Wednesday, August 23, 2006

மேட்டூர் அனுபவங்கள் (1)

வாழ்வின் வசந்த காலத்துக்குள் போவதுக்கு முன்பு கட்டுமானத்துறையில் நேர்ந்த சில நிகழ்வுகளை பார்த்துவிடுவோம்.

கட்டுமானத்துறையில் மிக அதிகமான விபத்துகளை ஏற்படுத்தக்கூடியதாக இந்த இரண்டு இடங்களை குறிப்பிட்டுள்ளார்கள்
1) பாய்லர் எரெக்ஸன்
2) சிமினி கட்டுவது

முதலில் சொன்ன இடத்தில் பல தளங்களில் மேலும் கீழும் நடக்கும் அதனால் ஏதோ ஒரு இடத்தில் நடக்கும் விபத்து மற்ற இடங்களிலும் தாக்கத்தை ஏற்படுத்தும்.இதே தான் சிமினி கட்டும் முறையிலும்.

இந்த பிராஜட் 24 மாதம் என்பது மிக குருகிய கால வேலை அவகாசம்,அதனால் ஒரு நாளை இழப்பது கூட மிக முக்கியமாக கருதப்பட்டது.
வேலையும் ஆரம்பிக்கப்பட்டது 3 மாதங்களுக்குள் நில கீழ் வேலையில் இருந்து மேலே வந்துவிட்டோம்.முதலில் சொன்னமாதிரி Slipform வேலை தொடங்கி இரவு பகலாக நடந்துகொண்டிருந்தது.கொஞ்சம் கொஞ்சமாக மேலே போய்கொண்டிருந்தோம்.

அப்போது ஒரு நாள்...

போட்டுக்கொண்டிருந்த கான்கீரிட்யில் பிரச்சனை வந்தது.ஆதாவது கலவை இயந்திரத்தில் கலந்து மேலே வந்து போட்டு கொஞ்ச நேரத்தில் இறுக ரம்பித்தது.இதனால் 5 மணி நேரத்துக்கு மேல் ஆன கான்கிரீட் அந்த சாரத்துடன் ஒட்டிக்கொண்டு மேலே வந்தது.இந்த மாதிரி பிரச்சனை வந்த சமயத்தில் எங்களுடைய மேலதிகாரிகளிடமும் சொல்லியும் காதில் போட்டுக்கொள்ளாமல் இருந்தனர்.

இதற்கு மேலும் கான்கிரீட் போட்டால் 220 மீட்டர் போகமுடியாது என்று தெரிந்ததால் நானும் சக நண்பர்களும் கான்கிரீட்டை நிருத்திவிட்டோம்.
அப்புறம் என்ன??

Electricity Board கொடுத்த சிமின்ட் மீது நாங்கள் புகார் செய்தோம்.அதை பல பரிசோதனைகள் மூலம் நிரூபித்தும் காண்பித்தோம்.அதற்கு அவர்கள் நாங்கள் கொடுத்ததை நீங்கள் சரியாக பராமரிக்கவில்லை என்றும் சிமின்ட் கொடுத்தவுடனேயே சொல்லவில்லை என்றும் ஒருவர் மீது ஒருவர் சேற்றை வாரி இறைத்துக்கொண்டோம்.
வேலை நின்றுவிட்டது.

இதை எதற்கு சொல்கிறேன் என்றால் இந்த மாதிரி அரசாங்கம் சார்ந்த வேலைகளை செய்யும் போது மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.எதுவும் நடக்காத பட்சத்தில் யாரும் எதுவும் கண்டுகொள்ள மாட்டார்கள் அப்படி ஏதாவது இந்த மாதிரி நடந்தால் 99% அது உங்கள் தலை மீது தான் விழும்.Arbitration அது இது என்று போகலாம் அதற்காகும் செலவு, நேரத்தை பார்தால் எப்படியாவது வேலையை முடித்துவிட்டு போனால் போதும் என்றிருக்கும்.

லார்சன் & டூப்ரோ போன்ற கம்பெனிகளுக்கு இது ஒரு வித தன்மானப்பிரச்சனை.அதுவும் இல்லாமல் பிரச்சனை இவ்வளவு தூரம் ஏன்/யார் வளர விட்டார்கள்? என்று பல கேள்விகளுக்கு பதில் கொடுக்கவேண்டும், கம்பெனி பேர் கெடாமல் இருக்கவேண்டும் என்பதால் முழுவதுமாக விசாரனை செய்ய உத்தரவு வந்தது.

நடந்தது என்ன?

அடுத்த பதிவில்..

8 comments:

துளசி கோபால் said...

தரமான பொருளைக் கொடுக்கலேன்னா
சிமினி அவ்வளோ உயரத்துலெ கட்டிட்டு.... ஐய்யோ நினைக்கவே பயமா இருக்கு.

வடுவூர் குமார் said...

ஆமாங்க அந்த ஒரே காரணத்துக்காகவே நிறுத்திவிட்டோம்.

Anonymous said...

எழுதிக்கொள்வது: Ma Sivakumar

இந்த ஞாயிற்றுக் கிழமைக்கு உங்கள் பதிவைக் குறித்துக் கொண்டேன் குமார். நன்றி.

அன்புடன்,

மா சிவகுமார்

0.20 25.8.2006

வடுவூர் குமார் said...

வாங்க மதுரா,முதல் தடவையாக வந்திருக்கீங்க.
நன்றி

வடுவூர் குமார் said...

நன்றி,மா.சிவகுமார்.

மா சிவகுமார் said...

அடுத்த பதிவை எதிர்பார்க்கிறேன்.

அன்புடன்,

மா சிவகுமார்

சீமாச்சு.. said...

எழுதிக்கொள்வது: Seemachu

அன்பு குமார் நலம். வலைப்பதிவில் இது போன்ற தொழில் சார்ந்த மற்றும் சொந்த அனுபவம் சார்ந்த பதிவுகளை மிகவும் வரவேற்கிறேன்..

சினிமா, அரசியல், இன்றைய செய்திகள் தாண்டி வரும் இது போன்ற பதிவுகள் மட்டுமே நீண்ட காலம் நிலைத்து நிற்கும் என்பது என் அனுமானம்.
தொடர்ந்து எழுதுங்கள்..
பாராட்டுக்கள்.
என்றென்றும் அன்புடன்,
சீமாச்சு..

9.9 28.8.2006

வடுவூர் குமார் said...

சீமாச்சு
இப்படி உங்களை கூப்பிடலாமா கூடாதா தெரியலை ஏனென்றால் எனக்கும் உங்கள் பெயர் கொண்ட நண்பன் இருந்தான் அவன் மதுரை நீங்கள் எங்கேயோ??இப்படி உங்களை கூப்பிடும் போதும் அவன் ஞாபகம் தான்.சரி அதை வேறு சமயத்தில் எழுதுகிறேன்.
உங்கள் கருத்தும் சரிதான்.ஆனால் பல மனிதர்கள் கூடும் இடத்தில் பலதையும் பார்க்க வேண்டியுள்ளது.
பத்ரிக்கு ஆய்வு கட்டுரை,மா.சிவகுமார் என்றால் பொருளாதாரம்,நியூசிலாந்துக்கு துளசி தளம் இப்படி பலர்.
என்ன பன்னுவது எனக்கு இது தான் வருகிறது.
ஆனாலும் உங்கள் காமராஜ்க்கு இரண்டு பின்னூட்டம் தான் என்பது கவலை அளிக்கிறது.
தங்கள் வருகை/பின்னூட்டத்துக்கு நன்றி.
தொடர்ந்து உங்கள் கருத்துக்களை முடிந்தபோது தெரிவிக்கவும்.