சிங்கை நூலக மாற்றங்களை பற்றி சொல்லனும் என்றால் சொல்லிக்கொண்டே போகலாம்.நான் வந்த 1995 வருடங்களில் சில நூலகங்களே இருந்தது.எனக்கு வேலை அதிகம் என்பதால் அப்போது அந்த பக்கமே போக முடியாமல் இருந்தது.என் மனைவி வந்ததும் நாங்கள் இருந்த இடத்துக்கு பக்கத்தில் நூலகம் இருந்ததால் அவரது நண்பி மூலம் அட்டை வாங்கி எனக்கும் வாங்கிக்கொடுத்தார்கள்.அபோதெல்லாம் ஒருவருடைய அடையாள அட்டையை காண்பித்தால் போதும் உருப்பினர் அட்டை கொடுத்து வந்தார்கள். அந்த கால கட்டத்தில் ஒரு உருப்பினருக்கு 2 புத்தகங்கள் தான் அதுவும் ஒரு வாரத்தில் கொடுத்துவிடவேண்டும்.எங்களுக்கு கிடைக்கும் 4 புத்தகங்கள் அவரின் வீட்டுத்தனிமையை போக்கியது.அதன் பிறகு மகனுக்கும் உருப்பினர் அட்டை கிடைத்தது அதன் மூலம் மேலும் இரண்டு புத்தகங்கள் வந்தது.இவ்வளவையும் ஒரு வாரத்தில் முடிப்பது கொஞ்சம் கஷ்டமாக இருந்தது.
சிங்கையில் சில நூலகங்களே இருந்ததால் நாங்கள் வீடு வாங்கி போன ஈஷூன் வட்டாரத்தில் அப்போது நூலகம் இல்லாமல் இருந்தது கொஞ்ச நாட்களுக்கு கொடுமையாக இருந்தது.இதற்கிடையில் ஒரு உருப்பினருக்கு இரண்டு புத்தகம் என்பதில் இருந்து நான்கு புத்தகமானது. அதே சமயம் ஈஷீன் வட்டாரத்தில் புதிய நூலகம் திறந்தார்கள் அதுவும் முதல் மாடியில்.படிகள் மூலமே மேலே போகனும் லிப்ட் வசதி இருந்தால் உடற்குறை உள்ளவர்கள் கூட வர ஏதுவாக இருந்திருக்கும்,ஏனோ அதை திட்டமிடவில்லை. சில சமயம் என் மகன் 8/10 வின்வெளி புத்தகங்களாக எடுத்துவந்துவிடுவான்.அந்த காலத்தில் அதன் மீது மோகம் அதிகமாக இருந்தது.
நான் துபாய் போவதற்கு முன்பு வரை (8 மாதங்களுக்கு முன்பு) நான்கு புத்தகங்கள் மட்டுமே எடுக்கமுடியும்.துபாயில் இருந்து திரும்பி வந்த பிறகு நூலகம் போனால் உறுப்பினர்களுக்கு நான்கு புத்தகங்கள் கூட இரண்டு சிடி யும் கொடுக்கப்படும் என்று போட்டிருந்தார்கள்.ஆச்சரியாக இருந்தது.
வட்டு கிடைக்குது என்றவுடன் அந்த பக்கத்தில் ஏதாவது உபயோகமாக கிடைக்குது என்று மேய்ந்துகொண்டிருக்கும் போது இந்த வட்டு கிடைத்தது.ஆதாவது கணினி மொழியான “C" சொல்லிக்கொடுப்பது பற்றி அதுவும் தமிழில் என்று போட்டிருந்தது.இந்நேரத்தில் C யா? படிச்சி என்ன செய்யப்போகிறோம்? என்ற பலவித எண்ணங்களுக்கிடையே எடுத்துவந்தேன்.18 மணி நேர DVD வட்டு என்று பார்த்தவுடன் கொஞ்சம் அயர்சியாக இருந்தது.பார்க்க ஆரம்பித்தவுடன் தினமும் 1 மணி நேரம் அதற்கு ஒதுக்கவேண்டிய கட்டாயமாகி விட்டது.
மதுரையை சேர்ந்தவர்கள் இந்த வட்டை ரூபாய் 390 க்கு வெளிட்டுள்ளார்கள்.மதுரை தமிழுடன் கூடிய ஆங்கில வார்த்தைகள் இடையே வந்தாலும் முழுவதும் தமிழில் படிப்பதாக எனக்கு தோன்றியது.அருமையான விளக்கங்களுடன் சொல்லியுள்ளார்கள்.390 ரூபாய் கண்ணை மூடிக்கொண்டு கொடுக்கலாம்.என்னை மாதிரி அல்லது புதிதாக கற்றுக்கொள்ளும் ஆர்வலர்களுக்கு இந்த வட்டு மிக மிக அத்தியாவசியமானது.
இந்த கணினி மொழியை கற்றுக்கொள்ளும் ஆர்வம் அவ்வப்போது வந்து போனாலும் இம்முறையே ஓரளவு கற்றுக்கொண்டதாகவே நினைக்கிறேன்.இவை அத்தனையும் தினசரி வேலையில் இருந்தால் மட்டுமே ஞாபகத்தில் இருக்கும் என்று தோனுகிறது.சிங்கையில் இருப்பவர்கள் மற்றும் ஆர்வலர்கள் கட்டாயம் பார்க்கவும்.
4 comments:
ஸி ப்ரோக்ராமிங்க் ஸ்கில்ஸ் நான் 1996 வாக்கில் நானே முட்டி மோதி அறிந்து கொண்டேன்.
முக்கியமாக அந்த 32 கமான்ட்ஸ்.
யூனிக்ஸ் என்விரோன்மென்டில்.
துவக்கத்தில் ஒரு சிறிய ப்ரோக்ராம் எழுதி அதை ரன் செய்ததில், 3200 வார்னிங்க்ஸ், 500 எர்ரரஸ்
என வந்ததும், அந்த வார்னிங் என்ற சொல்லைப் பார்த்து நான் அரண்டு போனதும் நினைவுக்கு
வருகிறது. ஒரு ஃபுல் ஸ்டாப், அந்த லாங்குவேஜில் ஒரு பீரியட் விட்டுப்போயிருந்தது.
அதைச் சரி செய்ததும் திரும்ப கம்பைல் செய்தபொழுது, 18 வார்னிங்க்ஸ் 3 எர்ரரரஸ் என்று
வந்தபொழுது தான் மூச்சு விட்டேன்.
ஒரு நாலைந்து மாதங்களில் பல புதிய புரோக்ராம்கள் எழுதும் நேரமும் வாய்ப்பும் கிடைத்தன, அவை
வகுப்பில் மற்ற பாடங்கள் நான் இல்லாதபொழுதும் என் சார்பில் அவை மானிடரில் ஓடி, மாணவருக்கு
உதவியாக இருந்தன் என்றாலும், நான் துவக்கத்தில் பட்ட தொல்லை இன்னும் நினைவில் இருக்கிறது.
ஸி ப்ள்ஸ் ப்ள்ஸ் அவ்வளவு யூஸர் ஃப்ரென்ட்லி இல்லை.
இப்போழுது இவையெல்லாமே அவுட் ஆஃப் டேட். அப்படியென்று என் மகனிடம் சொன்னேன்.
பக்கத்தில் இருந்த எனது பேரன், தாத்தா நீயுமே அவுட் ஆஃப் டேட் என்றான்.
சுப்பு ரத்தினம்..
வாங்க சூரி சார்.என்னது நீங்க C கத்துக்கிட்டீங்களா? அதிசியமாக இருக்கு.
என்னுடைய பிரச்சனையே அதை உபயோகப்படுத்த முடியாததே.ஆனாலும் அவ்வப்போது எதையோ நினைத்து என்னவோ எழுதி ஞாபகத்தில் வைத்துக்கொள்ள முயற்சிப்பேன்.
தங்களுக்கு எந்த லெவலில் பாடங்கள் மேற்கொண்டு தேவைப்படுமென எனக்குத் தெரியவில்லை.
என்னிடம் பல புத்தகங்கள் ஒவ்வொன்றும் ஒரு ஐ நூறு பக்கம்.
இருக்கின்றன.
சென்னை வரும்பொழுது சொல்லுங்கள். தருகிறேன்.
ஒரு கம்பைலர் ஒன்றினை கணினியில் யூனிக்ஸில் அல்லது லைனக்ஸில் பொருத்திக்கொள்ளுங்கள்.
தற்பொழுதெல்லாம் ஆன் லைனிலெ உதவி கிடைக்கிறது. இருப்பினும் அதனுடைய க்ரெடிபிலிடி
லெவெல் தெரியவில்லை.
சுப்பு ரத்தினம்..
மிக்க நன்றி சூரி சார்.
கணினி மொழியில் நான் எவ்வளவு தூரம் போகமுடியும் என்பது தெரியவில்லை என்பதாலே அவ்வப்போது ஊருகாய் மாதிரி தொட்டுக்கொள்கிறேன்.
அவசியம் ஏற்படும் பட்சத்தில் தொடர்பு கொள்கிறேன்.
Post a Comment