Thursday, July 06, 2006

நெட் மீட்டிங்

MSN Messenger உபயோகப்படுத்துவர்களுக்கு இது கட்டாயம் தெரிந்திருக்கும்.வெளிநாடுகளில் உள்ள அனைவருக்கும் மற்றவர்களோடு உரையாடுவதற்கும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொள்வதற்க்கும் ஏற்படுத்தப்பட்ட ஒரு மென்பொருள்.இதே பனிகளை செய்யக்கூடிய மேலும் சில மென்பொருட்கள்
யாகூ மெசேஜர்

  1. அமெடிரிக்கன் ஆன்லயன்:(இதை நான் உபயோகப்படுதியதில்லை)ஐ பால் சாட்.
  2. யாகூ மெசெஜர்: இதில் Video நன்றாக இருக்கும்.பேச்சுக்குரல் மிகச்சுமார் தான்.
  3. ஐ பால் சாட்: இதிலும் Video பரவாயில்லை ஆனால் பேசும் குரல் எப்போதும் ஜலதோஷம் பிடித்தமாதிரி இருக்கிறது.சில சமயம் MSN வேலைசெய்யாது போது அதற்கு தகுந்த மாற்று இது.

WinXP இருப்பவர்களிடம் இந்த நெட் மீட்டிங் தேவைப்படாது ஏனென்றால் மெசெஞ்சர் உள்ளேயே Audio & Video இருக்கிறது.இருந்தாலும் நெட் மீட்டிங்கில் கிடைக்கும் பேச்சுத் தெளிவு இதில் கிடைப்பதில்லை.

ஒரு நாள் எனக்கு தெரிந்தவர் இந்த நெட் மீட்டிங் சாமாச்சாரத்தை முயற்சிக்க எண்ணி, நாங்கள் இருவரும் ஒரு குறிப்பிட்ட நேரத்தில் கணிணியில் இணைந்தோம்.இருவரிடமும் Xp இல்லாததல் மெசெஞ்சர் மூலம் நெட் மீட்டிங் ஆரம்பித்தேன்.

"Hello"

"Hello"

கொஞ்ச நேரத்தில் அவருடைய படம் எனக்கு தெரிய என்னுடைய படமும் அவருக்கு தெரிந்தது.
ஆனால் நான் பேசுவது அவருக்கு கேட்டதே தவிர அவர் பேசுவதை நான் கேட்கமுடியவில்லை.அவருக்கு இந்த "Audio Tuning Wizard" எல்லாம் கொஞ்சம் அலர்ஜி.பலரிடம் இந்த மாதிரி பிரச்சனை வந்து அதனை இணையத்தின் மூலமே சரி செய்த அனுபவத்தில் ஒவ்வொன்றாக சரி பார்க்கச்சொன்னேன்.

எல்லாம் சரியாகத்தான் இருக்கிறது அப்புறம் ஏன் எனது பேச்சு கேட்கவில்லை.
ஒரே ஒரு கேள்வி தான் பாக்கியிருந்தது ஆனால் அதை இது வரை யாரிடமும் கேட்டதில்லை.எப்படி கேட்பது???
ஆபத்துக்கு பாபமில்லை.

"Speaker onல இருக்கா??"

"இரு on பண்ணி பார்க்கிறேன்"--பதில் வந்தது.

5 comments:

விழி said...

குமார் அவர்களே, அருமையான தகவல்கள். நீ்ங்கள் மேற்சொன்ன பயன்பாட்டிற்கு ஒரு முறை skypeஐ பயன்படுத்திப்பாருங்களேன். என்னைப்பொறுத்த வரையில் ஒலி, ஒளி சிறப்பாக உள்ளதுடன் மேலும் பல வசதிகள் காணப்படுகின்றன.

Anonymous said...

எழுதிக்கொள்வது: vaduvurkumar

விழி
பண்ணிப்பார்த்திடலாம்.
நன்றி

16.43 6.7.2006

Anonymous said...

எழுதிக்கொள்வது: nagai siva

Speaker onல இருக்கா??"
"இரு on பண்ணி பார்க்கிறேன்"--பதில் வந்தது.//
:)))))))



15.52 12.7.2006

வடுவூர் குமார் said...

வாங்க சிவா,
இந்த மாதிரி பல விஷயங்களில் நேரிடையாக பார்த்தாலும் எனக்கு என்னவோ இந்த லின்க்குக் போய் பார்க்காமல் இருக்க முடியாது..
வாய்விட்டு சிரித்தால் நோய்விட்டு போகும்.

வடுவூர் குமார் said...

சிரிப்பு