Monday, July 31, 2006

டீ பொரை(றை)??

மறைமலை நகர்

வெங்காய சாம்பார்

மண்லாரி பயணத்தைப்பற்றி போன பதிவில் சொல்லியிருந்தேன்.அப்படி ஒருநாள் நாங்கள் மூவரும் சனிக்கிழமை இரவு செகன்ட் ஷோவுக்கு செங்கல்பட்டுக்கு போனோம்.படம் பெயர் சரியாக ஞாபகம் இல்லை,ஒன்று ஜானியாக இருக்கவேண்டும் இல்லாவிட்டால் கைராசிக்காரனாக இருக்கவேண்டும்.

படம் முடிந்து வெளியில் வந்தவுடன் கொஞ்சம் பசிப்பதாக தெரிந்தவுடன் "நடராஜன்" ஒரு டீ கடை பக்கம் அழைத்துப்போய் என்ன சாப்பிடுகிறாய் என்றான்.

நீயே ஆர்டர் பண்ணு என்று சொல்லிவிட்டு எனக்கு பிடித்த வாழைப்பழம் ஒன்றை எடுத்து சாப்பிட ஆரம்பித்தேன்.நண்பர்கள் எல்லாம் ஒரு மாதிரி பார்த்தார்கள்.என்னடா இவன் விடியற்காலை 1 மணிக்கு வாழைப்பழம் சாப்பிடுகிறானே என்று?என் பசி எனக்கு, நான் அதைப்பற்றியெல்லாம் கவலைப்படவில்லை.

அப்போது தான் நடராஜன் என்னிடம் கேட்டான் "டீ பொரை" சாப்பிடலாமா என்று.
அதற்கு முன்பு இதை நான் கேள்விப்படாததால்,"அது சைவம் தானே என்றேன்.
ஆமாம்.இது ஒன்றும் பெரியவிஷயமில்லை,பன் அல்லது "காஞ்ச ரொட்டியை டீயில் தொட்டுக்கொண்டு சாப்பிடால் அது தான் டீ பொரை" என்றான்.

வாழ் நாளில் முதன் முறையாக சாப்பிட்டு ருசி பார்த்தது அவ்வப்போது இப்பவும் வீட்டில் சிலசமயம் தொடர்கிறது.மனைவி ஒரு மாதிரி பார்ப்பார்கள்.அதற்காக கவலைப்பட முடியுமா?

திரும்ப செங்கல்பட்டுக்கு போவோம்....

சாப்பிட்டு முடித்தபிறகு கடைக்கு பணம் கொடுத்துவிட்டு திரும்பும் போது நடராஜன் யாரிடமோ பேசிக்கொண்டிருந்தான்.பேச்சு அவ்வளவு சுமூகமாக இல்லை என்பது அவர்கள் பேச்சின் தொனியில் தெரிந்தது.ஏதோ பிரச்சனை என்று புரிந்தது.
பக்கத்தில் சென்று அந்த புதியவரிடம் என்ன பிரச்சனை என்று விஜாரித்தேன்.அதற்கு அவர் பதில் சொல்லாமல் என்னைப்பற்றியும் விஜாரித்தார்.

என்னப்பற்றி விஜாரிக்க நீங்கள் முதலில் யார் என்பதை சொல்லுங்கள் என்றேன்.அவருக்கு கோபம் அதிகமாகிவிட்டது.

எங்களையே Enquire செய்கிறாயா?உங்க 3 பேரையும் தூக்கி வேனில் போட்டு கொண்டு போய் விஜாரித்தால் தான் சொல்லுவீர்களோ? என்று கத்த ஆரம்பித்தார்.
இதற்கிடையில் எங்கிருந்தோ ஒரு போலீஸ் அதிகாரி சம்ப இடத்துக்கு வந்தார்.அவர் சீருடையில் இருந்ததால் அவரை கண்டு கொண்டோம் ஆனால் முதலில் பேசியவர் சீருடையில் இல்லததாலும் அவர் யார் என்று சொல்லிக்கொள்ளாததாலும் பிரச்சனை வந்தது.முதலில் பேசியவர் நடராஜனை ஒருமையில் அழைத்ததால் அவர்களிடையே கொஞ்சம் சூடு அதிகமானது.

இரண்டாவதாக வந்த போலீஸ் அதிகாரி விசாரனை தொடங்கினார்.

தொடக்க விசாரணை முடிந்தபிறகு.

சீக்கிரம் பஸ் பிடித்து வீட்டுக்கு போய் சேருங்கள் என்று "மரியாதையாக" சொல்லிவிட்டு வேனில் போய்விட்டார்.ஏடாகூடமாக பேசியிருந்தாலும் நாங்களும் அந்த வேனில் போயிருப்போம்.நல்ல வேளை பிழைத்தோம்.

அடுத்த சந்திப்புக்கு முன்பே வேறு இடத்துக்கு மாற்றப்பட்டதால் சந்திக்கும் வேலையில்லாமல் போய்விட்டது.அத்துடன் நாங்கள் மூவரும் பிரிய நேரிட்டது.

என்னுடைய அடுத்த Siteம் சென்னையிலேயே அமைந்துவிட்டது.

அது வரும் பதிவுகளில்.

4 comments:

துளசி கோபால் said...

லாரியில் போறதுக்கு பதிலா 'ஜம்'ன்னு வேன்லே போய் இருக்கலாம்:-))))

முந்தி ஒரு பழைய படத்துலே நாகேஷ் இறந்து போயிட்டாருன்னு அவருக்குப் படையல் வைப்பாங்க அவர் மனைவி.
அப்ப, 'என்னதான் விருந்து சமைச்சுப்போட்டாலும், டீயும் பொறையும் எங்கே எங்கேன்னு அலைவீங்களேன்னு
உங்களுக்கு டீயும்பொறையும்கூட படையலிலே வச்சிருக்கேன் பாருங்க'ன்னு சொல்லி அழுவாங்க.
அந்த ஞாபகம் வந்துருச்சு:-)))

siva gnanamji(#18100882083107547329) said...

தலைக்கு வந்தது தலைப் பாகையோட போச்சா?
மன்னார்குடி வடுவூரா?
மேல்பாதியா,கீழ்பாதியா?

வடுவூர் குமார் said...

துளசி
நான் இருந்தபோது மறைமலை நகரில் மாலை 6 மணிக்கு மேல் ஒரு ஈ,காகா கூட பார்க்கமுடியாது.டவுன் பஸுக்காக காத்திருப்பது மிகக்கொடுமை.பல நேரங்களில் நிற்கமாட்டார்கள்.அதனால் தான் மணல் லாரி.

வடுவூர் குமார் said...

வாங்க சார்,சிவஞானம் ஜி
சரியாக சொன்னீங்க.
அதே வடுவூர் தான்.வடபாதி பக்கம் என்று நினைக்கிறேன்.ஏனென்றால் நாங்கள் இருந்த தெரு--வடக்குத்தெரு.
பிறந்ததோடு சரி.பள்ளி விடுமுறை நாட்களில் அவ்வப்போது போய் பாட்டி,மாமா மற்றும் வடுவூர் ராமரை தரிசித்து வருவேன்.
அந்த கோயிலுக்கே ஒரு தனி அதிர்வு உண்டு.