இந்த வலைப்பூக்களில் பின்னூட்டம் இடுவது என்பது அவரவர் கணினியில் வெவ்வேறு முறையில் இருக்கும்.
உதாரணத்துக்கு
வின் XP உபயோகிப்பவர்கள் ஈ கலப்பை மூலம் தமிழில் பின்னூட்டம் இடுவார்கள்.
என்னை மாதிரி வின் 95 வைத்திருப்பவர்கள் ஆன் லைனில் உள்ள யுனிகோட் மாற்றிகள் மூலம் தட்டச்சு செய்து அதை ஒத்து பிறகு ஒட்டுவோம்.
லினக்ஸ் உபயோகிப்பவர்கள் தட்டச்சு முறையை மாற்றி தமிழில் பின்னூட்டம் இடுவார்கள்.
எப்படி செய்தாலும் ஒத்தெடுத்து அல்லது வெட்டி ஒட்டவேண்டியிருக்கிறது.அல்லது தட்டச்சு முறையை மாற்றவேண்டியுள்ளது.
கணினி பயண்பாடே, உபயோகிப்பாளர்கள் தேவையில்லாத வேலை மற்றும் திரும்ப திரும்பச்செய்யும் வேலைகளை குறைப்பதற்காகத்தான்.அப்படியிருக்கும் போது தமிழில் உள்ளீடு செய்வதற்கு இவ்வளவு செய்யவேண்டியுள்ளதே என்ற அரிப்பு பல மாதங்களாக என்னுள் ஓடிக்கொண்டிருந்தது.
பின்னூட்டம் என்ற பதிவின் மூலம் என்னுடைய ஆதங்கத்தை வெளியிட்ட போது திரு.வசந்தன் நிரலை அனுப்பி உபயோகிக்கச்சொன்னார்.அது என்னுடைய வலைப்பூவிலேயே இரு கட்டங்களை கொடுத்து தேவையான எழுத்துருவை தேர்ந்தெடுத்து பின்னூட்டம் கொடுக்க வசதி செய்தது.இருந்தாலும் தேவையில்லாத விஷயங்களும் மற்றும் வெட்டி/ஒட்டும் வேலையும் இருந்தது.
அதை கொஞ்ச நாட்களுக்கு வைத்திருந்தேன்.திடிரென்று நம் தமிழ் வலைப்பூ படிப்பவர்களில் ஒருவர் செந்தமிழில் பின்னூட்டம் கொடுக்க ஆரம்பித்தவுடன் அதை எடுத்துவிட்டேன்.
இருந்தாலும் மூளை மறக்கவில்லை.
போன மாதம் என்று நினைக்கிறேன்.திரு ரவிசங்கர் எழுதிய பதிவில் இந்த முறையை பற்றி ஒருவர் எழுதியிருந்தார்,அதில் என் பெயரை குறிப்பிட்டு நான் உபயோகித்ததையும் சொல்லியிருந்தார்.அப்போது தான் புரிந்தது,என்னுடைய வலைப்பூவை பலரும் படிக்கிறார்கள் என்று.அந்த பதிவில் திரு ஸ்டீபன் பொல் வெப்பர் அவர்களின் டெம்பிளேட் ஹேக் பற்றி குறிப்பிட்டிருந்தார்.அதைப்பற்றி படித்துக்கொண்டிருந்த போது "கல் விட்டெறிவோமா" என்ற எண்ணம் தோன்றியது.சரி முயற்சிப்பதில் தவறில்லை என்று எண்ணி ஒரு மெயில் அனுப்பினேன்.
முதலில் இவரை உள்ளூர் சீனர் என்று நினைத்தேன்.ஆனால் இங்கு வந்து படித்துக்கொண்டிருக்கும் வெளிநாட்டவர்.
இவர் கொடுத்த ஹேக் பின்னூட்டம் கட்டத்தை வலைப்பூ உள்ளே கொண்டு வந்தது.ஆனால் வெட்டி ஒட்டும் வேலை குறைந்தபாடில்லை.
யோசித்துகொண்டிருந்தபோது எதற்கு இரண்டு எழுத்துரு? பாமினி & தமிங்கலம் இவற்றில் நான் தமிங்கலத்தை மட்டும் வைத்துக்கொள்ளும் எண்ணத்தில் டெம்பிலேட்டில் தேவையில்லாதவற்றை எடுத்துவிட்டு காப்பிக்கு ஒரு பட்டன் கொடுத்துவிடலாம் என்று தேவையானதை செய்தேன்.ஆனால் இந்த காப்பி பட்டன் மட்டும் சரியாக வேலை செய்யவில்லை.
திரும்பவும் அவரிடம் போக தயக்கம்,என்னதான் செய்துகொடுத்தாலும் பணம் கொடுக்காமல் அவரை வேலை வாங்குகிறோமோ என்ற எண்ணம் தலைதூக்கியது.
கொஞ்ச நாள் ஆறப்போட்டு விட்டு வாசிப்பகத்தில் ஜாவா ஸ்கிரிப்ட் புத்தகத்தை எடுத்து படிக்க ஆரம்பித்தேன்.
என் அறிவுக்கு தெரிந்த அளவு செய்தும்,சரியாக வரவில்லை.
மீண்டும் யோசித்த போது..
தேவையில்லாத எழுத்துருவை எடுத்தாகிவிட்டது.
காப்பி பட்டன் வேலை செய்ய மறுக்கிறது என்ற போது எதற்கு அந்த பட்டன்? என்ற யோஜனை வந்தது.மேல் உள்ள கட்டத்தில் உள்ளீடு செய்யும் போது அப்படியே அது பின்னூட்ட கட்டத்தில் வந்துவிட்டால்?பின்னூட்டம் செய்பவர்களுக்கு மிக வசதியாக இருக்கும் அல்லவா?
எனக்கு வேறு வழியில்லை என்பதால் திரும்பவும் ஸ்டீபனை நாடினேன்.
மனிதருக்கு என்ன ஒரு நல்ல மனது!!
உடனே அதை மாற்றி அனுப்பியிருந்தார்,அட்டகாசமாக வேலை செய்கிறது. ·யர் பாக்ஸில் முயற்சித்தேன் அதிலும் அழகாக வேலைசெய்கிறது.
நம் தமிழுக்காக வேலை செய்த திரு ஸ்டீபன் அவர்களுக்கு ஒரு பெரிய நன்றியை தெரிவித்துவிடுவோம்.
முயற்சித்துவிட்டு சொல்லுங்கள் நண்பர்களே.
நான் கேட்ட கேள்விகளும் பதிலும் கீழே
Hi Stephen
I went thro this hack baut my template doesn't have <$BlogItemCreate$>.Can guide me a bit?
Actually my concern is
I have a script in blog to write in my native language.When they type their comments and click send,the comment should go to the default comment box.But its not showing up in default box,propably hidden.How I give link between the default comment box and the posting box?.
I hope I made it clear.
Pl help me.
The way it works in your blog.
Thanks
venkat
If you do not have a <$BlogItemCreate$> tag, just put the code right after the code that displays the comments
Hi Mr stephen
It didn't work that way.May be I didn't do it exactly.
Anyway,thanks for the reply.
Regards
venkat
If you send me a link to your blog, I can take a look.
Please note that if you are on the new version of Blogger I CANNOT make this hack work for you at the present moment -- there are script incompatibilities.
Hi Stephen
I am still using the older version of Blogger.Let me look into the code one more time and see what happens.
I saw in your blog,its stated clearly that this hack doesn't work even in beta.
My blog is http://madavillagam.blogspot.com/ (Construction Industry).This blog have been written in my native language "Tamil"- for info.
I have attached the template too for easy reference.
Thanks for helping me .
Regards
venkat
Hi Stephen
I am still doing some hack to suit my requirements.
Can't we leave open the comment box for ever instead of opening after user click "Post Comment" link?
I hope you don't mind, clearing my doubts on this latter stage.
Anyway,thanks for the guidance.
Have a nice day.
venkat
Hi Stephen
Need some more help on tuning my blog template.
This time ,if u don't mind please make your correction in different color so that I can understand where, what effects do take place.
The modification makes the visitor to my blog should be easier.
I have 3 boxes
1st box for put the comments in english
2nd box converts it into my native language
Below this 2nd box I have button called "Copy" which doesn't work presently.This copy button should copy whatever appears in the No.2 box.
The 3rd box is the default comments box.If the above copy button works,the user just click on the 3rd box and paste it but it doesn't .
My ambition is
I don't require the 2nd box.
The conversion should directly takes place in the 3rd box. So no more copy button . Those who want to put their comments in English,they can do it directly at the 3rd box.
How to link the 2nd box text to 3rd box and make the 2nd box invisible?
Please help me.
I attached my recent template for easy editing.
I would like to learn hence please highlight your correction.
Thanks a lot.
Last but not least "Have a nice Happy New Year"
Venkat
Try the attached -- blue is stuff to be removed, red is stuff to be added :)
Ya!!It worked the way I want.
8 comments:
ஒரு நல்ல முயற்சி நன்றாக வேலை செய்கிறது.
In fire fox we can install one Add-Ons that is TamilKey 0.3, iam using that
இதன் மூலம் வேண்டிய கீ-போர்ட் format ஐ தேர்வு செய்து டைப் செய்யலாம்
வாங்க அனானி
தகவல்களுக்கு நன்றி,இருந்தாலும் அந்த கீ போர்டு கூட இதில் மாற்ற வேண்டிய அவசியம் இல்லாமல் போகிறதே? அது தான் சிறப்பு.
கலக்குறீங்க!
வாங்க அனானி
இந்த புகழுரைக்கு சொந்தக்காரர்கள் எல்லாம் கீழே
திரு.சுரதா
திரு.கிருபா சங்கர்
திரு.ஸ்டீபன் பொல் வெப்பர்.(Mr Stephen Paul Webper)
வருகைக்கு நன்றி
எனக்கெல்லாம் அந்தப் பரச்சினை இல்லை!
வாழ்க ஈகலப்பையைக் கொடுத்தவர்கள்!
வாங்க சுப்பையா சார்,கஷ்டம் இல்லாத வரை சந்தோஷம் தான்.
நன்றி
புதிய பிளாக்கருக்கு மாறியதன் மூலம் அந்த கொமன் பெட்டியை இழந்து விட்டீர்கள் போல உள்ளதே?
ஆ.. அத்துடன் தைப்பொங்கல் வாழ்த்துக்ளும் தெரிவித்துக்கொள்கின்றென்..
ஆமாம் மயூரேசன்,
திரும்ப உடைக்கவேண்டும்,இல்லாவிட்டால் திரும்ப அவர் உதவியை நாடவேண்டும்.
வாழ்த்துக்களுக்கு நன்றி
Post a Comment