மலேசியா,சிங்கப்பூர்,தாய்லாந்து,இந்தோனேசியா,மியன்மார் போன்ற கிழக்காசிய நாடுகளில் பிரபலமான பழம் இது.
முதன்முதலில் மலேசியா போனபோது ஒரு நாள் இரவு சந்தை பக்கம் போனோம்.ஒரு கும்பலாக இந்த பழத்தை போட்டு 10 ரிங்கட்டுக்கு 3 என்று வித்துக்கொண்டிருந்தார்கள்.
ஒருவர் ஒரு பழத்தை எடுத்து மூந்து பார்த்துக்கொண்டிருந்தார்.அடுத்தவர் அதை மேலும் கீழும் ஆட்டிப்பார்த்தார்.சிலர் அதன் தோல் நிறத்தை பார்த்து பொறுக்கி வாங்கினார்கள்.
என்னால் அந்த இடத்திலேயே நிற்கமுடியவில்லை அவ்வளவு நாத்தம்.
இந்த நாத்ததிற்காகவே இதை பஸ்,ரயில்களில் எடுத்துப்போக சிங்கையில் தடை.
இந்த நாத்தமே வாசனையானது தான் இந்த பதிவு.
இதன் மேல் தோல் நமது பலா பழம் போல் முள்ளு முள்ளாக இருக்கும்.படத்தை பார்க்க..
ஆனால் அளவில் சிறியதாக இருக்கும்.பழத்தின் கீழ் முனையில் சிறியதாக பிளந்தால் முழு பழத்தையும் திறந்துவிடலாம்.அதை திறப்பவர்கள் கெட்டி கையுறை போட்டுக்கொள்வது நலம்.ஏனென்றால் அதன் முற்கள் மிகவும் கூர்மையாக இருக்கும்.
ஒரு நண்பர் சொன்னார் இந்த பழங்கள் இரவில் மட்டும் தான் மரத்தில் இருந்து விழும் என்று.பகலில் விழுந்து யாரையும் காயப்படுத்திவிடக்கூடாது என்பதற்காக இயற்கையின் வரம்?
முதன் முதலில் மலேசியா Mess இதை வாங்கி வந்தார்கள்,திரும்பவும் நாத்தம் தாங்க முடியாமல் ஓடிவிட்டேன்.அதுவும் அதனுடைய சுளையின் அமைப்பு
சொல்லலாமா வேண்டாமா???? ஒரு சின்ன தயக்கம்.துரையன் பிரியர்கள் மன்னிப்பார்களாக.
அப்போது தான் போன S..T மாதிரியிருக்கும்அப்புறம் எப்படி சாப்பிடறது.
மலேசியாவில் இருந்து வெளியேறும் வரை இதன் பக்கமே போகவில்லை.ஆனால் அந்த Smell கொஞ்சம் கொஞ்சமாக
பழக்கமாகிவிட்டது.
சிங்கப்பூர் வந்த கொஞ்ச நாளில் ஒரு நாள் அலுவலகத்தில் யாரோ இதை கொண்டுவந்திருந்தார்கள்.எல்லோரும் முடிந்தவரை சாப்பிட்டார்கள்.அப்போது ஏதோ வேலையாக உள்ளே போன என்னை பிடித்துக்கொண்டார்கள்.
ஏதோதோ சொல்லி "ஒன்று சாப்பிட்டுப்பார்" என்றார்கள்.மலேசியா பழ சுவை வேறு இந்த பழத்தின் சுவை வேறு என்றார்கள்.
விதி யாரை விட்டது.
கையில் பழம் வந்துவிட்டது.கொஞ்சம் சாப்பிட்டு பார்த்தேன்.கொஞ்சம் அபரிதமான சர்க்கரை ருசி இருந்தது.இரண்டாவது சுளையிலேயே இதன் ஈர்ப்பு விசை புரிந்துவிட்டது.அதிலிருந்து சமயம் கிடைக்கும் போது வாங்கிவிடுவேன்.
அப்போதிலிருந்து நாத்தம் வாசனையாகிவிட்டது.
இந்த சமயத்தில் நடந்த வேறு ஒரு சுவாரசியமான விஷயம்:ஒரு நண்பர் இந்த பழத்தின் காம்பை பிடித்துக்கொண்டு,நான் தூக்கிப்போடும் இந்த பழத்தை வெறும் கையால் பிடிப்பவர்களுக்கு அந்த பழமே பரிசு என்றார்.
நான் பிடிக்கிறேன் என்றேன்.
எப்படி பிடித்தேன் தெரியுமா?
வெறும் கையால் தான்.
அவர் எப்படி காம்பை பிடித்து போட்டாரோ அப்படியே அதே காம்பாலே பிடித்தேன்.மனிதர் பேசவேயில்லை.
இந்த பழம் நம்மூரிலும் கிடைக்கிறது ஆனால் ஒரு வருடத்திற்கு 50 பழங்கள் மட்டுமாம்.கொடைக்கானல் பக்கம் என்று எப்போதோ படித்த ஞாபகம்.
பின் குறிப்பு:
இது நிறைய சாப்பிட்டால் சிலருக்கு உடம்பு சூடு அதிகமாகிவிடும்.
தொண்டை கமறும்.
அடுத்த 2 நாட்களுக்கு கொஞ்சம் தூர நின்று பேச வேண்டியிருக்கும்.
குழந்தை பிறப்புக்கு "கிரியா ஊக்கி" என்று ஒரு வதந்தி உலாவுகிறது.
ஒரு நண்பர் சொன்ன மேல் தகவல்கள்.
சுளையை சாப்பிட்ட பிறகு அது இருந்த ஓட்டில் தண்ணீர் ஊற்றிக்குடித்தால் உஷ்ணம் மற்றும் வாய் நாற்றம் இருக்காது என்று.
8 comments:
எழுதிக்கொள்வது: கண்ணன்
துரியன் பற்றி சுவையானப் பதிவு. பெருங்காய வாசனை பழகும் நமக்கு துரியன் அவ்வளவு ஒன்றும் பெரிய விசயமில்லை என்று நினைக்கிறேன்.
17.55 13.7.2006
எழுதிக்கொள்வது: செந்தழல் ரவி
சூப்பர் பழத்தை அறிமுகப்படுத்திட்டீங்க...கொடைக்கானல் - சென்பகனூர் பக்கம் ஒரு பத்து மரம் இருக்கு...மார்ச் - ஏப்ரலில் பழம் கிடைக்கும், விலை கொன்சம் அதிகம்தான்..
15.47 13.7.2006
துரையன் பழத்தை பற்றி படத்துடன் தகவலுக்கு நன்றி, வடுவூர் குமார்!!
***
இலக்கியத் தமிழில் நாற்றம் என்றாலே வாசனைதான் !!
***
அடுத்த முறை ஊருக்கு வரும்போது வாங்கி வந்தால் நாங்களும் சாப்பிட்டுப் பார்ப்போமே :-) !!
உங்களை எப்படி அழைப்பது என்று தெரியவில்லை.
.......... பையன் என்று அழைக்க மனம் விரும்பவில்லை.
துரையன் வாங்கிவர நான் தயார் தான் ஆனால் விமானத்தில் விடுவார்களா என்று தெரியவில்லை.
சென்னயில் இருந்தால் செளகரியம்.
புனே!! பார்கலாம்.
நன்றி கோவி.கண்ணன்
முதலில் தான் காத தூரம் ஓடினேன்.சாப்பிட்ட பிறகு பழகிவிட்டது.
அது யாருங்க-எழுத்துப்பிழை? உங்கள் பின்னூட்டத்தில்(உங்களுக்கு தெரியுமா?) எனது பிழையை காட்டுவது?
தவற்றைச்சொல்லுவது நல்ல விஷயம் தான் ஆனால் அடுத்தவர் சட்டயை போட்டுக்கவேண்டாமே.
எனினும் தவறை திருத்திவிட்டேன்.
நன்றி.
செந்தழல் ரவி
நம்மூரில் கிடைக்கும் விஷயம் 2 வருடங்களுக்கு முன்பு ஒரு தமிழ் பத்திரிக்கையில் படித்த ஞாபகம்.
நன்றி
குமார்,
இன்றும் கிழக்காசிய நாடுகளில் நிறையப் பொது இடங்களில் பொதுவாக ஹோட்டல்களில் துரியன் பழங்களுக்கு அனுமதி கிடையாதாமே?
ஆமாம் ஹரி
அதன் மகிமை அப்படி.
நானும் சில உணவு விடுதிகளில் பார்த்திருக்கேன்.
வீட்டுக்குள் வந்துவிட்டால் வாசம் போவதுக்கு 2 நாட்கள் ஆகும்.சிலருக்கு இந்த வாசம் தலை வலியை கூட உண்டு பண்ணிவிடும்.
Post a Comment