Monday, January 08, 2007

கடற்கரைக்கு அருகில்

இந்த ரெசிடென்ட் இஞ்சினியர் நம்மிடம் தான் இவ்வளவு மோசமாக நடந்துகொள்கிறார் அதுவும் போன சைட்டில் நடந்ததை ஞாபகம் வைத்துக்கொண்டு என்று நினைத்திருந்தேன்.

நண்பர்களிடம் பேசிய பிறகு தான் தெரிந்தது பலரும் இவர் மீது வெறுப்பாக இருப்பது.அதோடில்லாமல் வேறு காரணத்திற்காக இவர் இன்னும் சில மாதங்களில் மற்றொரு இடத்துக்கு மாற்றல் ஆகி போகக்கூடும் என்று மகிழ்சியான செய்தி காதில் விழுந்தது.

அதனால் பொறுமையை கடைப்பிடிக்க தொடங்கினேன்.

இந்த சைட் கடலுக்கு வெகு அருகாமில் இருந்தது.ஒரு சாலையை தாண்டினால் கடல் தான்.அதனால் தண்ணீர் மட்டம் தரையில் இருந்து சற்றே கீழே இருந்தது.இப்படி இருந்தால் தரைக்கு கீழ் பார்க்கும் வேலைகளில் பெரிய பிரச்சனைகளை எதிர்கொள்ள வேண்டிவரும்.

தண்ணீர் ஒரு பிரச்சனை என்றால் கடல் மண் தோண்டும் போது சரிந்துகொண்டே இருக்கும்.தேவையான சாரங்கள் அடிக்காமல் ஒரு அளவுக்கு மேல் மண் தோண்டமுடியாது.

தண்ணீர் பிரச்சனையை தீர்க்க வேலை செய்யும் இடத்தை சுற்றி ஒரு 10 மீட்டர் ஆழத்துக்கு 1~ 1.5 மீட்டர் இடைவெளிக்கு ஒரு பிளாஸ்டிக் குழாய்களை சொருகி அதை ஒரு பெரிய குழாயுடன் இணைத்துவிடுவார்கள்.இந்த பெரிய குழாயை தண்ணீர் இழுக்கும் இயந்திரத்துடன் இணைத்து 24 மணிநேரமும் தண்ணீரை வெளியேற்றிக் கொண்டிருக்குமாறு செய்துவிடுவார்கள்.

இப்போதும் நிதி நிலவரம் கேமரா வாங்கும் அளவுக்கு முன்னேராததால் படங்கள் எடுக்க முடியவில்லை.இணையத்திலும் கிடைக்கவில்லை.

அப்போது தான் ஆரம்பித்த ஒரு கட்டிடத்தின் மேற்பார்வை வேலை எனக்கு கொடுக்கப்பட்டது.

கீழே உள்ள படத்தை பார்க்கவும்.




சுமார் 350 மீட்டர் நீளமும் 45 மீட்டர் அகலமும் கொண்ட கட்டிடம்.இரண்டு பக்கமும் தாங்கி நிற்க தூண்களும் அதன் மேல் கூரைக்கு தேவையான டிரஸ்ஸ¤ம் அதன் மேல் சிறிய அளவில் முன்னமே போட்டு மேல் வைக்கக்கூடிய விதத்தில் உள்ள சிலாபுகள் இருக்கும்.

45 மீட்டர் அகலம் என்பதால் அந்த டிரஸ் இரண்டு பகுதியாக போட்டு நடுவில் சப்போர்டு வைத்து இணைப்பார்கள்.

இந்த வேலை இப்படி போய்கொண்டிருக்கும் போது வேறு ரெசிடென்ட் இன் ஜினியர் வருவதற்கான ஏற்பாடுகள் நடந்துகொண்டிருந்தது.அவர் இவர் என்று பலருடய பெயர்கள் அடிபட்டு கடைசியில் நான் மேட்டூரில் வேலை பார்த்தபோது இருந்த திரு.ஹரிஹர சுப்பிரமணியன் தான் வரப்போகிறார் என்று கேள்விப்பட்டேன்.நிறைய நிம்மதியாக இருந்தது.நான் மேட்டூரை விட்டு வரும் போதே இவரிடம் ஒன்றே ஒன்று தான் யாசித்தேன். எனது அடுத்த சைட்டில் எனக்கு சிமினி வேலை கொடுக்கக்கூடாது என்று.அப்போது அவரும் ஒத்துக்கொண்டு அனுப்பிவைத்தார்.

அவரும் வந்தார்.

நான் பார்த்துக்கொண்டிருக்கும் வேலையும் கொஞ்சம் கொஞ்சமாக வளர்ந்துகொண்டு வந்தது.

இந்த சமயத்தில் பல இடங்களில் வேலை மிக ஜரூராக நடந்துகொண்டிருந்தது.சில மாதங்களுக்கு முன்பு ஆரம்பித்த 120 மீட்டர் உயரம் உள்ள சிமினி கீழ்தள வேலைகளை முடித்துவிட்டு தரைக்கு மேல் உள்ள வேலை நடக்கதயாராக இருந்தது.அதை மேற்பார்வை பார்த்துக்கொண்டிருந்தார் திரு.T.S.ஜனார்த்தனன் (மதுரைக்காரர்-1000 வாசல் வீதி என்று விலாசம் வரும் சரியாக ஞாபகம் இல்லை).இவரைப்பற்றி சுவையான விபரங்கள் பின்னால் வரும்.

இதற்கிடையில் ஒரு புதிய பிரச்சனை ஆரம்பித்தது,ஆனால் அது என்னை பாதிக்கப்போகிறது என்று அப்போது எனக்கு தெரியாது.

வாங்க அடுத்த பதிவுக்கு.

12 comments:

வடுவூர் குமார் said...

வாங்க மகேஷ்
கடல் மீது நான் வேலை செய்ததில்லை,ஆனால் எப்படி செய்கிறார்கள் என்ற கேள்வி ஞானம் தான் இருக்கிறது.நதியின் மீது வேலை செய்த அனுபவத்தை பிறகு ஒரு சமயத்தில் எழுதுகிறேன்.
வருகைக்கு நன்றி

இலவசக்கொத்தனார் said...

அப்புறம் என்ன ஆச்சு? சீக்கிரம் சொல்லுங்க. :)

//அதனால் பொருமையை கடைப்பிடிக்க தொடங்கினேன்.//

பொறுமையை...

Anonymous said...

அட மேட்டூர் குமாரன்னா, சிவில் என்சினியரிங் இப்பெல்லாம் மவுசு இல்லாத ஒன்னுன்னு எல்லாரும் பேசிக்கிறாங்களே. நீங்க என்ன நினைக்கிறீங்க

Anonymous said...

Dear Mr.Kumar,
Please keep posticng such things. And more over please explain how they make buildings or bridges in the sea.. I once saw the Bahrain, Saudi bridge... It's an amazing technology.. We want you to explain such things.
Mahesh

வடுவூர் குமார் said...

நன்றி இலவச கொத்தனார்..
மாத்திடுகிறேன்.

வடுவூர் குமார் said...

வாங்க டக் டிக்
குடும்பம் வீடு என்று வாழ்கை முறை இருக்கும் வரை கட்டுமானத்துறைக்கு வேலை இருக்கும்.கவலைப்படவேண்டாம்.
என்ன கணினி,குளிர்சாதன அறை வேலை எல்லோருக்கும் கிடைக்காது.
ஏன் மற்றவர்களுக்கு வேலை பார்க்கவேண்டும்?நீங்களே முதலாளியாகிவிட வேண்டியது தானே?
என்னால் முடியுமா? என்று கேட்கிறீர்களா?
அதை மற்றொரு பதிவில் போடுகிறேன்.

நாகை சிவா said...

நல்ல பீடிகையுடன் நிறுத்தி உள்ளீர்கள். அடுத்த பதிவில் பார்க்கலாம்.

தமிழ்மணத்தில் கடற்கறை என்று வந்தது. நான் எதோ கடலுக்கு ஏற்பட்ட கறையை பற்றி சொல்லி இருப்பீர்கள் என்று வந்தேன் ;-)

Karthikeyan said...

நல்லா இருக்கு தொடருங்கள்

வடுவூர் குமார் said...

வாங்க சிவா
முதல் தடவை பப்லிஸ் பண்ணியபிறகு தான் "தவறு"
தெரிந்தது.உடனே திருத்திவிட்டேன்.ஆனா தமிழ்மணம் "பிடித்துவிட்டால்" முகப்பு பக்கம் தன்னை புதுப்பித்துக்கொள்ளும் வரை அந்த தவறு தெரிந்துகொண்டிருக்கும் என நினைக்கிறேன்.
நன்றி

வடுவூர் குமார் said...

வாங்க கார்த்திக்
அடுத்த பதிவை கூடிய சீக்கிரம் போட்டு விடுவோம்.
வருகைக்கு நன்றி.

Anonymous said...

குமார்..இந்த கமென்ட் பொக்ச் பிளொகில் இணக்க என்ன செய்ய வேண்டும்..??
தீபா

வடுவூர் குமார் said...

வாங்க கீதா
இந்த பதிவை பார்க்கவும்.
http://madavillagam.blogspot.com/2007/01/blog-post_04.html
எனக்கு வந்த ஈ மெயிலை உங்களுக்கு அனுப்புகிறேன்.மற்றவை அதில் இருக்கும்.
மேலும் அந்த ஸ்ட்டீபன் சுட்டினால் அதில் பகுதி விபரம் கிடைக்கும்.தமிழுக்கு என்னுடைய நிரலை அனுப்புகிறேன்.
தொழிற்நுட்பர் ஆனதால் நீங்கள் என்னை மாதிரி கஷ்டப்பட மாட்டீர்கள் என நம்புகிறேன்.
ஆமாம்,உங்க வலைப்பூவில் உங்க ஈ மெயில் முகவரி இருக்கா?
வருகைக்கு நன்றி