Tuesday, October 10, 2006

மின் தூக்கி மேம்பாடு (1)

கட்டுமானத்துறை சிங்கையில்.

இங்கு சிங்கையில் ஒரு சின்ன வேலை எப்படி நடைபெறுகிறது என்று பார்கலாமா?

இது என்னுடைய பிளாக்குக்கு பக்கத்தில் நடைபெறுவதால் அவ்வப்போது நடைபெரும் நிகழ்வுகளை நம்மக்களுக்காக இங்கே போடப்போகிறேன்.

கண்டு மகிழுங்கள்

இந்த வேலைக்குப் பெயர்: மின்தூக்கி மேம்பாட்டுத்திட்டம்.

ஆதாவது 1985 க்கு முன்பு கட்டிய கட்டிடங்களில் மின்தூக்கிகள் முறையே 6 மற்றும் 11 மாடிகளில் மட்டும் நிற்கும்படி கட்டப்பட்டது.சில இடங்களில் 5 மற்றும் 10 மாடிகளில் மட்டும் நிற்கும்.

அப்போது என்ன நிலமையோ அந்த மாதிரி ஒரு நிலையை எடுத்திருந்தார்கள்.சற்று காலமாக மூப்படையும் குடிமக்கள் அதிகமானதால் அவர்கள் தேவைக்காக எல்லா மாடிகளிலும் நிற்கும் மாதிரி மின்தூக்கிகளையும் மேம்படுத்த எண்ணி இப்போது பல இடங்களில் இந்த மாதிரியான வேலைகளை மேற்கொண்டு வருகிறார்கள்.பொருளாதர நெருக்கடி வந்த நேரங்களில் கட்டுமானத்துறை(இப்போது தான் கொஞ்சம் நிற்கலாமா என்று பார்கிறது) வீழ்ந்த போதும் இந்த மாதிரியான வேளைகளால் தான் பல நிறுவனங்கள் தொங்கிக்கொண்டு இருக்கமுடிந்தது.

முதலில் உங்கள் பாக்கம் இந்த வசதியை பெற தேர்ந்தெடுக்கப்பட வேண்டும்.அந்தந்த தொகுதி மற்றும் அதற்குரிய அமைச்சர்கள் முடிவு செய்வார்கள்.

கீழே பாருங்க

Photobucket - Video and Image Hosting

இவர்கள் முடிவு செய்தால் மட்டும் போறாது.

அங்கு வசிக்கும் மக்கள் அதற்கு ஆதரவு தரவேண்டும்.அதற்காக ஒரு நாள் குறித்து அந்த தொகுதி உயரதிகாரிகள் மற்றும் அமைச்சர்கள் வந்து ஒரு குட்டி சொற்பொழிவாற்றி அதன் நலன்களை மக்களுக்கு எடுத்துச்சொல்வார்கள்.

மற்றும் என்ன வேலை செய்யப்போகிறார்கள் என்று "மாதிரி" படிவம் ஒன்றை செய்து அதையும் காட்சிக்கு வைப்பார்கள்.

இதெல்லாம் பார்த்த பிறகு..

சுபயோக சுப தினத்தில் அங்கு வசிக்கும் மக்கள் இந்த மேம்பாட்டு பணிக்கு ஒப்புதல் அளிக்க ஓட்டளிக்கவேண்டும்.

75% கீழ் ஓட்டு இருந்தால் மேம்பாட்டு பணிகளை துவக்கமுடியாது.அப்படியாராவது செய்வாங்களா?? என்று கேட்கிறீர்களா.

அதுவும் ஒரு பாக்கத்தில் நடந்தது.

மற்றும் நிரந்தவாசிகளுக்கு ஓட்டளிக்க தகுதில்லை.

ஆமாம் எதுக்கு வாக்களிக்கணும்??

இதை பண்ண ஆகும் செலவுக்கு யார் பணம் கட்டுகிறது?

நீங்க தான் கட்டணும்.அதுக்கு தான் ஓட்டளிக்கனும்.நாளைக்கு என்னை ஏன் கேட்கவில்லை என்று கேட்டுவிட கூடாது அல்லவா?

எவ்வளவு கட்டணும்?

சரியான கேள்வியா கேட்கணும்..?

யார் யார் எவ்வளவு கட்டணும்??.

அடுத்த பதிவில்.

15 comments:

Sivabalan said...

நட்சத்திர பதிவுகளுக்கு வாழ்த்துக்கள்

Kannabiran, Ravi Shankar (KRS) said...

தமிழ்மண விண்மீனாய் ஜொலியுங்கள். வாழ்த்துக்கள்!
ஊர் கூடி இந்தத் திட்டத்தைப் பொறுப்பாக எப்படி முடித்தார்கள், சொல்லுங்கள்! காத்திருக்கிறேன்!

//இவர்கள் முடிவு செய்தால் மட்டும் போறாது.
அங்கு வசிக்கும் மக்கள் அதற்கு ஆதரவு தரவேண்டும்.//

ஆட்களுக்கு ஓட்டு போட்டு அலுத்துப் போன நம்மூர் மக்கள், திட்டங்களுக்கு ஓட்டுப் போடுவது....ஆகா எவ்ளோ நல்லா இருக்கும்!

நாகை சிவா said...

குமார், நட்சத்திரம் ஆனதுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.

வடுவூர் குமார் said...

வாங்க சிவபாலன்
வாழ்த்துக்களுக்கு நன்றி

வடுவூர் குமார் said...

வாங்க நாகை சிவா
வாழ்த்துக்களுக்கு நன்றி

வடுவூர் குமார் said...

வாங்க கண்ணபிரான்
இவுங்க இங்கே பண்ணுவது எல்லாம் "ஒன்றாக சேர்ந்து தேர் இழுக்கும் கதை தான்" கொஞ்சம் Professionalisum தூக்கலாக தெரியும்.
வாழ்த்துக்களுக்கு நன்றி

இலவசக்கொத்தனார் said...

நட்சத்திர வாரத்திற்கு வாழ்த்துக்கள். நல்லதொரு வாரமாய்க் கட்டுவீர்கள் எனத் தெரியும். :)

முதல் பதிவு அறிமுகப் பதிவாக இருக்க வேண்டாமோ?

கால்கரி சிவா said...

குமார், வாழ்த்துகள், உங்களை போல் அச்சு அசலாக என் நண்பன் ஒருவர் உள்ளார், அதே குங்கும பொட்டு. சவூதியில் கூட குங்கும பொட்டுடன் அலைவார். அவ்வளவு தில்லு அவருக்கு.

என்னை மாதிரியே ஒருவரை சிங்கபூரில் முஸ்தாபாவில் பார்ர்க நேர்ந்தால் குழம்பவேண்டாம் அது என் தம்ப்ரி...?

வடுவூர் குமார் said...

வாழ்த்துக்களுக்கு நன்றி இலவசகொத்தனார்.

வடுவூர் குமார் said...

நன்றி வைசா,
நீங்கள் பணம் கட்டவேண்டும் என்ற சமயத்தில் உங்கள் அனுமதி நிச்சயம் எதிர்பார்க்கப்படும்.மற்ற சமயங்களில் தெரிவிக்கப்படும்.உங்களுக்கு ஆட்சேபனைகள் இருக்கும் பட்சத்தில் அவர்களிடம் தெரிவிக்கலாம்.

வடுவூர் குமார் said...

வாங்க கால்கரி சிவா
உங்க நட்சத்திர பதிவுகளை பார்த்து வியந்து அடுத்து நான் என்றவுடன் பயந்தேன்.
சும்மா அட்டகாசமாக இருந்தது.
எங்கிட்ட அந்த அளவுக்கு இல்லை என்றாலும் முயற்சிக்கிறேன்.
உங்க தம்பிரி.. பார்த்தா சொல்கிறேன்.
நான் போகும் முன்பே சவுதியில் என்னைபோல் ஒருவரா?
நல்லது செய்தா சரி??

துளசி கோபால் said...

எல்லாத்துக்குமே ஒரு ரெஃபரண்டம், ஒரு மீட்டிங்னு அறிவிச்சுட்டுத்தான் செய்யற வழக்கம் இங்கேயும் இருக்கு.

ஒரு புதுக் கட்டிடம் கட்டறதுன்னாலும்
அங்கே ஒரு அறிவிப்பு தொங்கிரும். இதுபோல இந்த விஷயத்துக்காக ஒரு கட்டிடம் வரப்போகுது. அப்ஜெக்ஷன் இருக்கறவங்க கவுன்ஸில் ஆபீஸுக்குத் தெரியப்படுத்துங்கன்னு.

சாலை வேலை செய்யரதுக்கும் ஒரு நோட்டீஸ் நம்ம மெயில் பாக்ஸ்லே வந்துரும். உங்க வீட்டு முன்னாலெ ரோடை சீரமைக்கிறோமுன்னு.

அதெல்லாம் 'சொல்லிச் செய்வர்' பெரியோர்:-)))))

வடுவூர் குமார் said...

வாங்க துளசி
அந்த கடைசி வார்த்தை தான் "பன்ச்"

கோவி.கண்ணன் [GK] said...

குமார் !
நட்சத்திர பதிவாளர் ஆனதுக்கு வாழ்த்துக்கள் !

கட்டுமானத்துறை பற்றி நிறைய எழுதுகிறீர்கள் !
பாராட்டுக்கள் !

வடுவூர் குமார் said...

வாங்க கோவி.கண்ணன்
நன்றி