மேட்டூர் சிமினி பற்றிய பதிவின் கடைசி பகுதி.
ரொம்ப சோதனை கொடுத்துவிட்டேன் என்று நினைக்கிறேன்.பலருக்கு இந்த வேலை பற்றி அதிகம் தெரிந்திருக்க வாய்பில்லாததால் படிக்க கொஞ்சம் போர் அடித்திருக்கும் என நினைக்கிறேன்.
ஏன்? என் மனைவியே "ஒன்னும் புரியவில்லை" என்று சொல்லிவிட்டார்.
என்ன பண்ணுவது எழுத எழுத வந்துகொண்டிருக்கிறது.
இந்த பதிவில் எழுதப்போவது "Fire Brick Lining"- இது பார்பதற்கு சராசரி செங்கல் போல இருந்தாலும் இதன் குணாதிசியங்கள் பெரும்பாலும் சராசரியில் இருந்து மிகவும் வேறு பட்டவை.
முதலில் இதன் அளவு செவ்வகமாக இருக்காது.படத்தை பார்க்கவும்.
எடை:சராசரி செங்கல்லை விட அதிகம்
இதன் உள்ளே இருக்கும் கலவைகள் சூடு மற்றும் ஆசிட்களின் தாங்கிப்பிடிக்ககூடிய அளவில் இருக்கும்.
சாதாரண செங்கல்லுக்கு சிமின்ட் உபயோகப்படுத்துவோம் ஆனால் இதில் முதல் நாளே கலந்துவைக்கப்பட்ட கலவையைதான் பயன்படுத்துவோம்.சிமின்ட் மாதிரி இறுகாது.களிமண் மாதிரி இருக்கும்.இந்த படத்தில் பாருங்கள்.இதை கல் வாங்குபவர்களிடம் இருந்தே வாங்கிக்கொள்ளலாம்.இதுவும் அதிகமான வெப்பத்தை தாங்கக்கூடிய தரத்துடன் இருக்கும்.
சிமினியின் உள் சுற்றின் அளவை பொருத்து அதற்கு தகுந்த மாதிரி கற்களை ஆர்டர் பண்ணவேண்டும்.
12 மணி நேரத்துக்கு அதிகமாக ஒரு மீட்டர் முதல் 1.5மீட்டர் வரை கட்டலாம்.அதற்கு மேலே செல்ல அனுமதியில்லை.
உட்புறத்தில் வேலை நடந்துகொண்டிருக்கும் போது TNEB Engineers மற்றும் தொழிலாள நண்பர்கள் கூட எடுத்துக்கொண்ட படம்.
ஒரு வழியாக இப்படி முடித்த பிறகு அடுத்த இடத்துக்கான மாற்றலுக்காக காத்திருந்தேன்.
சரி அடுத்த இடத்துக்கு போவதுக்கு முன்பு இங்கு (சிங்கையில்) எப்படி கட்டுமானத்துறையில் ஒரு சின்ன வேலை நடக்கிறது என்று பார்கலாமா?
வாங்க அடுத்த பதிவுக்கு..
4 comments:
இங்கே நைட் ஸ்டோரேஜ் ஹீட்டர்ஸ் இருக்குது. ராத்திரி 9 மணி முதல் காலையில் 7 வரை 50% கழிவில்
மின்சாரம் வாங்கிக்கலாம். அதுக்குத் தனி மீட்டர், கனெக்ஷன் எல்லாம் கொடுப்பாங்க. தானே ஆன் ஆகி ஆஃப் ஆகிக்கும்.
அதுலே ஸ்டோர் ஆகற ஹீட் எல்லாம் காலை 7 லெ இருந்து லேசா வெளியேறிக்கிட்டு இருக்கும். இது பகல்நேர
ச்சில்னெஸ் இலிருந்து கொஞ்சம் காப்பாத்தும். ( சரியா விளக்கி இருக்கேனான்னு தெரியலை. உங்களுக்குப் புரியும்)
ஒரு சமயம் இதுலே ஒண்ணு வேலை செய்யலை. ரிப்பேருக்கு ஆள் வந்து பார்த்துட்டு புது ஹீட்டர் காசு ஆகும்
இதை ரிப்பேர் செய்யன்னு சொன்னார். இங்கே இப்படித்தான். அதுவும் அப்ப ஹீட்டர்ஸ் சேல்லெ இருந்த சமயம்.
அதனாலே புதுசு வாங்கிப்போட்டுட்டோம். கழட்டிப் பார்த்த பழைய ஹீட்டர் 'மகா கனம்' ம்மா இருக்கே, உள்ளே என்னன்னு
பார்த்தா நல்ல சதுரமான செங்கல்கள். 12 செங்கல்கள் அடுக்கி இருந்துச்சு. அதுதான் சூட்டையெல்லாம் கிரகிச்சுக்கிட்டு
மெல்லமெல்ல நம்ம செட்டிங்குக்குத் தகுந்தபடி வெளியிடுமாம். ஒருவேளை நீங்க சொல்ற செங்கல்கள் இந்த வகையோ?
இப்ப இந்தச் செங்கல்களை நம்ம தாமரைக்குளத்துக்கு அடியிலே போட்டுருக்கேன். தண்ணியிலேயும் நகராது. அதுமேலே
தொட்டியிலெ தாமரைக்கிழங்கு. புது இலைகள் வந்துக்கிட்டு இருக்கு.
குமார்,
ஃபயர் செங்கல் என்று தாங்கள் குறிப்பிட்டிருப்பது "refractory brick" என்பதை எனக் கொள்ளலாமா?
வாங்க ஹரி
அதே தான்.ரொம்ப விபரமாக எழுத வேண்டாமா என்று செங்கல் என்று போட்டேன்.
வாங்க துளசி
இதுக்கு இப்படி ஒரு உபயோகம் இருக்கா?
நல்ல தகவல்.தேவைப்படும் போது உபயோகப்படுத்திக்கொள்கிறேன்.
Post a Comment