மறைமலை நகர்(முதல் பகுதி)
அரிசி மாவு போட்டு சாம்பாரை ...
ஒரு அரை மணிநேரம் கொதித்த பிறகு மொத்த சமையலும் ஹாலுக்கு வந்தது.பசியும் அதிகமாக இருந்ததால் இன்று ஒரு பிடிபிடிக்கவேண்டும் என்று இருந்தோம்.
தட்டில் சாதம்,கரமேது போட்டு வண்டிகாரர் மாதிரி சாத்து நடுவில் குழி அமைத்து சாம்பாரை ஊத்தினோம்.
தங்கவேலுக்கு பசி தாங்காது என்பதால் முதலில் சாப்பிட ஆரம்பித்தான், பிறகு நடராஜன் அடுத்தது நான்.தங்கவேலு ஆஹா ஹோஹொ,அருமை என்று சாப்பிட்டுகொண்டு இருந்தான்.ஆனா...நடராஜ் மாத்திரம் என்ன ஒரு மாதிரி புளிப்பாக இருக்கிறது என்றான்.இதுக்கு முன்பு ருசி பார்த்தபோது நல்லாத்தானே இருந்தது அதுக்குள்ளே எப்படி மாறியது? என்று கேள்வி எழுப்பினான்.நானும் ருசித்ததில் எனக்கும் அப்படித்தான் இருந்தது.
சாப்பிட பிடிக்காமா யோஜனை செய்த போது...
"தங்கவேலு சாம்பாருக்கு அரிசிப்பொடி தானே போட்ட?"
ஆமாம். அது இருந்த இடத்தைச்சொல்லி டப்பா நிறத்தையும் சொன்னான்.
நடராஜனுக்கு உடனே புரிந்து போய்விட்டது.மவனே நீ போட்டது அரிசி மாவு இல்லைடா "பிளீச்சிங் பவுடர்"என்றான்.பக்கத்து பக்கத்தில் இருந்ததால் தெரியாம போட்டுட்டான்.அப்புறம் என்ன வாந்தி எடுக்க வாசப்பக்கம் ஓடினான்.
மொத்த சாம்பாரையும் எடுத்து வாசலில் கொட்டிவிட்டு திரும்ப புதிதாக சாம்பார் பண்ணி சாப்பிட மணி இரவு 10 ஆகிவிட்டது.
இப்படி எங்க சமையல் ஓடிக்கொண்டு இருந்தது.சமயத்தில் மிகவும் போர் அடித்தால் மண் லாரி பிடித்து செங்கல்பட்டு போய் படம் பார்த்துவிட்டு முடிந்தால் சாப்பிட்டு விட்டு வருவோம்.அப்போது பஸ்/ரயில் வசதி அவ்வளவாக இல்லை.அதனால் மண் லாரி தான் செளகரியம்.இதுவும் கரணம் தப்பினால் மரணம் தான்.ஏனென்றால் அவ்வளவு வேகத்தில் ஓட்டுவார்கள்.ஆனால் ஒரு வசதி எந்த நேரத்திலும் இந்த லாரி கிடைக்கும்.
அந்த மாதிரியான சமயத்தில் ஒரு நாள்...
மிச்சத்தை அடுத்த பதிவில் பார்கலாம்.
4 comments:
குமார்,
இதுக்குத்தான் "ஸ்டமக் ப்ளீச்சிங்னு" பேரோ?
but thatshow a bachelor gains expertise in his culinary skills
:-)))
ஆமாம் ஹரி,
அப்போது இந்த மாதிரியெல்லாம் சமைத்தது எல்லாம் இப்போது கை கொடுக்கிறது.என் சமையல் பயங்கர மோசம் என்று சான்றிதழ் என் மனைவியிடம் இருந்து கிடைத்திருக்கு ஏனென்றால் அவ்வளவாக எண்ணை சேர்க்கமாட்டேன்.
எழுதிக்கொள்வது: செந்தழல் ரவி
மண்லாரியில் பயணம் செய்த அனுபவம் பல உண்டுங்க நமக்கு...சீக்கிரம் மீதி பகுதியை வெளியிடுங்க...
உங்க ஆக்கங்களை தொடர்ந்து படித்து வருகிறேன்..
:))
14.40 31.7.2006
நன்றி ரவி
மீதியை "டீ பொறை"யில் போட்டுள்ளேன்.
Post a Comment