Monday, July 17, 2006

உடல் நலம்

என்னுடைய முதல் Siteயிலே இதற்கு பரிசோதனை வைக்கப்பட்டது.அப்போதெல்லம் நான் Under Weight தான்.
அப்போதெல்லாம் சென்னையில் அவ்வளவு காற்றுத்தூய்மைக்கேடு இல்லை.அதனால் அங்கிருந்த போது அவ்வளவு பிரச்சனை இல்லை.அங்கிருந்து தாச்சப்பள்ளி (ஆந்திரா)வந்தவுடன் தொந்தரவுகள் ஆரம்பித்தன.முக்கியமாக தூசி பிரச்சனை.கட்டுமான வேலை என்பதால் இதிலிருந்து மொத்தமாக தப்பிக்கமுடியாது.வண்டி போகும் பாதை தார் ரோடு இல்லாததால் ஒவ்வொரு வண்டி போகும் போதும் நிறைய தூசிகளை கிளப்பிவிட்டு போகும்.இதன் ஒவ்வாமை மாதத்தில் சில நாட்கள் என்னை பாடாய்படுத்திவிடும்.மருத்துவ நிலையத்திற்கு போய் Pencilin ஊசி போட்டுக்கொள்வேன்.
இப்படியே சில மாதங்கள் போன சமயத்தில் ஒரு நாள் அதே தூசி ஒவ்வாமையால் குளிர் ஜுரம் வந்தது.இந்த முறை நிலமை சற்று கவலைக்கிடமாக தென்பட்டதால் மருத்துவரே பக்கத்தில் உள்ள மருத்துவமணையில் சேர்க்க சொல்லிவிட்டார்கள்.ஒரு வாரம் அங்கு தங்கநேர்ந்தது.உடல் நலம் ஒருவாறு மேப்பட்டபிறகு Quarters திரும்பும் நாளன்று பெரிய மருத்துவர் வந்து பார்த்துவிட்டு
"தம்பி,உங்கள் உடல்நிலை அவ்வளவு சரியாக இல்லை,நீங்கள் சாப்பிடும் சாப்பாடும் அவ்வளவு சத்துள்ளதாக தெரியவில்லை" அதனால் உங்கள் உணவு முறையை மாற்றிக்கொள்ளுங்கள் இல்லாவிட்டால் உங்கள் உடம்புக்கு நோய் எதிர்ப்பு சக்தி கிடைக்காமல் கூடிய விரைவில் "பிரம்மாவை" பார்க்க நேர்ந்தாலும் நேரக்கூடும் என்றார்.
சரி சார்-நான் எந்த மாதிரி சாப்பாட்டை சாப்பிடவேண்டும்?
"முதலில் உன் உடம்பு சதை போடவேண்டும்-ஊளைச்சதையில்லை!!"
"நிறைய மாமிச உணவுகள்,மீன்,பருப்பு,முட்டை வகைகளை சாப்பிட்டு விட்டு நிறைய உடற்பயிற்சி செய்யவேண்டும்"என்றார்.
(சிவா சிவா-மனதுக்குள்)சார் நான் பிராமின்,மாமிசங்கள் சாப்பிடக்கூடாது.வேறு வழியிருக்கா?என்று கேட்டேன்
சரி,முட்டையாவது சாப்பிடுவாயா?
"இல்லை சார்"
மருத்துவர் கொஞ்சம் இறங்கிவருகிறார் என்று சந்தோஷம் வேறு.
"வேறு வழியில்லை,ஏனென்றால் அசைவத்தில் கிடைக்கக்கூடிய சில புரதங்கள் சைவத்தில் கிடைக்காது அதனால் நீ முட்டையாவது சாப்பிட்டு உடம்பை தேத்து இல்லாவிட்டால் ரொம்ப கஷ்டப்படுவாய்" என்று சொல்லி Discharge பண்ணார்.

கட்டுமானத்துறையில் வேலை செய்யவேண்டுமானால் உங்கள் உடல் நலம் எந்த கடுமையான சூழ்நிலைக்கும் தகுந்த மாதிரி வைத்திருக்கவேண்டும்.மிலிட்டரிகாரர் மாதிரி.ஏனென்றால் நீங்கள் வேலை செய்யும் இடம் சூரியனின் மேற்பார்வையில்.மழை பெய்தால் நனையவும் தயாராக இருக்கவேண்டும்,சேற்றில் நடக்கவேண்டும்,ஏன் சிலசமயம் நீந்தக்கூட வேண்டியிருக்கும்.என்ன 30~40 மீட்டருக்கு மாடி ஏறவேண்டிவரும்.நானே ஒரு முறை 220மீட்டர் உயரம் ஏறியிருக்கிறேன்.அந்த அனுபவம் பிறகு பார்கலாம்.மேலும் ஒரு Site என்பது காடு மாதிரி,எந்த இடத்தில் என்ன இருக்கும் அங்கு வேலை செய்பவர்களுக்கு மட்டும் தான் தெரியும்.கண்ணை மூடிக்கொண்டு நடந்தால் அவ்வளவு தான்!!
சரி சரி முட்டை சாப்பிட்டாயா இல்லையா? அதைச்சொல் முதலில்.
வாங்க அடுத்த பதிப்புக்கு....

2 comments:

Anonymous said...

எழுதிக்கொள்வது: நாகை சிவா

எனக்கு என்னவோ நீங்க இன்னும் under weight மாதிரி தான் இரூக்கு உங்க புகைப்படத்தை பார்க்கும் போது.
மனதுக்குள் அடிக்கடி நம்மள கூப்பிடுவீங்களோ....
:)))))

9.56 17.7.2006

வடுவூர் குமார் said...

வாங்க சிவா
பரவாயில்லை.இப்போதும் சரியான எடையில் தான் உள்ளேன்.ஆனால் கொஞ்சம் Tyre தான் கவலைப்பட வைக்கிறது.Tyre இருப்பதால் சுலபமாக நீச்சல் அடிக்கமுடிவதென்னவோ உண்மை.:-))
"அடிக்கடி நம்மள கூப்பிடுவீங்களோ...."
கூப்பிடு தூரத்திலா இருக்கிறீர்கள்??