Friday, January 26, 2007

விரிசல்

கான்கிரீட் விரிசல்


கான்கிரீட்டின் பயன்பாடு என்பது கட்டுமானத்துறையில் முதுகெலும்பு போல்.அது இல்லாமல் இப்போது எந்த கட்டிடமும் கட்டப்படுவதில்லை.

ஆந்திரா பக்கம் போனால் இன்னும் சில கிராமங்களில் கிடைக்கும் கடப்பா கற்களை மட்டும் வைத்து அடுக்கி வீடு கட்டியிருப்பார்கள்.இங்கு சிமின்டுக்கு வேலையில்லாமல் போகிறது.ஏன் நம் பக்கம் இன்னும் சில கிராமங்களில் மண் சுவர் தான்,மேலுக்கு கீத்துக்கொட்டகை தான்.

இன்று கான்கிரீட் பல விதங்களில் பல நிறங்களில் கூட வருகிறது.அதன் நிறம் அது ஈரமாக இருக்கும் போது தான் தெரியும்.அதுவும் அது எந்த வகை சிமின்ட் மூலம் கலக்கப்படுகிறதோ அதன் நிறம் தெரியும்.

பெரிய பெரிய கட்டுமானப்பணியில் இப்போது கலவை இயந்திரம் வைத்து ஆட்களைக்கொண்டு ஜல்லி,மணல் மற்றும் சிமின்ட் போடுவதில்லை.அதற்குப்பதிலாக பேட்சிங் பிளான்ட் வைத்து அதன் மூலம் கலந்து ஓடும் கலவை இயந்திரம் மூலம் அந்தந்த இடத்துக்கு அனுப்பிவைப்பார்கள்.இப்படி பல வேலைகளை இயந்திரத்துக்கு மாற்றியதால் தரக்கட்டுப்பாடு 90% வரை அடையமுடிகிறது.

கான்கிரீட் கலக்கும் பேட்சிங் பிளான்ட்

இப்படி தரக்கட்டுப்பாடு அமைந்ததால் போடும் கான்கிரீட்டில் பிரச்சனை இருக்காது என்று பொருளாகாது.

அதுவும் தரைக்கு கீழ் கான்கிரீட் போடும் வேலை என்றால் பல விஷயங்களில் கவனம் வேண்டும்.எல்லாவற்றையும் செய்தாலும் ஒன்றே ஒன்று மட்டும் நமக்கு தப்பாமல் தண்ணிகாட்டும் அது தான் "தண்ணீர்".ஆதாவது கான்கிரீட் மூலம் தண்ணீர் ஒழுகுவது.

ஏன் இப்படி நடக்கிறது?

ஒரு சில காரணங்கள்..

கான்கிரீட் போடும் போது உபயோகிக்க வேண்டிய அதிர்வு இயந்திரம் (Viberator) சரியாக உபயோகப்படுத்தாது,அல்லது தேவையான அளவு போடாமல் போனாலும் கான்கிரீட் உள்ளேயே சிறிய ஓட்டைகள் உருவாகிவிடும்.இந்த ஓட்டைகள் மூலம் தண்ணீர் கசிய வழிபிறக்கும்.

மற்றது,போட்ட கான்கிரீட்க்கு பக்கவாட்டிலோ,மேலேயோ வரும் பாரம் அதன் மறுபக்கத்தில் சிறு விரிசலைக்கொடுத்து அதன் மூலமும் தண்ணீர் வர வழிவகுக்கும்.

மூன்றாவதாக பழைய மற்றும் புதிய கட்டுமான ஜாய்ன்ட் யில் சரியாக பராமரிக்காமல் போடப்படும் கான்கிரீட் மூலமும் வரும்.

இப்படி பல வழியாக வரும் தண்ணீருக்கு நாம் எப்படி தண்ணி காட்டப்போகிறோம் என்பதைப் பற்றி தான் வரும் பதிவுகளில் எழுதப்போகிறேன்.

முதலில் கான்கிரீட் ஏன் விரிசல் விடுகிறது? இங்கே சொடுக்கவும்



http://www.lmcc.com/news/spring2002/spring2002-7.asp


இன்னும் மேல் விபரங்களுக்கு இங்கும் பார்க்க


http://www.lmcc.com/news/summer2006/summer2006-04.asp

6 comments:

துளசி கோபால் said...

நம்ம வீட்டுலேயும் வாசல்பக்கம் தரையிலே கலர் காங்க்ரீட் போட்டோம். ஒரு வாரம் கழிச்சு அந்த
ஆட்களே வந்து ரெண்டு இடத்துலே 'கட்' செஞ்சுட்டுப் போனாங்கதான். அதுக்குள்ளே
ரெண்டு வெவ்வேற இடத்துலே விரிசல். அது அப்படித்தான் ஆகும். ஏரியா பெருசு ( 6 x 15 மீட்டர்)ன்னு
பதில் வந்துச்சு(-:

வடுவூர் குமார் said...

இப்படி நிகழ பல காரணங்கள் உண்டு.
அவர்கள் சொன்ன விஸ்தாரணம்.ஒரு அளவுக்கு மேல் போகும் போது அதற்கு விரிவடையும் படி ஜாயின்ட் கொடுக்கவேண்டும்.இது உள்ளிருக்கும் காற்று விரிவடையாமல் வெளியே செல்ல வழிவகுக்கும்.
மற்றது கான்கிரீட்டின் கீழ் தளம்,சரியான முறையில் அழுத்தப்படாமல் போட்டாலும் வரும்.

Deepa said...

Wow.. Got a feeling of attending seminar-for-dummies.. Thank you

வடுவூர் குமார் said...

வாங்க தீபா
கருத்துக்கு நன்றி.
வரவிருக்கிற பதிவையும் பாருங்க.
இதில் இன்னும் 2 பதிவுகள் உள்ளன.

வெற்றி said...

குமார்,
சீம்நெதில் இவ்வளவு விசயங்களா?!
நல்ல பதிவு. நான் அறிந்திராத பல தகவல்களை அறிந்து கொண்டேன்.
மிக்க நன்றி.

வடுவூர் குமார் said...

வாங்க வெற்றி
இன்னும் இருக்கு.முடிந்தால் அவ்வப்போது நம் திண்ணையில் வந்து இளைப்பாறிவிட்டு போங்கள்.
கருத்துக்கு நன்றி