Wednesday, July 19, 2006

முட்டை

முந்தய பதிவு (உடல் நலம்)

மருத்துவமனையில் இருந்து Quartersக்கு வந்து ஒரு வாரம் ஆகியிருந்தது.இன்னும் உடற்பயிற்சி செய்வதற்கான முயற்சி எதுவும்செய்யாமல் இருந்தேன்.
அப்போது சில நண்பர்கள் காலை மெது ஓட்டம் போகலாமா என்று யோசித்துக்கொண்டு இருந்தார்கள்.இது தான் சமயம் என்று நானும் அவர்களுடன் சேர்ந்து கொண்டு ஓட ஆரம்பித்தேன்.

முட்டை சாப்பிட்டு தான் உடம்பை ஏத்தவேண்டுமா? அது சாப்பிடாமலே என்னால் ஏத்திகாண்பிக்கமுடியும் என்று அவர்களிடம் விதண்டா வாதம் பண்ணிக்கொண்டு இருப்பேன்.இப்படியே சில மாதங்கள் நழுவின.

இதற்கிடையில் சில நண்பர்கள் மருத்துவர் சொன்ன "முட்டை" விவகாரத்தை வைத்து "அய்யரே!! எப்ப முட்டை சாப்பிடப்போகிறாய்?" என்று கிண்டல் செய்து கொண்டிருந்தார்கள்.இந்த ஐயர் பட்டம் பல சமயங்களில் என்னை எப்படியெல்லாம் காப்பாற்றியிருக்கிறது என்பதை வேறு சமயத்தில் பார்ப்போம்.

இதற்கிடையில் மற்றொரு நண்பன்(மாறன்) வேறொரு இடத்தில் இருந்து எங்கள் Siteக்கு மாற்றலில் வந்தான்.ஆள் கட்டு மஸ்தானாக இருந்தான்.அவனுக்கு இந்த விஷயங்களில் ஈடுபாடு இருந்ததால் அவன் மூலம் மேலும் சில Parallel Bar உடற்பயிற்சியில் இறங்கினேன்.கம்பெனி உள்ள இரும்பு Pipeஐ வைத்துக்கொண்டு ஒரு Parallel Bar செய்து அதை நாங்கள் இருக்கும் இடத்துக்கு பக்கத்திலேயே வைத்துக்கொண்டோம்.

தினமும் காலை 5 மணிக்கு விழித்து 30 நிமிடங்கள் மெது நடை,அடுத்த 30 நிமிடங்கள் Parallel bar.

ஒரு நாள் பயிற்சியின் போது அந்த நண்பர் சொன்னார்.
"நீ என்னதான் காலையில் கொண்டக்கடலை சாப்பிட்டு பயிற்சி செய்தாலும் அந்த சாப்பாடு எல்லாம் இதற்கு சரிப்பட்டு வராது.உடம்பும் ஏறாது, அதனாலே மருத்துவர் சொன்னபடி முட்டை சாப்பிட ஆரம்பி"-என்றார்.

நானோ ஒன்றும் பதில் சொல்லாமல் பலமாக யோசித்துக்கொண்டிருந்தேன்.

எங்கள் Messயில் அசைவம் / சைவம் சேர்ந்தது தான்.வாரத்துக்கு 3 நாட்கள் இரவில் மட்டும் அசைவம்.அதனால் அசைவம் உள்ள நாட்களில் வெறும் தயிர்சாதம் மட்டும் தான்.அசைவம் கலந்திருக்குமோ என்ற சந்தேகம் தான் காரணம். மற்றவர்கள் வருவதற்கு முன்பு முதலில் சாப்பிடுவேன் ஏனென்றால் ஆம்லெட் போடுவதற்கு முன்பு சாப்பிட்டால் முட்டையோடு கலக்காது அல்லவா?

இப்படியிருந்த ஆளை முட்டை சாப்பிடு என்றால் எப்படி??

மீதிக்கு அடுத்த பதிவு..

4 comments:

துளசி கோபால் said...

முட்டை சாப்புட்டீங்களா இல்லையா?
'சட்'ன்னு சொல்லுங்க.

சிவா சொன்னதுபோல இப்பவும் நீங்க அண்டர்வெயிட் தானே?

Anonymous said...

எழுதிக்கொள்வது: நாகை சிவா

//இப்படியிருந்த ஆளை முட்டை சாப்பிடு என்றால் எப்படி??//
கஷ்டம் தான்
:))))

8.43 19.7.2006

வடுவூர் குமார் said...

துளசி
நாளை வரை பொறுத்துக்கங்க.சொல்லிடிறேன்.
இன்னும் எழுதவில்லை.
எங்க வீட்டு அம்மணி புண்ணியத்தில் சரியான எடையுடன் இருக்கமுடிகிறது.

வடுவூர் குமார் said...

சிவா
நல்லவேளை அசைவம் பக்கம் தலை வைக்கவில்லை.
இப்படி பல இடங்கள் பலதரப்பட்ட மனிதர்களுடன் பழகும் வாய்ப்பு கிடைத்ததால் கொஞ்சம் நாகரீகமும் அடுத்தவர்கள் உணர்வுகளை புரிந்து கொள்ள வாய்ப்பும் கிடைத்தது