Monday, October 23, 2006

((((காது))))

என்னய்யா தலைப்பு இது? ஏதோ காதுக்குள்ளே ரீங்காரம் அடிக்கிறமாதிரி!!

இது முக்கியமாக சென்னைவாசிகளுக்காக!!??

இன்று (நேற்று) காலை 10.30 மணிவாக்கில் ஒரு வேலையாக விவேக் அன்ட் கோ -வடபழனி பக்கம் உள்ள கடைக்கு போக வேண்டியிருந்ததது.

காலை வேளை ஆனதால் கூட்டம் அவ்வளவாக இல்லை.போன விஷயங்கள் முடிய சில நிமிடங்களே ஆனதால்,அடுத்த Programme பற்றி மனைவியுடன் யோசித்தவுடன், சரி காசி தியேட்டர் பக்கம் போகலாம் என்றார்.நமக்கு தான் எதிர்த்து பேசி பழக்கம் இல்லாததால் "மண்டையை மட்டும் ஆட்டினேன்".அவுங்களுக்கு கமல் படம் மேல் ஆசை என்பதால் வேட்டையாடு விளையாடு இன்னும் ஓடிக்கொண்டிருந்தால் பார்க்கலாம் என்று நினைத்து, விட்டோம் வண்டியை.

மணி 11.25 காலை நேரம்.

காசி திரை அரங்கம் பக்கம் போய் பார்த்தால் "தலை.." போட்டு வரலாறு படம் பெரிதாக தொங்கிக்கொண்டிருந்தது.சரி கமல் படம் போய்விட்டது போல் என்று நினைத்துக்கொண்டு வீட்டுக்கு போய்விடலாம் என்றிருந்தோம்.

மனைவிதான் உள்ளே போய் பார்ப்போம் "ஓடவில்லை என்றால் திரும்பிப்பொய்விடுவோம்" என்றார்.

இல்லாவிட்டால் உதயம் போய் பார்கலாமா என்றேன், நான்.

வண்டியை வெளியிலேயே நிறுத்திவிட்டு உள்ளே போய் பார்த்தால் நம்ம கமல் படம் 11.30 மணி காட்சியாக ஓடிக்கொண்டிருந்தது.

சந்தோஷத்தில் 40 ரூபாய் டிக்கட் இரண்டு எடுத்துக்கொண்டு வெளியில் வந்து மனைவியிடம் சொன்னேன்.அவுங்களுக்கு ரொம்ப சந்தோஷம்.

மணி 11.30 ஆகியும் கேட் திறக்கிறமாதிரி தெரியாததாலும் மதிய சாப்பாட்டு நேரம் நெருங்கிக்கொண்டிருந்ததாலும் கொஞ்சம் சாப்பிட்டுவிடலாம் என்று பக்கத்தில் உள்ள சரவண பவன் போய் ரூபாய் 67.75 க்கு சாம்பார் வடை,சாம்பார் இட்லி மற்றும் ஒரு காபி சாப்பிட்டு வந்தோம்.

திரும்ப திரை அரங்குக்கு வந்த போது 40 ரூபாய் டிக்கட்டுக்கு 90 ரூபாய் பால்கனியை காண்பித்து உட்காரச்சொன்னார்கள்.இது என்ன கணக்கோ தெரியவில்லை.

கமல் கண்ணை பிரித்து காட்டும் காட்சியில் இருக்கையில் உட்கார்ந்தோம்.

அவ்வபோது ஒளி இழக்கும் போது நம் ரசிகர்கள் கொடுக்கும் விசில் சத்தத்தில் திரை உயிர்பிக்கப்பட்டது.

ஒலி...

இடைவேளை வரை சில நிமிடங்களுக்கே காதை பொத்திக்கொள்ளும் அளவுக்கு சவுண்டு இருந்ததால் ஒன்றும் தெரியவில்லை.

இடைவேளைக்குப் பிறகு..

ஆண்டவா!! நம்மளை பய முடுத்துகிறேன் என்று நினைத்துக்கொண்டு ஒரு சவுண்டு போடுகிறார்களே, அதை இரு காதுகளையும் பொத்திக்கொண்டாலும் தாங்க முடியவில்லை.

இப்படி ஓடிக்கொண்டிருக்கும் போது ஒன்றை கவனித்தோம்,எங்களைத் தவிர வேறு யாரும் காதை பொத்திக்கொள்ளவில்லை.அதிசயமாகவும் அதே சமயத்தில் அவர்களை நினைத்து பரிதாப்பட வேண்டியதாக இருந்தது.

நம் சென்னை மக்கள் சாலையில் செல்லும் போதும் வீட்டில் தொலைகாட்சியில் நிகழ்வுகளை பார்க்கும் போது கேட்கப்படும் ஒலி அளவு மிக அதிகமாக இருப்பதனால் திரை அரங்குகளில் ஏர்படும் சத்தம் ஒன்றும் இல்லாமல் போகிறது.

மறைமுகமாகச்சொன்னால் மக்கள் சிறிது சிறிதாக கேட்கும் தண்மையை இழந்து வருகிறார்கள் என்று தோனுகிறது.

எங்களை மாதிரி வெளியில் இருந்து வந்து பார்பவர்கள் சொன்னால் தான் உங்களுக்கு தெரியும்.

இங்குள்ளவர்கள் இந்த ஒலி அளவுக்கு பழக்கப்பட்டுவிட்டதால் வித்தியாசம் தெரிவதில்லை.பிறக்கும் குழந்தைகளுக்கு செவிப்பறை கொஞ்சம் ஸ்ட்ராங்கா இருந்தால் நல்லது.

கடைசிவரை காதிலிருந்து விரலை எடுக்காமல் பார்த்து முடித்தாலும் வெளியில் வரும் போது மனைவிக்கு "தலைவலி" ஆரம்பித்திருந்தது.

சென்னை மக்களே!! உங்கள் காது (((( ஜாக்கிரதை ))))

17 comments:

துளசி கோபால் said...

இது நிஜமான உண்மை.
ஊர்லே ரொம்ப சத்தம்ப்பா.

தெருவிலே நடந்துபோனாலும் டிவி சீரியலை மிஸ் செஞ்சுறக்கூடாதுன்ற
'ஆர்வம்' போல இருக்கு:-)))))

நமக்குத்தான் மண்டை இடி.

Anonymous said...

எழுதிக்கொள்வது: ரேவதி நரசிம்ஹன்

நல்ல கருத்து குமார். நாங்கள் தியேட்டர் பக்கம் போயே 10 வருடங்கள் ஆகி விட்டது.
நாங்களொ சென்னை மக்களோ மாறிவிட்டோம்.எதற்கு இத்தனை சத்தம்?நடிக்கும் நடிகர்கள் இதை ஆமோதிக்கிறார்களா?

15.57 24.10.2006

சிவமுருகன் said...

) காதுகள் (

கடவுள் தாங்க காப்பாத்தனும்.

வல்லிசிம்ஹன் said...

நல்ல கருத்து. எங்களுக்கு மட்டும்தான் இது ஒத்துக் கொள்ளவில்லையோ என்று
நினைத்தேன்.

எத்தனையோ ஆசையாகப் படம் பார்க்கப் போனாலும் ,
சத்தம் அதிகமாக இருப்பதால்(டால்பி?) படத்தின் உரையாடல்கள் காதில் விழுவதில்லை.
அதனால் படம் பார்க்கும் ஆசை விட்டுவிட்டது.

இலவசக்கொத்தனார் said...

ஆமாம் குமார். இது சரிதான். எனக்கு இங்கிருக்கும் சிறிய தியேட்டர்களிலும் நம் ஆட்கள் தமிழ் படம் போடும் பொழுது அவ்வளவு சத்தம் வைக்கிறார்கள். தியேட்டர் சென்று படம் பார்ப்பது என்பதையே விரைவில் விட்டு விட வேண்டியதுதான் என நினைக்கிறேன்.

வடுவூர் குமார் said...

துளசி
இந்ததடவை என் அப்பா வீட்டு தொலைகாட்சிப் பெட்டி அலறுவதை கேட்டவுடன் தான் புரிந்தது அவரின் கேட்கும் திறன் மங்கி வருவதை.ஆனால் நல்ல செவி உள்ளவர்கள் வீட்டில்.. சத்தம் அதைவிட அதிகம்.

வடுவூர் குமார் said...

வாங்க ரேவதி நரசிம்மன்
இங்குள்ள பல ரசிகர்கள் இப்படித்தான் விரும்புகிறார்கள்.
நடிகர்கள் இதில் அவ்வளவாக தலையிடுவது இல்லை போல் தெரிகிறது

வடுவூர் குமார் said...

ஆமாங்க சிவமுருகன்.
அதுவும் சொந்த காசு கொடுத்து..தேவையா என்று மக்கள் தான் யோசிக்கவேண்டும்.

வடுவூர் குமார் said...

வாங்க வல்லிசிம்ஹன்
இது இங்கு மட்டும் இல்லை,சிங்கையிலும் உண்டு,பல தமிழ் படங்களுக்கு Ear Plug உடன் போயிருக்கேன்.

வடுவூர் குமார் said...

வாங்க இலவசகொத்தனார்..
தியேட்டர் பக்கம் போய் ஏன் தலைவலியோடு திரும்ப வேண்டும் என்று மக்களும் நினைக்கவேண்டும்.
நல்ல சூழ்நிலை ஏற்படுத்திக்கொடுத்தால் மக்கள் கூட்டம் தன்னாலே வரும்.
இதைச் சொல்ல சரியான இடம் தெரியவில்லை செயல்படுத்த யார் இருக்கிறார்கள் என்றும் தெரியவில்லை.

Kannabiran, Ravi Shankar (KRS) said...

கண்களுக்கு 3D கண்ணாடி கொடுப்பது போல், காதுகளுக்கும் ஏதாச்சும் கொடுக்கச் சொல்லணும்.

காது "காது" (தெலுங்கு) ஆகாமல் காப்பத்திக்கறது நம்ம கையில் தான் இருக்கு போல!

ஆமாம், தலைவர் படத்தை ஆரவாரம் இல்லாமல் பாக்க மக்கள்ஸ் ஒத்துப்பாங்களா? :-)) சரி அவருக்கு மட்டும் விதிவிலக்கு?்! :-))

SP.VR. SUBBIAH said...

எழுதிக்கொள்வது: SP.VR.SUBBIAH

//நம் சென்னை மக்கள் சாலையில் செல்லும் போதும் வீட்டில் தொலைகாட்சியில் நிகழ்வுகளை பார்க்கும் போது கேட்கப்படும் ஒலி அளவு மிக அதிகமாக இருப்பதனால் திரை அரங்குகளில் ஏர்படும் சத்தம் ஒன்றும் இல்லாமல் போகிறது.//

இதுதான் ஸ்வாமி உண்மை!
சுப்பையா




6.30 25.10.2006

Machi said...

திரையரங்குகளில் சத்தம் ரொம்ப அதிகம் தான். இன்னும் சரியான ஒலி சாதனங்களை வைக்கவில்லை என்பதே என் கருத்து. 10 நிமிடம் ஆனால் பழகிடும், உங்களுக்கு பழகவில்லை :-( .

நம்ம ஊரு sound ஊரப்பா. :-))

வடுவூர் குமார் said...

வாத்தியார் சார்,
சில சமயம் எங்கள் வீட்டில் தொலைகாட்சி வைக்க வேண்டிய அவசியமே இல்லாத அளவுக்கும் சத்தம் பக்கத்து வீட்டில் இருந்து வந்து விழும்.

வடுவூர் குமார் said...

வாங்க குரும்பன்
பழகிக்கொள்வதற்குள் பாதி செவிப்பறை போய்விடும் என்று நினைக்கிறேன்.

வடுவூர் குமார் said...

கண்ணபிரான்
அதை நாமளே கையோடு கொண்டு போவது உத்தமம்.
தெலுங்கு-- தமிழ் அட்டகாசம்.

வடுவூர் குமார் said...

வைசா
கமல் என் அபிமான நடிகர் கூட.
அதனால் தப்பித்துவிடலாம்.:-))