Wednesday, January 24, 2007

ஸ்ரீமான் ஹரிஹர சுப்பிரமணியம்.

போன பதிவில் கட்டுமானத்துறையில் இருக்கும் சில ஓட்டைகளை பற்றி சொன்னேன்.
இந்த ஓட்டை,நேர்மை இல்லாத தலைமை அதிகாரிக்கும் ஓரளவு கணக்காயருக்கும் விளையாட வசதியாக இருக்கும் என்பது கசக்கும் உண்மை.இது ஒரு உதாரணம் தான் இப்படி பல சமயங்களில் விதியை மீற வேண்டிய கட்டாயம் ஏற்படும்.பல கட்டுமான கம்பெனிகள் நொடித்துப்போக நேர்மையில்லாத அதிகாரிகளிடம் பொறுப்பைவிட்டு விட்டு முந்திரிபருப்பு சாப்பிட்டுக்கொண்டிப்பதால் ஏற்படுபவை.எப்படி எப்படியெல்லாம் முதலாளியை/கம்பெனியை ஏமாற்றமுடியும் என்று இங்கு சொல்லப்போவதில்லை,அது என் எண்ணமும் கிடையாது.



திரு.ஹரிஹர சுப்பிரமணியத்துடன் நடந்துகொண்டிருந்த பேச்சு வார்த்தை தொடர்ந்தது.
எங்கள் பேச்சு இப்படியே போய் யாரும் விட்டுக்கொடுக்காத நிலையில், சரி சார்,நான் என் வேலையை பார்க்கிறேன் என்று சொல்லிவிட்டு கிளம்பினேன்.தலைமை அதிகாரிக்கு என்மேல் சற்று கோபம் இருந்தாலும் என்னை அவர் வெறுக்கவில்லை.வெகு சில சமயங்களிலேயே அவர் கோபப்பட்டு பார்த்திருக்கேன்.பதிவுசாக நடந்துகொள்பவர்களுக்கு கட்டுமானத்துறை ஒத்துவராது என்ற என் எண்ணத்தை உடைத்தவர் இவர் தான்.அவர் சொல்லநினைப்பதை நகைச்சுவை சேர்த்துசொல்வார்.புரிகிறவர்களுக்கு பட்டென்று புரிந்துவிடும்.ஒரு உதாரணம்.
ஏதோ விஷயமாக என்னை கூப்பிட்டு அவர் அறையில் பேசிக்கொண்டே ஏதோ எழுதிக்கொண்டிருந்தார்.ஒரு வேலையில், ஒப்பந்தக்காரை ஈடுபடுத்திய வேலை ஆட்கள் விபரம் மற்றும் தேதிகள் உள்ளனவா? என்றார்.



இல்லை என்றேன்.(இது என்னுடைய வேலையில்லை-அப்போது)



பிறகு கொஞ்சம் நேரம் பேசிவிட்டு நான் அறையை விட்டு வெளியே கிளம்பும் போது ஒரு சிறிய பேப்பரை கொடுத்தார்.



அதில் கீழ்கண்ட படத்தை போட்டு அதில் ஒரே ஒரு வரி










"Do Paper Work" என்று அர்த்தம் வரும் தொனியில் நச்சென்று சொல்லியிருந்தார்.அந்த காகிதத்தை எங்கோ சேகரித்து வைத்தேன் இப்போது கண்ணில் படவில்லை.
தலைமை அதிகாரி இப்படியென்றால் என்னுடைய முதல் அதிகாரி திரு.T.S.ஜனார்த்தனன்(மதுரைக்காரர்),மிகவும் சாந்தமாக உரையாடுபவர்.தில்லு முல்லு தெரியாதவர்.இவர் வேகப்பட்டு பேசும் போது அவரது போலியான கோபம் முகத்தில் தேங்கியிருப்பது அப்பட்டமாக தெரியும்.அந்த அளவுக்கு அப்பிரானி மனிதர்.குணவான்.



எனக்கு தூசி உவாமை இருந்த போது அதை எப்படி போக்குவது,யோகா,மூச்சுப்பயிற்சி என்று பல விதங்களை எடுத்துறைத்து ஓரளவு குணப்படுத்த வழிமுறையை காண்பித்தார்.தொடர்ச்சியான ஜலதோஷம் இருக்கும் போது அவர் சொன்ன மருத்துவம் இது தான்.





மெழுகுவர்த்தி அல்லது விளக்கில் ஒரு மிளகை சுடவைத்து அந்த புகையை இழுத்தால் நல்ல பலன் கிடைக்கும் என்பது.மற்றொன்று தண்ணீரை நன்கு சுடவைத்து பாத்திரத்தை மூடி வைத்துவிட்டு,போர்வை அல்லது கம்பளி போர்த்திக்கொண்டு பாத்திரத்தின் மூடியை திறந்து அதன் ஆவியை பிடிக்கவேண்டும்.சில மணித்துளிகளில் நல்ல பலன் கிடைக்கும்.எனக்கு கிடைத்தது.தேவையென்றால் யூகலிப்டஸ் அல்லது அமிர்தான்ஜன் கொஞ்சம் சேர்த்துக்கொள்ளலாம்.



இந்த சைட் கடலறுகே இருந்ததால் ஒரு முறை புயலையும் எதிர்கொண்டோம்.விடாமல் 3 நாட்கள் மழை.அப்போது தான் ஒரு கப்பல் இந்த புயலில் சிக்கி இங்கு வந்து தரை தட்டியது.இன்சூரன்ஸ்க்காக விட்டு விட்டார்கள் என்றார்கள்.எவ்வளவு நிஜம் என்பது தெரியவில்லை.கப்பலை பக்கத்தில் சென்று பார்க்கும் வாய்பு கிடைத்தது.யம்மாடி தரையில் நிற்கும் போது எவ்வளவு பெரிதாக இருக்கு.அதில் வேலை செய்யும் மக்கள் கயற்றேனியில் ஏறி இறங்கிக்கொண்டிருந்தார்கள்.ரொம்ப பக்கத்தில் விடவில்லை.சில நாட்கள் கழித்து டக் போட் மூலம் கடலுக்குள் இழுத்துவிடப்போவதாகவும் சொன்னார்கள்.முடிந்ததா என்று தெரியவில்லை.


கிட்டத்தட்ட இந்த படத்தில் இருந்த மாதிரி தான் இருந்தது.



காகிநாடாவில் இருக்கும் வேலைகள் முடியும் தறுவாயில் ஒவ்வொருவராக மாற்றலாகிக்கொண்டிருந்தார்கள்.


அப்போது பல பெரிய வேலைகள் புட்டர்பர்த்தியில் வரப்போவதாகவும் அங்கு தான் மாற்றல் வரும் என பேசிக்கொண்டிருந்தார்கள்.என்னுடைய முதன் அதிகாரியும் அங்கு தான் போகப்போவதாக சொன்னார்.


புட்டபர்த்தி என்றவுடன் ஞாபகத்துக்கு வரும் சாய்பாபா தான் எங்களுக்கும் வந்தது.அப்போது அவர் செய்யும் பல அதிசியங்கள் (சித்து வேலை?) எனக்கு நம்பிக்கையில்லை.அதனால் பலமாக விமர்சனம் செய்வேன்.கடவுளை அடைய அவர் இந்த மாதிரியான வேலைகளை செய்யவேண்டாம்.இதனால் ஒரு பிரயோஜனமும் இல்லை.அவர் இந்த மாதிரி மக்களை ஏமாற்றக்கூடாது என்று எனக்கு தோன்றிய தத்துவங்களை சொல்லிக்கொண்டிருந்தேன்.ஒருவேளை எனக்கு அங்கு மாற்றல் இருக்காது என்ற தைரியமோ என்னவோ தெரியாது.பக்தர்களுக்கு கடவுளைக்காட்ட இது சரியான முறையில்லை என்பது என்னுடைய கருத்து,அப்போது,இதையெல்லாம் கேட்டுக்கொண்டிருந்த என் முதன்மை அதிகாரி,வெங்கடேசா,நான் கூட அவர் பக்தர் கிடையாது.ஒருவரைப்பற்றி சரியாக தெரிந்துகொள்ளாமல் ஏதும் சொல்லாதே.நமக்கு தெரியாதது எவ்வளவோ அதில் இதுவும் ஒன்று.


இப்படி சொன்ன முதன்மை அதிகாரிக்கு கிடைத்தது என்ன தெரியுமா?


வாங்க அதை மற்றொரு சமயத்தில் சொல்கிறேன்.


இப்போது புட்டபர்த்தியில் உஷ்ணம் அதிகமாக இருப்பதால்,அதைப்பற்றி சிறிது பதிவுகளுக்கு பிறகு எழுதுகிறேன்.

:-))

4 comments:

கோவி.கண்ணன் [GK] said...

குமார்,

எல்லாவற்றையும் ஞாபகம் வைத்திருந்து எப்படித்தான் அதை எழுத்திலும் கொண்டு வருகிறீர்களோ ?
வியப்பாக இருக்கிறது.

நல்ல ஞாபக சக்தி சார் உங்களுக்கு !
பாராட்டுக்கள் !

வடுவூர் குமார் said...

வாங்க கோவியார்,
பாராட்டுக்கு நன்றி.
ஒருவேளை இங்கு எழுதியாச்சில்ல,இனி மறந்திடுவேனோ என்னவோ?
:-))

கால்கரி சிவா said...

குமார், நீங்க சொன்ன ஜனார்த்தனன் மதுரை தியாகராசர் பொறியியற்கல்லூரியில் படித்தவரா? 1982 இல் பி.ஈ முடித்தவரா?

வடுவூர் குமார் said...

சிவா
அப்படித்தான் நினைக்கிறேன்.சரியாக ஞாபகம் இல்லை.
ஆனால் அவர் தங்கியிருந்த வீட்டு முகவரி மட்டும் லேசாக ஞாபகம் இருக்கிறது,மதுரையில் ஏதோ 1000 மண்டபம் வீதி என்று வரும்.
அவரும் சௌராஸ்டிர இனத்தை சேர்ந்தவர் என்று பேச்சு வாக்கில் சொன்னார்.
உங்களுக்கு தெரியுமா?இப்போது எங்கிருக்கிறார்?
நல்ல மனிதர்.