந்த ரசாயன கரைசல் தண்ணீருடன் கலந்து விரிய ஆரம்பிக்கும்..இந்த கரைசல் தண்ணீர் இருக்கும் இடங்களில் நன்றாக வேலைசெய்கிறது.இது நான் சுமார் 10 வருடங்களுக்கு முன்பு சிங்கையில் பார்த்த தொழிற்நுட்பம்.


இந்த தொழிற்நுட்பத்தை இப்போது எப்படி மாற்றிஅமைத்துள்ளார்கள் என்று அடுத்த பதிவில் பார்க்கலாம்.

5 comments:

ரவி said...

எங்கள் கிராமத்து வீட்டில் மழை வந்தால் மாடியில் தண்ணீர் தேங்கி மூலைகள் வழியாக தண்ணீர் இறங்கி திட்டுத்திட்டாக உள்ளது...

அதற்கு மாடியில் ஓடு பதிக்கவேண்டும் என்று கூறுகிறார்கள்...

ஓடு பதித்தால் எந்த அளவுக்கு பயன் தரும் ? சுன்னாம்பு சுருக்கி என்றால் என்ன ?

வடுவூர் குமார் said...

வாங்க செந்தழல் ரவி
ஒரு பதிவுக்கு வேண்டிய விபரங்கள் கொடுக்க வேண்டி வரும்
"செந்தழல் ரவி'க்கு நன்றி என்று ஒரு பதிவு போட வேண்டிவரும், :-))
சுண்ணாம்பு துருக்கி- பழைய நாட்களில் இந்த வெதரிங் கோர்ஸ், சுண்ணாம்பும்,வெல்லப்பாகும் ஒரு குறிப்பிட்ட சதவீதத்தில் கலக்கி கான்கிரீட் மீது போட்டு,கட்டையால் தட்டி தட்டி பதப்படுத்துவார்கள்.அதற்கு மேலும் ஏதோ போட்டு செய்வார்கள்.சரியாக ஞாபகம் இல்லை.பொதுப்பணித்துறையில் பயண்படுத்தினார்கள்.இப்போது யாரும் செய்வதாக தெரியவில்லை.

ஓடு பதிப்பது நல்லது அதற்கு முன்பு அந்த மாடி சிலாப் தாங்குமா என்று பார்க்கவும்.
இது வெயிட் ஏறும் சமாச்சாரம் ஆனாதால் இப்போது வேறு மாதிரி (பிட்டுமன்) செய்கிறார்கள்.
ஆதாவது கான்கிரீட் மீது பிட்டுமன் 2 தடவை அடித்துவிட்டு அதன்மேல் பாலிபார்ம் ஒட்டி அதற்கு மேல் ஒரு 3 அங்குலத்துக்கு சிமின்ட் மார்டர் போட்டுவிடுவார்கள்.
மனித நடமாட்டம் அதிகமாக இருந்தால் இதெல்லாம் தேவையில்லாமல் அதற்கு மேல் ஒரு ஸ்டீல் கூறை போட்டுவிடுங்கள்.ஒரே கல்லில் இரு மாங்காய்.

ரவி said...

விவரமான விளக்கத்துக்கு நன்றி குமார்..மாடி வீடுதான் நல்லா தாங்கும் என்று நினைக்கிறேன்...நீங்கள் சொல்லும் ஐடியா சூப்பர்...உடனே செயல்படுத்த யோசிக்க ஆரம்பிச்சாச்சு நானு...அம்மாவிடம் கேட்டுட்டு செய்துறவேண்டியதுதான்.

Anonymous said...

மொட்டைமாடியில் weathering proof செய்வது எப்படி ? செலவு குறைவாகவும் நல்லமுறையில் அமைப்பது எப்படி ?

வடுவூர் குமார் said...

அனானி
ஒவ்வொரு முறைக்கும் அதன் அதன் வயது மற்றும் செலவு. எதுவும் குறைந்த செலவுக்குள் அடங்கிவிடாது.அதிக செலவு நிறைய நாட்கள் தாங்கும் அதில் நமக்கு தேவையானதை தேர்ந்தெடுக்க வேண்டும்.