என்ன ஆச்சு என்று தெரியவில்லை இந்த பயர்பாக்ஸுக்கு.. கீழே உள்ள படத்தில் பாருங்க,படம் மற்றும் நகர் படம் ஏற்ற தொடுப்புக்கே வழியில்லாமல் இருக்கு.
எனக்கு ஞாபகம் இருந்த வரையில் வெர்ஷன் 3.5 யில் இருந்து 3.5.1 மாற்றிய போது தான் இந்த மாதிரி ஆகியிருக்கோமோ என்று தோன்றுகிறது.உங்களில் யாராவது இம்மாதிரி பிரச்சனையை உணர்ந்திருக்கிறீர்களா?
இப்போது நம்ம IE வை பார்ப்போமா?
படம் ஏற்ற வழியிருந்தாலும் ஏற்றும் போது ஏதோ பிழைச்செய்தி காண்பிக்கிறது ஆனால் படத்தை ஏற்றிவிடுகிறது.
கூகிளில் அலசியவரை குக்கிஸை நீக்கச்சொல்லி தான் போட்டிருக்கு,வழி தெரிந்தவர்கள் சொல்லவும்.ஃப்யர் பாக்ஸை நீக்கி பிறகு புதிதாக நிறுவியும் பார்த்துவிட்டேன் ,பிரயோஜனம் இல்லை.
9 comments:
அச்சச்சோ............
எனக்கு ஒன்னும் பிரச்சனை இதுவரை இல்லை.
ஆனால் நம்மது 3.5
பார்த்துங்க துளசி 3.5.1 நிறுவாதிங்க அது தான் இப்பிரச்சனைக்கு காரணம் என்று நினைக்கிறேன்.
எனக்கு ஒண்ணும் பிரச்சினை இல்லையே :(
சாஃப்ட்வேர் டெஸ்டிங் பண்ணும்போது சில bug வந்தா டெவெலப்பர், “works for me” அப்படினு சொல்லுவார். அது மாதிரியில்ல இருக்கு
எனக்கு மட்டும் தான் பிரச்சனை போல் இருக்கு கிஷோர்.பார்ப்போம் தன்னால் சரியாகி போகிறதா என்று.
FireFox இப்போ எல்லாம் அப்போ அப்போ சொதப்புது. Google Chrome முயற்சி செய்து பாருங்களேன்...
சிவா இந்த பிரச்சனை சிங்கையில் உள்ளோருக்கும் மட்டுமே என்று தேடுதலில் தெரிகிறது.சமீபத்தில் என் வீட்டில் மோடமை மாற்றினார்கள் அதன் மூலம் ஏதோ செட்டிங் மாறிவிட்டது.இல்லாவிட்டால் குரோமுக்கு மாறிட வேண்டியது தான்.
அப்பாடி யாரோ ஒரு புண்ணியவான் வழி சொல்லியிருக்கார்.
ctrl பட்டனை அழுத்திக்கொண்டு F5 பட்டனை அழுத்துக்க சரியாகிவிடும்.இப்பிரச்சனை singtel உபயோகிப்பாளருக்கு மட்டும் உள்ள பிரச்சனை.
எனக்கும் சில நாள்களுக்கு
முன் இதே சிக்கல் இருந்தது
இப்பொழுது சரியாகிவிட்டது.
வாங்க திகழ்மிளிர்
ctrl ஐ அழுத்துக்கொண்டு F5 பட்டனை அழுத்துங்கள் சரியாகிவிடும்.
Post a Comment