Monday, November 09, 2009

இதுக்கெல்லாம் பயப்படுவோமா?

ஒவ்வொரு வருடமும் மழை

ஒவ்வொரு வருடமும் சாலை போடுவோம்

ஆனால் இதே நிலமை ஒவ்வொரு வருடமும் பல சாலைகளில்.. அதுவும் மாநில தலைநகரில்.







இன்று ஒருவருடன் வெளியில் போன போது (சராசரி குடிமகன்) “ஏங்க இப்படி சாலையில் தண்ணீர் தேங்குகிறது” என்றார்.

சாலை என்றால் வண்டிகள் போவதற்கு மட்டும், அதுவும் மழையில்லாத காலங்களில் என்று இங்கு நினைக்கிறார்களோ என்னவோ! சாலையின் இருமருங்குகளில் அல்லது ஒரு பக்கமாவது தண்ணீர் வடிய சாக்கடை இருக்கனும்.இந்த மாதிரி வடிவமைப்பு சென்னை உட்சாலைகளில் பார்க்கமுடிவதில்லை.பல் மெயின் ரோடுகளிலும் இது இருப்பதில்லை என்பது மற்றொரு கொடுமை அதை நிவர்த்தி பண்ணும் விதமாக சாலை நடுவே ஒரு மூடியுடன் கூடிய பள்ளம் இருக்கிறது இது எதற்கு என்று தெரியவில்லை.இதன் அடியில் இருக்கும் பைப் மூலம் தான் சாலை தண்ணீர் வெளியேற்ற என்றால்...உலகத்துக்கே நாம் தான் முதல் முறையாக(சாலை நடுவில் தண்ணீர் வரவழைத்து) வழிகாட்டுகிறோம்.இந்த சாலை நடுவே உள்ள மூடி சாலையின் மட்டத்துக்கு இல்லாமல் ஒரு 4 முதல் 6 அங்குலம் வரை கீழே வைக்கப்பட்டிருக்கும்.புதிதாக யாராவது இருசக்கர வாகனத்தை ஓட்டினால் அவ்வளவு தான் வண்டியோடு இடுப்பும் போகும்.

ஆமாம் அந்த இரண்டாம் மற்றும் மூன்றாம் படங்களில் சாலை ஓரத்தில் ஏதோ மூடி போட்டு வாய்க்கால் மாதிரி தெரிகிறதே அது என்ன என்று கேட்கிறீர்களா?
அதுவா!! அனேகமாக அது சாலை தண்ணீர் போகவேண்டிய சாக்கடையாகத்தான் இருக்க வேண்டும் ஆனால் அது தான் சாலை மேல் ஒரு அடி இருக்கிறதே தண்ணீர் எப்படி போகும்,அது வேலை செய்தால் இந்த மாதிரி தண்ணீர் எப்படி தேங்கும்?சரி,அது ஒரு பிரச்சனை அதை தீர்க்க சாலையை உயர்த்திவிட்டா போகுது.கடைசியாக அது தான் நடக்கப்போகுது அப்போது பக்கத்தில் உள்ள கட்டிடங்கள் சாலை மட்டத்தில் இருந்து கீழே போய் மழை கால தண்ணீர் அவர்கள் பிரச்சனை என்றாகப்போகிறது.

4 comments:

துளசி கோபால் said...

சாலைக்கு இருபுறமும் தண்ணீர் வடிஞ்சு போக வடிகால் இருக்கணும். அதுலே ப்ளாஸ்டிக் போன்ற குப்பைகள் வந்து அடைச்சுக்காமச் சுத்தம் பண்ணி வச்சுருக்கணும்.

மழை பேயும்போது தண்ணீர் சட்னு அதுவழியா வெளியேறும்விதம் அதைப் பராமரிச்சுச் சுத்தமா வச்சுருந்தா தொல்லையே இல்லை.
ஆனா அதை இங்கெ எதிர்பார்ப்பதுதான் நம் குற்றம்!

வடுவூர் குமார் said...

வாங்க துளசி
சென்னையை முன்னோக்கி கொண்டும் சாலை “பயங்கரமாக” வே இருக்கிறது.
டவுன் பிளானிங் என்ற ஒன்று இல்லாமலே இருந்தால், இப்படித்தான் ஒரு நகரம் இருக்கும் என்பதற்கு சென்னை ஒரு எடுத்துக்காட்டு.

வெங்கட்ராமன் said...


சாலை ஓரத்தில் ஏதோ மூடி போட்டு வாய்க்கால் மாதிரி தெரிகிறதே அது என்ன என்று கேட்கிறீர்களா?
அதுவா!! அனேகமாக அது சாலை தண்ணீர் போகவேண்டிய சாக்கடையாகத்தான் இருக்க வேண்டும் ஆனால் அது தான் சாலை மேல் ஒரு அடி இருக்கிறதே தண்ணீர் எப்படி போகும்,அது வேலை செய்தால் இந்த மாதிரி தண்ணீர் எப்படி தேங்கும்?


தலீவா, நீங்க இன்னும் வளரனும்.
அந்த மூடி கழிவு நீர் போக. மழை வந்தால் தண்ணி அதுக்குள்ள போகாது, அதிலிருந்து வெளிய ரோட்டுல வரும்

வடுவூர் குமார் said...

Venkataraman,I don't think its for sanitary but you may be right too.