Friday, July 24, 2009

தனித்து ஆடுவது ஏன்?

அன்று ஒரு நாள் அலுவலகம் முடித்து வீட்டுக்கு திரும்பும் நேரத்தில் ஒரு அரச மரத்தை தற்செயலாக காண நேரிட்டது அதில் ஒரு சில இடங்களில் உள்ள இலை மட்டும் ஆடிக்கொண்டிருந்தது. காற்றென்னவோ அவ்வளவாக இல்லாத நேரத்தில் அதெப்படி ஒரிரு இலைகள் மட்டும் ஆடுகின்றன என்ற கேள்வி என்னுள் எழுந்தது.கேள்விக்கு பதில் தேடும் நேரத்தில் அதை நகர் படமாக பிடிக்கும் எண்ணம் ஏற்படவில்லை.கேள்விக்கான பதில் இன்னும் கிடைக்கவில்லை.தெரிந்தவர்கள் சொல்லுங்கள்.

தினமும் வேலை முடிந்து வந்த பிறகு சுமார் 45 நிமிடம் நடை பயிற்சி என்று வகுத்துக்கொண்டு போய் வருகிறேன்.நேற்று அப்படி போகும் போது என்னை கடந்து ஒருவர் இப்படி போனார்.சட்டை போட மறந்துவிட்டாரோ என்னவோ!! இதெல்லாம் இங்கு அதிசியம் இல்லை என்றாலும் வித்தியாசமாக இருக்கட்டுமே என்று பிடித்துவைத்துக்கொண்டேன்.

From கட்டுமானத்துறை


இன்று நடை பயிற்சி போகும் போது சட்டென்று கண்ணில் பட்டவும் பிடித்துவிட்டேன்.இதிலும் பாருங்கள் ஒரு இலை மட்டுமே ஆடுது.இதற்கென்ன காரணம்?

4 comments:

கோவி.கண்ணன் said...

அண்ணே,

நம்ம ஊராக இருந்தால் அங்கே இன்னேரம் உண்டியல் வந்திருக்கும், பக்தர்கள் கூட்டம் அலைமோதும்

:)

வடுவூர் குமார் said...

வாங்க கோவியாரே
பயஙகர பிசினஸ் ஐடியாகவே இருக்கே!!

கிஷோர் said...

கோவி அண்ணே சொன்னது கரெக்ட்தான்.
:)

வடுவூர் குமார் said...

வாங்க கிஷோர்
அப்ப ஐடியாவை செயல்படுத்திவிட வேண்டியதுதான்.:-)