உடல் நலம் முட்டை
அதற்குள் முட்டையில் சைவம்/அசைவம் உள்ளது என்றும்.அதனால் மஞ்சக்கருவை தூக்கிப்போட்டுட்டு வெள்ளையை மட்டும் சாப்பிட்டு பழகு-இப்படி ஒரு பெரியவர் விளக்கம் கொடுத்தார்.
Mess உதவியாளர் அவர் பங்குக்கு "சார் நாட்டுக்கோழி முட்டையில் தான் சத்து அதிகம்,நான் வேண்டுமானால் உங்களுக்காக வாங்கி வைக்கிறேன்" என்றார்.
அப்பாடி எவ்வளவு பேர் உதவி செய்கிறார்கள்??
ஒரே குழப்பம் நான் முட்டை சாப்பிடுவதா கூடாதா?வயதில் மூத்தவர் ஒருவர் அவரிடம் பேசிக்கொண்டு இருக்கும் போது அவரிடம் கேட்டேன் இதே கேள்வியை.அவர் சொன்ன பதிலில் கொஞ்சம் உண்மை இருந்தது போல் இருந்தது.
"இங்க பார், பழைய காலம் போல அல்ல,நீ சாப்பிடுகிற சாப்பாட்டில் அவ்வளவு சத்து இல்லை.அதை சரிப்படுத்த நீ முட்டை சாப்பிட மருத்துவர் சொன்னால் அந்த வழியில் போ.உன்னோட ஆசாரத்தையெல்லம் இப்போது பார்க்காதே.உடம்பு நன்றாக இருந்தால் தான் எதையும் செய்யமுடியும்.அதுவும் கட்டுமான துறை வேலை சற்று உடல் உழைப்பு சார்ந்தது.கொஞ்ச நாட்களுக்கு இந்த எண்ணங்களை தூக்கிப்போட்டு விட்டு உடம்பை தேத்துவதை பாரு இல்லாவிட்டால் திரும்ப ஆஸ்பத்திரி தான் போக வேண்டும்"-என்றார்.
மேலும் "கல்கத்தாவில் பிராமின் என்று சொல்லிக்கொள்கிறவர்கள் மீன் சாப்பிடுகிறார்கள்,நீ என்னடா என்றால் முட்டை சாப்பிடுவதற்கு இவ்வளவு யோசிக்கிறாயா"-என்றார்.
முடிவு செய்து விட்டேன்,முட்டை எடுப்பது என்று.ஒரு நல்ல நாளும் பார்த்துவிட்டாகிவிட்டது.அன்று காலை 5 மணி Mess பையன் நாட்டுகோழி முட்டையை கையில் கொடுத்துவிட்டு ஒரு சிறிய வெல்லக்கட்டியை கையில் வைத்திருந்தான்.முட்டை குடித்தவுடன் வாந்தி வராமல் இருக்க போட்டுக்கொள்ள!!
வாங்கினேன் கையில்,உடைத்த முட்டையில் மேல் வெள்ளை கரு தெரிய உள்ளே மஞ்சள் கரு மிதந்து கொண்டு இருந்தது.ஏதோதோ ஞாபகங்கள் வர,தப்பு பண்ணுகிறோமோ என்ற நினைப்பு வர, ஒரே நிமிடத்தில் முட்டையை அவனிடமே திரும்ப கொடுத்துவிட்டு மெது ஓட்டத்திற்கு கிளம்பிவிட்டேன்.
ஹ¥கும் இது இப்படி முடியவில்லை...
இன்னும் இருக்கு,அடுத்த பதிவில்
4 comments:
ம்ம்ம்ஹூஊஊஊஊஊம்
'இது தேறாத கேஸ்'னுட்டு அந்தப்பைய'னும்' நினைச்சிருப்பான்.:-)))
சரியாகச் சொன்னீங்க துளசி.ஆனால் உள்ளே தூங்கிக் கொண்டிருந்ததோ எப்போது எப்போது என்று காத்துக்கொண்டிருந்தது.
எழுதிக்கொள்வது: செந்தழல் ரவி
முட்டை வெஜ் ஆ நான் வெஜ் ஆ கொஞ்சம் விளக்குங்க...ஏங்க - மாட்டிலிருந்து கிடைக்கும் பாலை குடிக்கிறீங்க - அதில் கண்ணுக்கு தெரியாத எவ்வளவு கிருமிகள் இருக்கு ? ஏன் முட்டை சாப்பிடக்கூடாது...
14.17 20.7.2006
நம் உடம்பிலேயே எவ்வளவு கிருமிகள் உள்ளன?
இந்த குழப்பம் எல்லாம் குடிக்கும் வரைதான்.என்னோட கருத்தை அடுத்த பதிவில் சொல்ல இருக்கேன்.
Post a Comment