Thursday, July 30, 2009

விபத்து ஒரு சாபக்கேடு.

எல்லா துறைகளிலும் விபத்துக்கள் இருந்தாலும் கட்டுமானத்துறையில் விபத்து என்பது அன்றாட நிகழ்வு.எப்போது வேண்டுமானலும் வரலாம்.

சிங்கயில் அதுவும் கட்டுமானத்துறை மற்றும் கப்பல் கட்டும் துறையில் விபத்துகளும் போட்டி போட்டுக்கொண்டு இருக்கும்.அதை எப்படியெல்லாம் குறைப்பது என்று நிஜ அக்கறையுடன் இங்குள்ள தொழிலாலர் அமைச்சு மற்றும் பல அமைச்சுகளும் சேர்ந்து அக்கு வேறு ஆணி வேறாக யோசித்து பலவற்றை செய்தார்கள்.வரிசைப்படுத்தி பார்ப்போமா..
1.முக்கியமாக வேலைக்கு வரும் தொழிலாளிக்கு அந்தந்த நாடுகளின் துணையுடன் அவர்களுக்கு குறிப்பிட்ட வேலைக்கு என்று பிரித்து Training கொடுத்தார்கள்.
2.PPE என்று சொல்லக்கூடிய Personal Protective Equipment ஐ ஆதாவது முக்கியமாக ஹெல்மெட்,ஷூ மற்றும் பாதுகாப்பு பட்டை/வார்.இதைத்தவிர குறிப்பிட்ட வேலைக்கு தேவையான மூக்குக் கண்ணாடி,Nose Flter என்று பல சாதனங்களை கொடுப்பது அத்தியாவசிமாக்கியது.
3.வேலை செய்யும் இடத்துக்கு போய் வர சரியான படிகள்/ஏணிகள்.
4.சரியான தகுதியுடன் வேலை செய்யும் கிரேன் ஓட்டுனர் மட்டும் அவர்களுக்கு உரிய தகவல்களை கொடுப்பவர்களுக்க்கு தேவையான தகுதி என்று பல அடுக்கு ஆட்களை நிறுவியது.
5.மிக முக்கியமாக ஒப்பந்தக்காரர்களை, ஏற்படும் விபத்துக்கு Responsibility யாக்கியது.
6.எல்லாவற்றையும் விட வேலை செய்யும் இடம் பாதுகாப்பாக இல்லாமல் இருந்தால் அமைச்சுக்கு இலவசமாக தொலைப்பேசி தொடர்பு ஏற்படுத்தி,யார் வேண்டுமானாலும் தகவல் சொல்லலாம் என்ற நிலையை ஏற்படுத்தியது.

இதோடு நில்லாமல் தொழிலாளர்கள் கூடும் பொது இடத்தில் கீழ்கண்டவாறு சுவரொட்டிகளை ஒட்டி வேலைக்கு வந்த நம்மை பத்திரமாக திருப்பி அனுப்ப எடுக்கும் நடவடிக்கைகளை எடுக்கும் இந் நாட்டு மக்களை/அரசாங்கத்தை எப்படி பாராட்டுவது என்றே தெரியவில்லை.





இவ்வளவு செய்தும் இதுவரை மனித இழப்பு இல்லாத சூதாட்ட விடுதி கட்டுமான வேலையில் போனவாரம் ஒருவர் உயிரிழுந்தது மிகுந்த கவலையை ஏற்படுத்துகிறது.

2 comments:

கிரி said...

உங்க பின்னூட்ட பெட்டி வசதியாக இல்லை

முடிந்தால் வேறு டெம்ப்ளேட் மாற்றுங்களேன்

வடுவூர் குமார் said...

அப்படியா!!
முயற்சிக்கிறேன்.நன்றி.