Wednesday, July 12, 2006

தூசியின் விளையாட்டு

துர்கா சிமின்ட்ஸ்
அப்படி இப்படியென்று இந்த Project சுமார் 3 வருட காலங்களில் முடிந்தது.
நான் வெளியே வருவதற்கு முன்பே சிமின்ட் உற்பத்தியாவதையும் பார்த்துவிட்டேன்.நாங்கள் போகும் போது அந்த பொட்டல் காட்டில் இருந்த ஒன்று இரண்டு செடிகளும் இந்த ஆலையில் இருந்து வந்த தூசியில் மொத்தமாக மூடியிருந்தது.பல கிலோமீட்டர் சுற்று வட்டாரத்துக்கு நிலம் அதன் சொந்த நிறத்தையிழந்து அந்த தூசியின் கலருக்கு மாற்றப்பட்டுக் கொண்டிருந்தது.
ஆமாம் இது இப்படித்தானா? என்று கேட்டால் பதில் நிச்சயமாக இல்லை.இதற்கு காரணம் அங்கு நிலவிய ஊழல் தான் காரணம்.
சிமின்ட் பிலான்ட் எல்லாவற்றுக்கும் தூசித்தர கட்டுப்பாடு இருக்கு.ஆலையில் இருந்துவரும் தூசியை வெளியில் இவ்வளவு உயரத்துக்கு மேல் தான் விடவேண்டும் என்று.நம்மூர் நெய்வேலி,மேட்டூரில் உள்ள புகைபோக்கிகளை பார்த்திருக்கலாம்.தூசியை பல இடங்களில் போகவைத்து அதில் உள்ள கனமான தூசிகளை கீழேயே பிடிக்க பல வலைகளுடன் கூடிய அமைப்புடன் இருக்கும் ஒரு சாதனத்திற்கு பேர் தான் ESP..அதை கட்டுப்படுத்துவதற்கு என்று அதிகாரிகளும் இருப்பார்கள்.அதிகாரிகளை விட்டுவிடுவோம்.அவர்கள் இந்த ஆலைக்கு எப்போதாவது தானே வருவார்கள்.. அப்போது ESP(Electro Static Preciprater) ஓட்டினால் போதும்.
ஆமாங்க! ESP ஓட்டினால் அவ்வளவு தூசி வெளியே போகாது ஆனால் இது சரியான மின்சார சாப்பாட்டு ராமன்.அதனால் இதை முக்கால்வாசி நேரத்துக்கு ஓட்டமாட்டார்கள்.தூசியை வெளியே விட்டு நாம் பொடிபோட்டுக்காத குறையே இல்லாமல் நமது நுறையீரலுக்குள் நிரப்பிவிடுவார்கள்.இப்படித்தான் அந்த கிராமமும் கொஞ்சம் கொஞ்சமாக களையிழந்தது.இதனால் எவ்வளவு மனிதர்கள் மிருகங்கள் பாதிக்கப்பட்டதோ?ஆண்டவனுக்கு தான் வெளிச்சம்.
நான் பார்த்த அவ்வளவு ஆலைகளும் இப்படித்தான் செயல்பட்டன.
இவர்களை யாராலும் கட்டுப்படுத்தமுடியாதா?
மனித நேயம் உள்ள பலரால் முடியும் ஆனால் அவர்களிடம் Power வேண்டும்.அதை செயல் படுத்தும் துணிச்சலும் வேண்டும்.அதுவரை இப்படித்தான் புலம்பவேண்டும்.
கிருஷ்ணா நதிகரை மேல் விமானத்தில் பறந்தால் இதன் வீச்சு தெரியும்.அப்போது அப்படியிருந்தது இப்போது எப்படி என்று தெரியவில்லை.

7 comments:

Sivabalan said...

குமார்

உங்கள் பதிவுகள் அனைத்தும் பயனுள்ளதாக உள்ளது.. இப்பொழுதுதான் படித்துகொண்டிருக்கிறேன்..

நானும் இத்துறையில் இருந்தவன் என்ற முறையில் எனக்கு மிகவும் உபயோகமாக உள்ளது...

நானும் சில முயற்சி மேற்கொண்டுள்ளேன்.. அதைப் பற்றி மேலும் உங்களுக்கு தெரியபடுத்துக்கிறேன்.. அதாவது போன்று..

மீன்டும் சந்திப்போம்

Anonymous said...

எழுதிக்கொள்வது: துளசி கோபால்

பொல்யூஷன் இப்படிக் கூடிக்கிட்டே போனால், முகமூடி போட்டுக்கிட்டுத்தான் நடமாடணும்.
இப்பவே வெறும் ஆட்டொலே போனா தொண்டைக்கு கேடு வந்துருது.

மாசுக் கட்டுப்பாடு வாரியம்னு ஒண்ணு இருக்கு போல?


16.29 12.7.2006

Hariharan # 03985177737685368452 said...

குமார்,

ஏன் நம்ம அரியலூர் அரசு சிமிண்ட் ப்ளாண்ட் கதையும் அதே தான். அந்த ஏரியாவெ ஜிப்ஸம் பொடிக்கு காவு போனது!

வடுவூர் குமார் said...

வாங்க சிவபாலன்
நன்றி.
25 வருடங்களுக்கு முன்பு நடந்தது.
போடுங்க உங்க பதிவையும்.
தெரிந்துகொள்ளலாம்.

வடுவூர் குமார் said...

வாங்க துளசி
நம்மூரில் எல்லாத்துக்கும் ஒரு கழகம் உள்ளது.
அமுல்படுத்த தான் ஆள் இல்லை.
திரு சோ ஒரு முறை எழுதியமாதிரி
"நம்முடைய அடுத்த சந்ததிக்கு எந்த மாதிரி உலகத்தை விட்டு போகிறோம்" என்று யோசித்தால் பயமாக உள்ளது.

வடுவூர் குமார் said...

ஹரி
அரியலூர் போக இதுவரை வாய்ப்பு கிடைக்கவில்லை.
தகவலுக்கு நன்றி

Anonymous said...

எழுதிக்கொள்வது: செந்தழல் ரவி

இதே கதைதான் சாயப்பட்டறைகளும்...நன்றாக சொன்னீங்க...

20.8 12.7.2006